- Prep
- 5 min
- Cook
- 10 min
- Serves
- 4
- Cuisine
- tamil nadu
- Course
- sweets
ரவா கேசரி என்றால் எல்லோருக்கும் விருப்பமான ஒரு எளிமையான ஸ்வீட் வகையாக இந்தியர்களுக்கு உண்டு. இந்த கோதுமை ரவை கேசரி பார்ப்பதற்கே நல்ல நிறமாகவும், சுவையாகவும் இருக்கிறது. என்ற நிறமிகளையும் சேர்க்க வேண்டாம். கோதுமை கேசரி அப்படியே கைகளில் எடுத்தால் கைகளில் ஒட்டாது ருசியாக இருக்கும்.
இனிப்பு என்றாலே பிடிக்காத குழந்தைகள் கிடையாது, ஆனால் அந்த இனிப்பை நம் உடலுக்கு ஆரோக்கியமான இந்த கோதுமை நாட்டுசக்கரை, கருப்பட்டி இது போன்ற நம் பாரம்பரிய பொருட்களில் செய்வதென்றால் குழந்தைகளுக்கு அவர்களுக்கு பிடித்தமான வகையில் செய்து கொடுக்கலாம். தான் அவர்களின் ஆரோக்கியத்தை நல்ல முறையில் காக்க முடியும். அந்த வகையில் இன்று நாம் கோதுமை ரவை, நாட்டுச் சர்க்கரை கொண்டு சுவையான கேசரி எப்படி செய்வது என்று தெரிந்து கொள்வோம்.
Ingredients
Method
முந்திரி பருப்பை சிறுசிறுத் துண்டுகளாக உடைத்துக் கொள்ளவும். அதைப் போல் பாதாம் பருப்பை இரண்டாக உடைத்துக் கொள்ளவும்.
மேலே குறிப்பிட்டுள்ள மற்ற தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
ஒரு தவாவில் இரண்டு தேக்கரண்டி நெய் ஊற்றி அதை சூடுபடுத்திக் கொள்ளவும்.
தவா சூடானதும் அதில் கோதுமைரவையை போட்டு 2 நிமிடம் வாசம் வரும் வரை வறுக்கவும்
வறுத்த கோதுமை ரவையிலிருந்து வாசம் வரும் போது அதில் 2 கப் சூடான தண்ணீரை ஊற்றவும். தண்ணீர் ஊற்றிய பின்னர் அடுப்பை மிதமான தீயில் வைத்து ரவையை வேக விடவும்.
ஏலக்காயை ஒரு சிறிய உரலில் அல்லது அம்மியில் வைத்து தட்டி எடுத்துக் கொள்ளவும். கோதுமை ரவை நன்கு வெந்தவுடன் அதனுடன் சீனியை சேர்த்து ஒன்றாக சேரும்படி கிளறி விடவும்.
நாட்டுசக்கரை சேர்த்து கிளறிய பின்னர், அதில் மேலும் 1/2 கப் சூடான தண்ணீரை ஊற்றி கிளறி விடவும்.மேலே ஒரு தேக்கரண்டி நெய் ஊற்றி மிதமான தீயில் வைத்து 8 முதல் 10 நிமிடங்கள் வரை அடுப்பில் வைத்திருக்கவும்.
கோதுமை ரவை கலவை நன்றாக வெந்து அதில் இருந்து நெய் வெளியே வர ஆரம்பிக்கும் போதுஏலக்காய்தூள் போட்டு இறக்கி வைத்து விடவும்.
ஒரு பாத்திரத்தில் அல்லது சிறிய வாணலியில் ஒரு தேக்கரண்டி நெய் ஊற்றி அதில் உடைத்து வைத்திருக்கும் அண்டிபருப்பு, கிஸ்மிஸ் பழம், பாதாம் பருப்பு ஆகியவற்றை போட்டு வறுத்து எடுத்துக் கொள்ளவும். 12. வறுத்து வைத்திருக்கும் அண்டிபருப்பு,கிஸ்மிஸ், பாதாம் பருப்பை கேசரியில் போட்டு கிளறி விடவும்.
சுவையான கோதுமை கேசரி தயார், சூடாக இருக்கும் போதே இதனை பரிமாறவும்.






