இன்றிலிருந்து சூரியனால் பல வழிகளில் பணம் சம்பாரிக்க போகும் யோககார ராசிக்காரர்கள் இவர்கள் தான்!

- Advertisement -

நவகிரகங்களில்  தலைவனாகிய சூரிய பகவான் இன்று பெயர்ச்சியாக இருக்கிறார். அவர் பெயர்ந்து துலாம் ராசிக்கு செல்ல இருக்கிறார். அவ்வாறு சூரிய பகவான் பெயர்ச்சியாகும் பொழுது ராசிகளில் பல தாக்கங்கள் ஏற்படும் அப்படி எந்த ராசிக்காரர்களுக்கு எந்த மாதிரியான தாக்கங்கள் ஏற்படப் போகிறது என்பதை பார்க்கலாம். இன்று அக்டோபர் 18 ஆம் தேதி சூரிய பகவான் துலாம் ராசிக்குள் பெயர்ச்சியாக இருக்கிறார். அந்த பெயர்ச்சி எந்த ராசிகளுக்கு நல்ல அனுகூல பலன்களை கொடுக்கிறது என்று பார்க்க இருக்கிறோம். ஒரு ஜாதகத்தில் சூரிய பகவான் பலம் பெற்று இருந்தால் அவர் தன்னம்பிக்கை, மரியாதை, நிர்வாகம், அரசு வேலை, முதலாளி மற்றும் தந்தைக்கான காரணிகளாக இருக்கிறார். அப்படிப்பட்ட சூரிய பகவான் ஒரு ராசி விட்டு மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி ஆகும் பொழுது இந்த காரணிகளில் ஏதாவது ஒரு பாதிப்பை ஏற்படுத்துகிறது. அப்படி இந்த சூரிய பகவானின் பெயர்ச்சி எந்த ராசிகளுக்கு அனுகூல பலன்களை கொடுக்க இருக்கிறது என்பதை பார்க்க இருக்கிறோம்.

-விளம்பரம்-

சூரிய பகவானின் இந்த ராசி மாற்றம் எந்தெந்த ராசிகளுக்கு அனுகூல பலன்களை கொடுக்கிறாரோ அந்த ராசிகளுக்கு பணவரவு, லாபம், வேலைகளில் மாற்றங்கள் என எந்த மாதிரி நன்மைகள் நடைபெறுகிறது என்பதை பார்க்கலாம். அனைத்து கடவுள்களையும் நம் கண்களால் கண்டு தரிசிக்கக்கூடியவர் சூரிய பகவான் ஆவார். நம் முன்னோர்கள் காலை எழுந்த உடன் சூனிய நம்ஸ்காரம் செய்யும் பழக்கங்களை கடைபிடித்தனர். இந்த சூரிய பகவானை நினைத்து தினமும் ஆதித்ய  ஹரிதயம் படித்தால் நினைத்த காரியங்களை வெல்லலாம். எதிரிகள் அழிவார்கள். சூரிய பகவானின் ஆற்றல் தன்னம்பிக்கை மனோதிடம் வேலைவாய்ப்பு கொடுக்கக் கூடியது. இப்படி சூரியனை போற்றி பாடல்கள் படிப்பதால் அரசு வேலைகள், நிதி நிர்வாகம், தொழிலில் மிகப்பெரிய லாபம் என அனைத்தும் கிடைக்கும். சுகஸ்தானதிபதியாகிய சூரிய பகவான் துலாம் ராசிக்கு பெயர்ச்சி அடைவதால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு அதிக லாபம் கிடைக்க இருக்கிறதுஎன பார்க்கலாம்.

- Advertisement -

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு சூரியனின் இடமாற்றம் சுப பலன்களை கொடுக்க இருக்கிறது. வேலை செய்யும் இடங்களில் மரியாதை கிடைக்கும். பணியிடத்தில் உயர்வு பெரிய பதவிகள் கௌரவங்கள் கிடைக்கும். உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும். செய்யும் வேலையில் சம்பள உயர்வு கிடைக்கும். நல்ல முடிவுகளை எடுப்பீர்கள். அந்த முடிவுகளால் பிற்காலத்தில் உங்களுக்கு நன்மை கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் நன் மதிப்பு பெருகும்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களே இந்த சூரியனின் சஞ்சாரம் உங்களுக்கு மிக நல்ல பலன்களை கொடுக்க இருக்கிறது. உங்கள் குழந்தைகளிடமிருந்து நல்ல செய்திகள் வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கும். கணவன் மனைவி இடையே காதல் அதிகரிக்கும். உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும். இதன் மூலம் வேலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த சூரிய பகவான் துலாம் ராசி இடம்பெயர்ச்சி ஆவதால் அதிக அதிர்ஷ்டம் கிடைக்க இருக்கிறது. நிதி ஆதாயம் கிடைக்கும் உங்கள் வார்த்தைகளில் உள்ள நேர்மையினால் வேலை சுலபமாக நடைபெறும் .வியாபாரிகளுக்கு நன்மைகள் ஏற்படும் . தடைபட்டிருந்த பணவரவு மீண்டும் கிடைக்கப் பெறும். பணத்தை சேமிப்பீர்கள். கடினமாக உழைத்து எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடிப்பீர்கள்.

-விளம்பரம்-

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு சூரியப் பெயர்ச்சியால் வருமானம் அதிகரிக்கும். வியாபாரம் நன்றாக நடைபெறும். பழைய முதலீட்டில் லாபம் கிடைக்கும்.உங்கள் சம்பள உயர்வு காரணமாக உங்கள் நிதி நிலைமை வலுவடையும்.புதிய வருமான ஆதாரங்களைப் பெறுவதன் மூலம் கூடுதல் பணம் சம்பாதிப்பதில் வெற்றி பெறுவீர்கள். சொத்துக்களால் லாபம் உண்டாகும்.