- Prep
- 5 min
- Cook
- 9 min
- Serves
- 4
- Cuisine
- tamil nadu
- Course
- Breakfast, dinner
தோசைக்கல்ல பல வெரைட்டிகள் வந்துடுச்சு விதவிதமான தோசைகள் செய்து சாப்பிட்டு இருக்கோம். அப்படி விதவிதமான தோசைகள் சாப்பிட்டே இருந்தாலும் இப்போ புதுசா நம்ம சாப்பிட்டு இருக்க தோசை கறி தோசை. அருமையான கறி தோசை செய்றாங்க ரொம்பவே சுவையா இருக்கு இந்த கறி தோசை. இந்த கறி தோசைய வீட்ல சுவையா அதாவது எவ்வளவு சுலபமாக இந்த கறி தோசை சீக்கிரம் செய்து முடிக்க முடியும்னு தெரிஞ்சுக்க இருக்கோம்.
இந்த கறி தோசை ரொம்ப சுவையா ரொம்ப சுலபமாக வீட்டில் செய்து முடிச்சிடலாம். இந்த கறி தோசை மேல சிறியவர்கள் முதல் பெரியவங்க வரைக்கும் எல்லாரும் ரொம்பவே விரும்பி சாப்பிடுவாங்க. தோசை அப்படின்னாலே எட்டு அடி தூரம் தள்ளி போறவங்களா அப்போ அவங்களுக்கு இந்த மாதிரி கறி தோசை செய்து கொடுத்தீங்கன்னா தோசையே சாப்பிடாதவங்க கூட சும்மா கறி தோசையை சாப்பிட்டுக்கிட்டே இருப்பாங்க அவ்ளோ ஒரு சுவையா இருக்கும்.
நம்ம அசைவ பிரியர்களுக்கு இந்த மாதிரி அசைவத்தில் ஏதாவது வித்தியாசமா செய்து கொடுக்கும்போது தான் அவங்க ரொம்பவே விரும்பி சாப்பிடுவாங்க. இந்த தோசைக்கு எந்த ஒரு சட்னியோ சாம்பாரோ தேவையே கிடையாது. இந்த தோசையில் இருக்கிறது அப்படியே நம்ம சாப்பிட்டுக்கலாம். ரொம்பவே சுவையா இருக்கும் இந்த கறி தோசை. சரி வாங்க இந்த கறி தோசை இப்படி சுலபமா செய்யலாம் அப்படின்னு தெரிஞ்சுக்கலாம்.
இதையும் படியுங்கள் : அபாரமான ருசியில் அவிச்ச முட்டை தோசை இந்த முறையில் செய்து சாப்பிடுங்க, டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும்!
Ingredients
Method
முதலில் அடுப்பில் ஒரு குக்கரை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய் , சோம்பு சேர்த்து தாளித்துக் கொள்ளவும்.பிறகு அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்றாகபொன்னிறமாக வதக்கிக் கொள்ளவும்.
வெங்காயம் பொன்னிறமாக வதங்கிய பிறகு தக்காளி, புதினா சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்.பிறகுமிளகாய் தூள், மல்லி தூள், கரம் மசாலா தூள், மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கலந்து விடவும்.
பிறகு அதில் சுத்தம் செய்து எடுத்து வைத்துள்ள சிக்கன் துண்டுகளை சேர்த்து கலந்து விட்டு சிக்கன் வேகுவதற்கு தேவையான அளவு தண்ணீர் , உப்பு சேர்த்து வேக வைத்து கொள்ளவும்.
சிக்கன் வேகுவதற்குள் ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய் துருவல், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, கசகசா, சோம்பு சேர்த்து விழுதாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு அதில் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதை சிக்கனில் சேர்த்து நன்றாக மூடி போட்டு விசில் விடவும். சிக்கன் நன்றாக வெந்து வந்து பிறகு அடுப்பில் ஒரு தோசை கல்லை வைத்து இந்த சிக்கன் கிரேவி சேர்த்து கறிகளை நன்றாக பொடியாக குத்திஎடுத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு பொடியாக கொத்தி வைத்துள்ள சிக்கன்களை ஒரு பகுதி மட்டும் வைத்துவிட்டு மற்றவை எடுத்து விட வேண்டும்.
பிறகு வைத்துள்ள கறி மசாலாவின் மீது தோசை மாவை சேர்த்து ஒரு பக்கம் வெந்த பிறகு மறுபக்கம் திருப்பிபோட்டு வேக வைத்து எடுக்க வேண்டும். இரண்டு பக்கமும் வெந்து பிறகு இந்த தோசையை சூடாகபரிமாறினால் சுவையான ஸ்பாட் கறி தோசை தயார்.






