ஜோதிட சாஸ்திரத்தின் படி புத்தாண்டில் தொடக்கத்தில் கிரகங்களின் நிலை 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். குருபகவானும் சில முக்கிய ஜோதிடம் மாற்றங்களை அடையப் போகிறார். குருபகவான் அக்டோபர் 9 தேதி 2024 ஆம் ஆண்டு ரிஷப ராசியில் வக்ர பெயர்ச்சி அடைந்தார். மேலும் பிப்ரவரி 5 2025 வரையில் அதே நிலையில் இருப்பார் அதன் பிறகு தான் வக்ர நிவர்த்தி அடைவார் இதனுடைய தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் இருக்கும். மேலும் மே 2025ல் நடக்க போகும் குரு பெயர்ச்சியின் தாக்கமும் அனைத்து ராசிகளுக்கும் இருக்கும் இதனால் ஒரு சில ராசிகளுக்கு அதிர்ஷ்டம் ராஜயோகம் கிடைக்கும் அவர்களை பற்றி பார்க்கலாம்.
மேஷ ராசி

மேஷ ராசிக்காரர்களுக்கு குரு பகவானின் வக்ர நிவர்த்தியும் குரு பெயர்ச்சியும் பயனுள்ளதாகவே அமையும். ஊடகம் எழுத்து சார்ந்த துறையில் இருப்பவர்களுக்கு அருமையான நேரம் வேலை தேடிக் கொண்டிருந்தால் வேலை கிடைக்கும் புதிய பணவரவு கிடைக்கும். நல்ல வேளையில் இருந்தால் அதில் பொருளாதார நிலை வலுவாக இருக்கும் பதிவு ஏறுவோம் சம்பள உயர்வும் கிடைக்கும் முதலீடுகள் மூலம் நல்ல லாபத்தை பெறலாம் கடின உழைப்புக்கு ஏற்ற பாராட்டும் ஊதியமும் கிடைக்கும். குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் நிலவும்.
ரிஷப ராசி

ரிஷப ராசிக்காரர்களுக்கு குருவக்ர நிவர்த்தியால் சுபயோகம் ஏற்படும். எனவே பல துறைகளில் வெற்றி பெற வாய்ப்புள்ளது. புதிய நபர்களை சந்திக்கும் வாய்ப்புகளும் கிடைக்கும். சமூகத்தில் மரியாதை மதிப்பு அதிகரித்து குடும்பத்திலும் மகிழ்ச்சியும் அமைதியும் கிடைக்கும். வாழ்க்கைத் துணைக்கின் முழு ஆதரவையும் பெற்று உறவை வலுப்படுத்துவீர்கள்.
கடக ராசி

கடக ராசிக்காரர்களுக்கு குரு வக்ர நிவர்த்தி சாதகமாக இருக்கும் வருமானம் அதிகரிக்கும் வேலை பார்க்கக் கூடிய இடத்தில் சம்பள உயர்வு பாராட்டு மரியாதை சக ஊழியர்கள் மூத்த அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும் மேலும் நீங்கள் செய்யும் முதலீட்டிலும் நல்ல லாபம் கிடைக்கும் பங்குச்சந்தையில் இருந்தால் அதிலும் நல்ல லாபம் கிடைக்கும்.
தனுசு ராசி

தனுசு ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சியால் சாதகமான பலன்கள் நிறைய கிடைக்கும் உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். பொருளாதார நிலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும் பண வரவும் அதிகமாகவே கிடைக்கும். நீண்ட நாட்களாக தடைபட்டு வந்த அனைத்து காரியங்களும் சுலபமாக முடிவடையும். எனவே சற்று பொறுமையாக அனைத்திலும் கையாள வேண்டும்
குரு பகவானின் பரிபூரண அருளை பெறுவதற்கு குரு பகவானின் மந்திரத்தை கூற வேண்டும்.
இதனையும் படியுங்கள் : ராகு கேது பெயர்ச்சியால் 2025ல் செல்வ செழிப்போடு வாழப்போகும் ராசிகள்!


