ஜோதிட சாஸ்திரத்தின் படி நவகிரகங்கள் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களது ராசி மற்றும் நட்சத்திர இடமாற்றத்தை செய்வார்கள் அது மனித வாழ்க்கையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். கிரகங்களின் இடமாற்றம் நிகழும் பொழுது ஒரு கிரகம் மற்றொரு கிரகத்தோடு இணையக்கூடிய சூழ்நிலை ஏற்படும். அதனால் சக்தி வாய்ந்த யோகங்கள் உருவாகும். ஞானம் மற்றும் செல்வத்தின் கிரகமான புதன், ஜூன் 6 அன்று ரிஷப ராசியிலிருந்து மிதுன ராசிக்கு பெயர்ச்சி அடைந்து விட்டார். மே 14 அன்று, குரு ரிஷப ராசியிலிருந்து வெளியேறி மிதுன ராசிக்குள் பெயர்ச்சி அடைந்தார். அந்த வகையில் வரும் ஜூன் 15 ஆம் தேதி, மிதுன ராசியில் சூரியன் பெயர்ச்சி அடையப் போவதால், இந்த ராசியில் திரிகிரகி யோகம் உருவாகும், இதனால் சில ராசிகளில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். சுமார் 12 ஆண்டுகளுக்குப் பிறகு சூரியனும் குருவும் மிதுன ராசியில் இணையப் போகிறார்கள். இந்த திரிகிரஹ யோகத்தால் எந்த ராசிக்காரர்கள் பயனடையப் போகிறார்கள் என்பதை பற்றி இந்த ஆன்மிகப் பதிவில் பார்ப்போம்.
ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்கள் மூதாதையர் சொத்துக்களின் மகிழ்ச்சியைப் பெறுவார்கள், இதனுடன் நீங்கள் மன அமைதியைப் பெறுவீர்கள், நிதி நிலையும் வலுவடையும். இந்த காலத்தில் சிறந்து விளங்குவதற்கான வாய்ப்பு அதிகம். தொழில்முனைவோர் தங்கள் பேச்சு திறமையால் புதிய ஒப்பந்தங்களை பெறுவார்கள். பணியிடத்தில் பதவி உயர்வுக்கான வாய்ப்புகளைப் பெறக்கூடும். வாகனம் அல்லது சொத்து வாங்கலாம். வியாபாரத்தில் திடீர் லாபம் கிடைக்கலாம். அந்தஸ்தும் கௌரவமும் உயரக்கூடும். உங்களுடைய வாழ்க்கைத்துணை உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.
மிதுனம்

மிதுன ராசியில் திரிகிரகி யோகம் உருவாகுவதால், நன்மைகளைத் தரும். வாழ்க்கையில் வெற்றியைப் பெற முடியும். மூதாதையர் சொத்துக்களை அனுபவிக்க முடியும். வருமானத்தை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். பணியிடத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். பொருளாதார நிலை மேம்படும். பணியிடத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும், பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வுக்கான வாய்ப்புகளும் தேடி வரும். பெற்றோருடனான உறவுகள் வலுவடையும், குடும்பத்தில் அமைதி நிலவும். மன அழுத்தம் குறையும்.
துலாம்

உங்கள் தந்தையின் முழு ஆதரவு உங்களுக்குக் கிடைக்கும், அதிர்ஷ்டமும் பெறலாம். பல ஆன்மீக பயணங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும். சொந்த தொழில் செய்பவர்கள் தங்கள் தொழிலில் போதுமான லாபத்தை ஈட்டுவார்கள். குடும்பத்தினருடன் போதுமான நேரத்தை மகிழ்ச்சியாக செலவிடுவீர்கள். பெற்றோர் மற்றும் குழந்தைகளுடன் சுற்றுலா செல்வதற்கான வாய்ப்புகளும் உள்ளது. வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ளலாம், மத அல்லது மங்களகரமான நிகழ்வுகளில் பங்கேற்க வாய்ப்பு உள்ளது.
தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும், தொழிலிலும் நன்மை கிடைக்கும். உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியும் செழிப்பும் இருக்கும். போட்டி தேர்வு மற்றும் அரசு வேலைக்காக தேர்வு எழுதி காத்திருக்கும் நபர்கள் நல்ல செய்தியை எதிர்பார்க்கலாம். காதல் வாழ்க்கை சிறப்பாக அமையும். திட்டமிட்டு செயல்படுவதன் மூலம், வாழ்க்கை சிறப்பாக மாறும். வியாபாரத்தில் புதிய கூட்டாண்மை மூலம் புதிய ஒப்பந்தங்கள் மற்றும் லாபம் கிடைக்கும். மாணவர்கள் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறலாம்.
கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு நன்மை பயக்கும். வெற்றி மழை கொட்டும். தொழில் முன்னேற்றப் பாதை திறக்கும். குழந்தைகள் மூலம் நல்ல செய்திகள் கிடைக்கும். பணியிடத்தில் ஊதிய உயர்வு கிடைப்பதற்கான யோகம் உள்ளது; உங்கள் உழைப்பு கிடைக்கும் பலனாக பதவி உயர்வு காணும் வாய்ப்புகளும் உள்ளது. குடும்பத்தில் புதிய நபர் இணைவதற்கான வாய்ப்பு காணப்படுகிறது. குடும்ப உறவுகளுக்கு இடையே இருந்த மன கசப்புகள் நீங்கும், மகிழ்ச்சி பெருகும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி இருக்கும்.
இதனையும் படியுங்கள் : 2025 ராகு கேது பெயர்ச்சியால் தலைவிதி மாறப்போகும் ஐந்து ராசிக்காரர்கள்!!


