- Prep
- 5 min
- Cook
- 5 min
- Total
- 10 min
- Serves
- 5
- Cuisine
- Indian, TAMIL
- Course
- Side Dish
காலையில் உங்கள் வீட்டில் இட்லி, தோசை செய்யப் போகிறீர்களா? பெரும்பாலும் இட்லி, தோசை என்றால் ஒரே மாதிரி சட்னி, சாம்பார் தான் செய்வீர்களா?அதுவும் சட்னி என்றால் ஒரே சட்னியைத் தான் திரும்ப திரும்ப செய்வீர்களா? அப்படியானால் அடுத்தமுறை இந்த பனிக்காலத்திற்கு இதமாக இருக்கும் வகையில் காரசாரமான வெங்காயத்தாள் சட்னியை செய்யுங்கள். இந்த சட்னி சட்டென்று 10 நிமிடத்தில் செய்யக்கூடியவாறு ஈஸியாக இருக்கும். மேலும் இந்த சட்னி இட்லி, தோசையுடன் மட்டுமின்றி, அனைத்து விதமான டிபனுடனும் சேர்த்து சாப்பிடக்கூடியவாறு ருசியாக இருக்கும்.
பொதுவாக சட்னி என்றாலே நம் நினைவுக்கு வருவது தேங்காய், தக்காளி அல்லது வெங்காயம் தான். ஆனால், இவை எதுவுமே இல்லாமல் மிகக் குறைந்த நேரத்தில், அதே சமயம் நாவிற்கு மிகுந்த ருசியைத் தரும் ஒரு சட்னியைத் தயாரிக்க முடியும் என்பது பலருக்கு ஆச்சரியமாக இருக்கலாம். அவசரமான காலை நேரங்களிலும், வீட்டில் காய்கறிகள் தீர்ந்துபோன சமயங்களிலும் கை கொடுக்கும் இந்த சட்னி, இட்லி மற்றும் தோசைக்கு மிகச்சிறந்த இணையாக இருக்கும். இப்போது சுவையான வெங்காயத்தாள் சட்னி எப்படி செய்வதென்று பார்ப்போம்.
இதனையும் படியுங்கள் : கடலை பருப்பு சட்னி செய்வது எப்படி
Ingredients
Method
ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் உளுந்தம் பருப்பு மற்றும் பூண்டு சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
பின் காஷ்மீர் மிளகாய், கறிவேப்பிலை, வெங்காயத்தாள், உப்பு, பெருங்காயத்தூள், தேங்காய் துருவல் சேர்த்து வதக்கி எடுத்துக் கொள்ளவும்.
இவை நன்கு ஆறியதும் மிக்ஸியில் சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு நன்கு அரைத்து ஒரு பவுளுக்கு மாற்றி கொள்ளவும்.
ஒரு தாளிப்பு கரண்டியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் சேர்த்து தாளித்து சட்னியில் சேர்த்து கலந்து விடவும். அவ்வளவுதான் சுவையான வெங்காயத்தாள் சட்னி தயார்.






