- Prep
- 10 min
- Cook
- 15 min
- Total
- 25 min
- Serves
- 5
- Cuisine
- sri lanka
- Course
- LUNCH
எண்ணெய் நெய் பட்டர் இது எதுவுமே இல்லாமல் ஒரு சூப்பரான சொதி குழம்பு இந்த மாதிரி செஞ்சு பாருங்க. இடியாப்பம் இட்லி, தோசை இது எல்லாத்துக்கும் வச்சு சாப்பிடுறதுக்கு அவ்ளோ சூப்பரா இருக்கும். நம்ம இன்னைக்கு ஸ்ரீலங்கன் ஸ்டைல் சொதி குழம்பு எப்படி செய்யறதுன்னு பாக்க போறோம். அதுவும் சிக்கன் சொதி குழம்பு இந்த குழம்பு செஞ்சு இடியாப்பத்துக்கு ஊத்தி சாப்பிட்டால் அவ்வளவு சூப்பரா இருக்கும். இந்த ரெசிபி செய்றது ரொம்ப ரொம்ப ஈஸி. தாளிப்புக்காக எதுவுமே சேர்க்க தேவையில்லை. இந்த சூப்பரான ரெசிபிக்கு கண்டிப்பா எல்லாருமே அடிமையாகிடுவாங்க. அந்த அளவுக்கு இந்த ஸ்ரீலங்கன் ஸ்பெஷல் சொதி குழம்பு சூப்பரா இருக்கும். ரொம்ப ரொம்ப குறைவான பொருட்களை வைத்து இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு பாருங்க.
சிக்கன் எடுத்தா அதுல நிறைய மசாலாக்கள் போட்டு சிக்கன் கிரேவி சிக்கன் பிரியாணி பெப்பர் சிக்கன் அப்படின்னு நிறைய ரெசிப்பீஸ் செஞ்சிருப்போம். ஆனா இந்த மசாலா அதிகம் இல்லாத சொதி குழம்பு கண்டிப்பாக ஒரு சிலருக்கு பேவரட் ஆக இருக்கும். அதனால இந்த சூப்பரான ரெசிபியை எல்லாருக்கும் செஞ்சு கொடுங்க. இந்த சொதி குழம்புல ரொம்ப ரொம்ப முக்கியமானது தேங்காய்ப்பால் தான். முதலில் இரண்டாவதாக எடுத்த தேங்காய் பால் சேர்த்து கிளறணும் அதுக்கு அப்புறமா முதலில் எடுத்த தேங்காய் பால் சேர்த்து கிளறனும். வெங்காயம் தக்காளி சிக்கன் எல்லாமே நல்லா வெந்த பிறகு அதுக்கப்புறம் தான் தேங்காய் பால் சேர்க்கணும் தேங்காய் பால் சேர்த்த பின்னாடி கொதிக்க வைக்க கூடாது கொதிக்க வைத்தால் கண்டிப்பாக நல்லா இருக்காது.
இந்த சூப்பரான டேஸ்டான சொதி குழம்பு ரெசிபி இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு பாருங்க உங்க எல்லாருக்கும் ரொம்ப பிடிக்கும். காய்கறிகள் எல்லாம் போட்டு சொதி குழம்பு செஞ்சிருப்பீங்க ஆனா இந்த மாதிரி சிக்கன் வச்சும் ஒரு தடவை செஞ்சு பாருங்க. சிக்கன் பிரியர்களுக்கு கண்டிப்பா இந்த ரெசிபி ரொம்ப புடிக்கும். ஸ்ரீலங்கன் ஸ்பெஷல் ரெசிப்பிஸ் செய்யும்போது எலுமிச்சை சாறு கண்டிப்பாக சேர்க்கணும் அந்த வகையில் இந்த சொதி குழம்பு கடைசியா கொஞ்சம் எலுமிச்சைச் சாறு மற்றும் கொத்தமல்லி இலைகள் தூவி இறக்கினால் சூப்பரா இருக்கும். இப்ப வாங்க இந்த சுவையான சிக்கன் சொதி குழம்பு ஸ்ரீலங்கன் ஸ்டைலில் எப்படி செய்யறதுன்னு பாக்கலாம்.
இதனையும் படியுங்கள் : நெல்லை ஸ்பெஷல் தேங்காய் பால் சொதி குழம்பு ஒரு முறை இப்படி செய்து பாருங்கள் இதன் சுவை உங்கள் நாவிலேயே தங்கி விடும்!!
Ingredients
Method
அடுப்பை பற்ற வைத்து ஒரு கடாயில் நறுக்கிய பெரிய வெங்காயம் நறுக்கிய பச்சை மிளகாய், கருவேப்பிலை சேர்த்துக் கொள்ளவும்.
தக்காளி சேர்த்து மஞ்சள் தூள் உப்பு சிறிதளவு தண்ணீர் சேர்த்து பச்சை வாசனை போக வேக வைக்கவும்.
பிறகு சிக்கன் சேர்த்து நன்றாக வதக்கி நன்றாக வேக வைக்கவும்.
சிக்கன் வெந்ததும் தேங்காய் பால் சேர்த்து எலுமிச்சை சாறு கொத்தமல்லி இலைகள் தூவி, கொதிக்க வைக்காமல் இறக்கி விட வேண்டும். இப்பொழுது சுவையான சிக்கன் சொதி தயார்.






