நவகிரகங்கள் அவ்வப்போது தங்களது இடத்தை மாற்றுவார்கள். கிரகங்கள் ராசியை மட்டுமல்ல, நட்சத்திரங்களையும் அவ்வப்போது கடந்து செல்கின்றன. அதற்காக சில காலம் எடுத்துக் கொள்வார்கள். நவகிரகங்கள் தங்களது இடத்தை மாற்றும்பொழுது அதன் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் இருக்கும். இடத்தை பொறுத்து ஒருவரின் ஜாதகம் அமைவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. நவகிரகங்கள் இடமாறும் பொழுது சுப மற்றும் அசுப யோகங்கள் உருவாகின்றன. அப்படி உருவாகும் யோகங்கள் பல்வேறு விதமான தாக்கங்களை 12 ராசிகளுக்கும் ஏற்படுத்தும். மகிழ்ச்சி, செழிப்பு, செல்வம், ஈர்ப்பு, காதல் ஆகியவற்றின் காரணியான சுக்கிரன் இன்னும் எட்டு நாட்களில் நட்சத்திரத்தை மாற்றுகிறார். சுக்கிரன் மகம் நட்சத்திரத்தில் தற்போது சஞ்சரித்துக் கொண்டிருக்கும் நிலையில், அதற்கு அடுத்த ராசிக்கு பெயர்ச்சியாகிறார். பணவரவை அதிகரிக்கும் சுக்கிரனின் பூர நட்சத்திரப் பெயர்ச்சியால், தொழில், வியாபாரத்தையும் சிறப்பாக மாற்றுவார். எதிர்பாராத பண வரவு ஏற்படும், குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி நிலவும்! இதெல்லாம் யாருக்கு வாய்க்கும் என இந்த ஆன்மீகப் பதிவில் பார்க்கலாம்.
சிம்மம்
சிம்ம ராசியினருக்கு குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பணிகள் முடிவடையும். குடும்பத்துடன் தரமான நேரத்தை செலவிட ஒரு வாய்ப்பு கிடைக்கும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். சுக்கிரனின் அருளால் அதிக பணம் சம்பாதிப்பீர்கள். இது உங்கள் நிதி நிலையை மேம்படுத்தும். வேலை, தொழில் மற்றும் நிதி விஷயங்களில் திட்டமிட்ட செயல்கள் அனைத்தும் வெற்றி பெறும்.
விருச்சிகம்
கோபக்கார விருச்சிக ராசிக்காரர்களின் சீற்றத்தைக் குறைத்து சிரிப்பை வரவழைக்கும் வகையில் சுக்கிரனின் நட்சத்திரப் பெயர்ச்சி அமையும். மனதில் மகிழ்ச்சி பொங்கினால் முகத்தில் சிரிப்பு வரும் தானே? காதலும் கைகூடும், குழந்தை பாக்கியத்தையும் சுக்கிரன் கொடுப்பார். திடீர் நிதி ஆதாயம் உண்டாகும். பல வழிகளில் வருமானம் பெருகும். வெளியூர் பயணத்தில் இருந்த தடைகள் அனைத்தும் நீங்கும்.
துலாம்
சுக்கிரனின் நட்சத்திரப் பெயர்ச்சியால் பெரும் லாபம் அடையப்போவது துலாம் ராசிக்காரர்கள். எதிர்பாராத பண வரத்து வந்து சேரும், மனதில் இருந்த கவலைகள் குறையும் காலம் இது, குடும்பத்தில் அனைவரிடமும் நெருக்கம் அதிகரிக்கும், தவறான புரிதல்கள் மாறி சுமூகமான சூழல் நிலவும். வேலையில் சம்பள உயர்வு, பதவி உயர்வும் கிடைக்கும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல செய்தி தேடி வரும். வெளிநாட்டு வேலை வாய்ப்புகளும் கிடைக்கும் வாய்ப்பு உண்டு.
தனுசு
புதனும் சூரியனும் சுக்கிரனுடன் சேரும்போது தனுசு ராசிக்காரர்களின் மனதில் உல்லாசம் பொங்கும், தடைபட்ட காரியங்கள் நிறைவேறி நிம்மதி பிறக்கும். சமூகத்தில் அந்தஸ்து உயரும். திருமண வாழ்க்கையில் பரஸ்பரம் உண்டாகும். வாழ்க்கை துணையுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் விலகும். மாணவர்கள் வெளியூர் சென்று படிக்கும் வாய்ப்பு கிடைக்கும். குடும்ப சூழ்நிலை இனிமையாக இருக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.
மீனம்
அழகுக்கும் செழுமைக்கும் காரகரான சுக்கிரன் பகவானின் மாற்றமானது மீன ராசிக்காரர்களின் எண்ணங்களை ஈடேற்றும், வாகனம் வாங்கும் யோகம் வந்து சேரும். காதல் வாழ்க்கையில் நல்ல பலன் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். நல்ல செய்திகள் வந்து சேரும். தொழில், வேலை என அனைத்திலும் வெற்றி நிச்சயம். சமூகத்தில் நல்ல மரியாதை உண்டாகும். சாதாரண முயற்சிகளை மேற்கொண்டாலும் அதிக வெற்றி அடைவீர்கள்.
இதனையும் படியுங்கள் : செவ்வாய் பெயர்ச்சியால் ஏற்படும் குருமங்கள யோகத்தால் அதிர்ஷ்டம் பெற போகும் 4 ராசிகள்!