ஜோதிடத்தின்படி, ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்கள் ராசியை மாற்றுகின்றனர். இந்த நேரத்தில் சில மங்களகரமான யோகங்களும் உருவாகிறது. இந்த யோகங்களால் 12 ராசிகளக்கு நேர்மறையான ஆற்றலை கொடுக்கும். குறிப்பாக, செல்வம், புகழ் உங்களை தேடி வரும். அந்த வகையில் தற்போது கும்ப ராசியில் சஞ்சரிக்கும் ராகுவை, மிதுன ராசியில் உள்ள குரு பார்க்கிறார். இது ஜூன் 3 வரை தொடரும். மிகவும் அசுப கிரகமான ராகுவை குரு பார்ப்பது, சில ராசிகளுக்கு மிகவும் சுபமான பலன்களைத் தரும். இந்த கிரகங்களின் மாற்றத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிகள் யார் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
மேஷம்

இந்த ராசியின் சுப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராகு, குருவால் பார்க்கப்படுகிறது. இது இந்த ராசிக்காரர்களுக்கு உயர்கல்வி, நவீன திறன்கள், தொழில் மற்றும் வேலைகளுக்காக வெளிநாடு செல்லும் வாய்ப்பை வழங்குகிறது. தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும். பணியாளர்கள் மற்றும் வேலையில்லாதவர்களுக்கு வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் கிடைக்கும். பணியில் இருப்பவர்கள் தொழிலில் ஈடுபடுவார்கள். இந்த காலத்தில் நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். நிதி நிலைமை இருமடங்கு உயரும். வாழ்க்கை செழிப்பாக இருக்கும்.
ரிஷபம்

பத்தாம் வீட்டில் உள்ள ராகுவைப் பார்க்கும் குரு, இந்த ராசிக்கு வெளிநாட்டு வருமானத்தைக் கொண்டு வருவார். வெளிநாட்டு வாய்ப்புகள் கிடைக்கும். இந்த ராசியைச் சேர்ந்த ஊழியர்களுக்கும் வேலையில்லாதவர்களுக்கும் வெளிநாட்டு வாய்ப்புகள் கிடைக்கும். திடீர் நிதி ஆதாயம் ஏற்பட வாய்ப்புள்ளது. எந்தவொரு நிதி முயற்சியும் வெற்றி பெறும். உங்களின் நிதி நிலைமை மேம்டும். புதிய தொழில் தொடங்க வாய்ப்புள்ளது. வருமானம் உயரக் கூடும். நினைத்த காரியங்கள் நிறைவேறும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். உறவினர்களிடையே இருந்த பிரச்சனைகள் தீரும்.
மிதுனம்

இந்த ராசியில் சஞ்சரிக்கும் ராகு, குரு பாக்கிய நிலையில் இருப்பதால், நிச்சயமாக வெளிநாட்டுப் பயணமும் வெளிநாட்டு வருமானமும் கிடைக்கும். உங்கள் வேலையில் பதவி உயர்வுகள் கிடைக்கும். உயர் பதவியில் உள்ளவர்களுடன் நீங்கள் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்வீர்கள். உங்கள் வேலையில் அதிகாரம் கிடைக்க நல்ல வாய்ப்பு உள்ளது. கடன் தொல்லைகள் நீங்கும். நிதி நிலைமை மேம்படும். தொழிலில் அசுர வளர்ச்சி அடைவீர்கள். நல்ல வரன் அமைய வாய்ப்புள்ளது. திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்.
துலாம்

ஐந்தாம் வீட்டில் உள்ள ராகுவை சுப வீட்டில் உள்ள குரு பார்ப்பதால், இந்த ராசிக்காரர்களுக்கு குறைந்த முயற்சியிலேயே வெளிநாட்டு வேலை கிடைக்க வாய்ப்புள்ளது. திருமண முயற்சிகளின் போது வெளிநாட்டு உறவு ஏற்படுவதற்கும் வாய்ப்புள்ளது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் பெரும் செல்வந்தர்களாக ஆக வாய்ப்புள்ளது. நீண்ட கால கனவுகள் நிறைவேறும். நகை, வாகனம் வாங்கும் யோகம் உருவாகும். நினைத்த காரியங்கள் அனைத்தும் வெற்றியில் முடியும். பண வரவு சிறப்பாக இருக்கும். கடன் தொல்லைகள் நீங்கும். திருமண தடைகள் நீங்கும்.
தனுசு

மூன்றாம் இடத்தில் உள்ள ராகுவை, ஏழாம் இடத்திலிருந்து ராசிபலன் குரு பார்க்கிறார். இதன் பொருள், உயர்கல்வி மற்றும் உயர்நிலை பயிற்சிக்காக வெளிநாடு செல்வதாகும். நிதிப் பரிவர்த்தனைகள், ஊக வணிகம், பங்குகள் போன்றவை பெரும் லாபத்தைக் கொண்டுவரும். நிதி விவகாரங்களில் சுபமான முன்னேற்றங்கள் ஏற்படும். வருமானத்தை அதிகரிக்க புதிய முயற்சிகள் மேற்கொள்வீர்கள். சொத்துக்கள் சேரும். நினைத்த காரியங்களை வெற்றிகரமாக முடிப்பீர்கள். பணியிடத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். பணியிடத்தில் பாராட்டுகளை பெறுவீர்கள்.
மீனம்

இந்த ராசியின் அதிபதியான குரு, நான்காம் வீட்டில் இருந்து செலவு ஸ்தானத்தில் உள்ள ராகுவைப் பார்ப்பதால், இந்த ராசிக்காரர்கள் தொழில் மற்றும் வேலை விஷயத்தில் நிச்சயமாக வெளிநாடுகளில் குடியேறுவார்கள். வருமானம் பல வழிகளில் கணிசமாக அதிகரிக்கும் மற்றும் நிதிப் பிரச்சனைகள் தீர்க்கப்படும். வாழ்க்கைத் துணையின் பக்கத்திலிருந்தும் செல்வம் வரும். சொத்து விஷயங்களில் உங்களுக்கு சாதகமான முடிவுகள் இருக்கும். பணியிடத்தில் புதிய பொறுப்புகள் இருக்கும். நினைத்த காரியங்களை வெற்றிகரமாக முடிப்பீர்கள். தொழிலில் அசுர வளர்ச்சி அடைவீர்கள்.
இதனையும் படியுங்கள் : புதன் பெயர்ச்சி பலன்கள் 2026!!


