முருக பக்தர்கள் தைப்பூசத்திற்காக 48 நாட்கள் முருகனுக்காக மாலை போட்டு விரதம் இருப்பார்கள் 48 நாட்கள் எங்களால் விரதம் இருக்க முடியாது என்பவர்கள் 21 நாட்கள் முருகனுக்கு மாலை போட்டு விரதம் இருக்கக் கூடிய வழக்கமும் உள்ளது. மாலை போட்டு விரதம் இருக்க முடியாது என்பவர்கள் தைப்பூசத்திற்கு முருகனுக்காக விரதம் இருக்கலாம். மாலை மட்டும் தான் போடப்போவது கிடையாது மற்றபடி இறைவனின் பாடல்களை பாடி அந்த முருகனின் நாமத்தை மனதிற்குள் சொல்லிக் கொண்டே தைப்பூச விரதத்தை மேற்கொண்டாலும் முருகனின் அருள் நமக்கு நிச்சயமாக கிடைக்கும். 21 நாட்கள் தைப்பூசத்திற்கு விரதம் இருக்கும் முறையை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

தைப்பூசத்திற்கு விரதம் இருக்கும் முறை
தைப்பூசத்திற்கு 21 நாட்கள் விரதம் இருக்க வேண்டும் என்றால் ஜனவரி மாதம் 21ம் தேதி முதல் பிப்ரவரி 11ஆம் தேதி வரை விரதம் இருக்க வேண்டும். மாலை போடாமல் விரதம் இருந்தால் அன்றாட வேலைகளை செய்து கொண்டு செருப்பு அணிந்து கொள்ளலாம். முடி வெட்டிக் கொள்ளலாம் நகம் வெட்டலாம் இறப்பு வீட்டிற்கு செல்லலாம் பெண்களுக்கு மாதவிடாய் வந்தால் கூட எந்த பிரச்சினையும் கிடையாது ஆனால் மாலை போட்டு விரதம் இருப்பவர்கள் ஒரு சில விஷயங்களை கடைப்பிடிக்க வேண்டும்.
மாலை போடாமல் விரதம் இருப்பவர்கள் கடைபிடிக்க வேண்டியது
மாலை போடாமல் விரதம் இருப்பதாக இருந்தால் காலை 6:00 மணிக்கு முன்பாகவே முருக பெருமான் திருவுருவப்படத்திற்கு விளக்கு ஏற்றி வைத்து முருகனுக்கு உகந்த பாடலை பாட வேண்டும் பாடலை முழுவதுமாக படிக்க முடியவில்லை என்றாலும் நான்கு வரி பாடலாவது படிக்க வேண்டும் திருப்புகழ் கந்த சஷ்டி கவசம் கந்தர் அலங்காரம் வேல்மாறல் போன்றவற்றை படிக்க வேண்டும்.
மாலை நேரத்திலும் அதேபோல் 6 மணிக்கு மேலாக முருகனின் திரு உருவப் படத்திற்கு முன்பாக விளக்கு ஏற்றி வைத்துவிட்டு முருகனுக்கு உகந்த பாடலை பாட வேண்டும் எதுவுமே சொல்ல முடியவில்லை என்றாலும் 27 முறை ஓம் சரவணபவ என்ற மந்திரத்தை சொல்லி முருகனை நினைத்து விரதம் இருக்கலாம். விரதம் இருக்கக்கூடிய நாட்கள் முழுவதும் அசைவம் சாப்பிடக்கூடாது
விரதத்தை தொடங்க வேண்டிய நாள்
மற்றவர்களை மனம் நோகும்படி பேசக்கூடாது யாருக்கும் கெடுதல் நினைக்க கூடாது கோபப்படக்கூடாது அமைதியாக வேலை செய்யக்கூடிய நேரம் போக மீதியுள்ள நேரம் எல்லாம் முருகனின் நினைவோடு இந்த நாட்களை கழிக்க வேண்டும். 21ஆம் தேதி ஜனவரி மாதம் செவ்வாய்க்கிழமையிலிருந்து இந்த விரதத்தை துவங்க வேண்டும். அனைத்து விஷயங்களையும் பின்பற்றி இந்த விரதத்தை பின்பற்றினாலே தைப்பூச விரதம் நன்றாக நிறைவேறும்.
தைப்பூசம் விரதத்தினால் கிடைக்கும் நன்மைகள்
தைப்பூச விரதம் இருந்த அடுத்த 60 நாட்களுக்குள் நீங்கள் வேண்டிய வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேறும் நாம் நம்பிக்கையோடு ஒரு சில விஷயங்களை செய்தால் அது நிச்சயமாக நிறைவேறும். முருகனை நம்பி விரதம் இருந்தால் நிச்சயமாக ஆத்மார்த்தமாக பெய்தவர்கள் அனைத்தும் நிறைவேறும். முருகனுக்கு இந்த விரதத்தை இருக்க துவங்குங்கள் விரதத்தில் எந்த தடையும் வராமல் விடுதலை எந்த குறையும் இல்லாமல் விரதத்தை நிறைவேற்ற வேண்டும் என்று மனதாலும் முருகனிடம் வேண்டிக்கொண்டு விரதம் இருக்க தொடங்குங்கள். தைப்பூசத்தன்று வீட்டுக்கு அருகில் உள்ள முருகன் கோவிலுக்கு சென்று விரதத்தை நிறைவு செய்து கொள்ளலாம் அல்லது முருகனுடைய ஆறுபடை வீடுகளில் ஏதாவது ஒரு வீட்டிற்கு செல்லலாம்.
இதனையும் படியுங்கள் : கேட்ட வரம் முருகப்பெருமானை நினைத்து 48 நாட்கள் விரதம் இருந்து வழிபட்டுக் கொண்டால் பிரச்சனைகள் அனைத்தும் சரியாகிவிடும்!


