நம் ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு ரூபத்தில் ஏதாவது ஒரு தோஷம் இருக்கும். தோஷங்கள் இல்லை என்றால் கஷ்டங்கள் வாழ்க்கையில் இருந்து கொண்டே தான் இருக்கும். இதற்கு காரணம் நவகிரகங்கள் தான். அப்படிப்பட்ட நவக்கிரகங்கள் பெரும்பாலும் சிவபெருமானின் ஆலயத்தில் இருக்கும். அதனால் பலரும் நவகிரக தோஷத்தை நீக்க வேண்டும் என்பதற்காக சிவன் கோவிலுக்கு சென்று அங்கு உள்ள நவகிரகங்களை வழிபாடு செய்வார்கள். பெருமாள் கோவிலுக்கு சென்றாலும் நவகிரக தோஷம் நீங்கும். ஆனால் பெருமாள் கோவில்களில் பெரும்பாலும் நவக்கிரகங்கள் இருக்காது ஆனால் பெருமாளின் சுதர்சன சக்கரத்தை வழிபாடு செய்யும் போது எண்ணில் அடங்காத பலன்களை நம்மால் பெற முடியும். அதன் மூலம் நவகிரக தோஷமும் நீங்கும் அதனைப் பற்றி இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் பார்க்கலாம்.

சுதர்சன சக்கரம்
பெருமாளின் ஆயுதங்களில் ஒன்றாக திகழக் கூடியதுதான் சுதர்சன சக்கரம். இந்த சுதர்சன சக்கரம் பலருடைய பாவத்தை நீக்கி மோட்சம் தந்ததாக கூறப்படுகிறது எனவே இந்த சுதர்சன சக்கரத்தை வழிபாடு செய்யும் போது நிறைய நன்மைகள் கிடைக்கும். திருமண தடைகள் நீங்குவதற்கு இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம். வாழ்க்கையில் தோல்வி உண்டாக்கிக் கொண்டே இருந்தாலும் இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம். சுதர்சன சக்கரம் எதிரிகளை அழிக்கக்கூடியதாக உள்ளது எனவே நம் வாழ்க்கையில் இருக்கக்கூடிய பயம் கடன் வியாதி எதிரி பகை போன்ற அனைத்தையும் நீக்கும்.
சுதர்சன சக்கர வழிபாடு
சுதர்சன சக்கரத்திற்கு உரிய கிழமை என்றால் அது வியாழக்கிழமை மற்றும் சனிக்கிழமை. அதனால் ஒவ்வொரு வாரத்திலும் வரக்கூடிய வியாழக்கிழமை என்றும் சனிக்கிழமை என்றும் பெருமாள் கோவிலுக்கு சென்று சுதர்சன சக்கரத்தை வழிபாடு செய்ய வேண்டும். சுதர்சன சக்கரத்திற்கு சிவப்பு நிற மலர்களால் ஆன மாலையை போட வேண்டும். பிறகு இரண்டு நெய் தீபங்களை ஏற்றி வைத்து ஏதாவது ஒரு இனிப்பு பொருளை நெய்வேதியம் ஆக வைத்து சுதர்சன சக்கரத்தின் மந்திரத்தை தங்களால் இயன்ற அளவு அங்கேயே அமர்ந்து கூற வேண்டும் முடிந்த அளவிற்கு 108 முறை சொல்வது மிகவும் சிறப்பானது.
மந்திரம்
“ஓம் நமோ பகவதே மஹா சுதர்சனாய நம”
இந்த சுதர்சன சக்கரத்தை வழிபாடு செய்வதன் மூலம் திருமண தடை நீங்கும். காரிய வெற்றி ஏற்படும். நவகிரகங்களால் ஏற்பட்ட தோஷங்கள் நீங்கும். பகைவராக நமக்கு இருக்கக்கூடியவர்கள் அனைவரும் நமக்கு நல்லது நினைக்க ஆரம்பிப்பார்கள். கல்வியில் இருக்கக்கூடிய தடைகள் அனைத்தும் விலகி குழந்தைகளுக்கு சிறப்பான கல்வி யோகம் உண்டாகும். இந்த சுதர்சன சக்கரத்தை முழு மனதோடு வழிபாடு செய்வதால் வாழ்க்கையில் அனைத்து விதமான நன்மைகளும் உண்டாகும். முழு நம்பிக்கையோடு இந்த வழிபாட்டை செய்து பாருங்கள்.
இதனையும் படியுங்கள் : கடன் தீர்க்கும் பெருமாள் மந்திரம்!!


