- Prep
- 5 min
- Cook
- 10 min
- Total
- 15 min
- Serves
- 5
- Cuisine
- Indian, TAMIL
- Course
- Side Dish
பீட்ரூட் வைத்து பொரியல் கூட்டு பீட்ரூட் பச்சடி, பீட்ரூட் பிரியாணி கூட செஞ்சுருப்பீங்க ஆனா பீட்ரூட் வைத்து இந்த மாதிரி ஒரு தடவ சட்னி செஞ்சு பாருங்க கண்டிப்பா ரொம்ப ரொம்ப அருமையா இருக்கும். இதுக்கு ஒரு பீட்ரூட்டை வேகவைத்து எடுத்துக்கணும் குட்டி பீட்ரூட்டாக இருந்தாலே போதுமானது. அத வச்சு சூப்பரா ஒரு சட்னி செஞ்சுக்கலாம். தக்காளி சட்னி தேங்காய் சட்னி, புதினா சட்னி, மல்லி சட்னி அப்படின்னு நிறைய சட்னி வகைகள் சாப்பிட்டிருப்பீங்க.
அந்த வகையில இந்த வித்தியாசமான சட்னியையும் ஒரு தடவை ட்ரை பண்ணி பாருங்க. நல்லா தண்ணியா வைக்கும் போது கண்டிப்பா ரொம்ப ரொம்ப ருசியா சாப்பிட ரொம்ப பிடிக்கும். இத பார்பி சட்னியின் கூட சொல்லலாம். நல்ல ரோஸ் கலர்ல பாக்குறதுக்கு டிஃபரண்டா இருக்கும். பீட்ரூட் சாப்பிடுவதால் உடம்புக்கு நிறைய நன்மைகள் கிடைக்கும் அந்த வகையில பீட்ரூட் பொரியல் கூட்டு சாப்பிடுவதற்கு போரடித்ததுனா இந்த மாதிரி சட்னி செஞ்சு சாப்பிட்டு பாருங்க.
இந்த சூப்பரான டேஸ்டான பார்பி சட்னி கண்டிப்பா எல்லாருமே வீட்ல செஞ்சு பாருங்க. வீட்ல இருக்குற எல்லாருக்குமே இந்த சட்னியை செஞ்சு கொடுத்து அசத்திடலாம். இந்த சுவையான டேஸ்டான சட்னிக்கு கண்டிப்பா எல்லாருமே விரும்பி சாப்பிடுவாங்க. இந்த சுவையான டிஃபரண்டான சட்னிய வீட்டுக்கு வர விருந்தாளிகளுக்கும் செஞ்சு கொடுங்க. இப்ப வாங்க இந்த சுவையான பார்பி சட்னினு சொல்லப்படுற பீட்ரூட் சட்னி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : பீட்ரூட் கோலா உருண்டை குழம்பு
Ingredients
Method
ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து பெரிய வெங்காயம் கருவேப்பிலை பச்சை மிளகாய் இஞ்சி சேர்த்து வதக்கவும்.
வேர்க்கடலை சேர்த்து வதக்கியதும் வேகவைத்த பீட்ரூட்டை நறுக்கி சேர்த்து வதக்கவும்.
தேங்காய் துருவல் சேர்த்து உப்பு சேர்த்து வதக்கி ஆற வைத்து அரைத்து எடுக்கவும்.
ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு உளுந்தம் பருப்பு கருவேப்பிலை காய்ந்த மிளகாய் சேர்த்து தாளித்து அரைத்து வைத்த சட்னியில் சேர்த்து விட்டால் சுவையான பீட்ரூட் சட்னி தயார்.






