- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 5
- Cuisine
- Indian, TAMIL
- Course
- evening, Side Dish
மாலை வேளையில் உங்கள் குழந்தைகள் வித்தியாசமான ஸ்நாக்ஸ் கேட்டு நச்சரிக்கிறார்களா? உங்கள் குழந்தைகள் மீனை விரும்பி சாப்பிடுவார்களா? அப்படியானால் அவர்களுக்கு மாலை வேளையில் சில்லி ஃபிஷ் செய்து கொடுங்கள். இந்த சில்லி ஃபிஷ் குழந்தைகள் மட்டுமின்றி பெரியோர்களும் விரும்பி சாப்பிடும் வகையில் மிகவும் சுவையாக இருக்கும். அதுவும் இது மழைக்காலத்தின் மாலை வேளையில் செய்து சாப்பிட ஏற்ற அற்புதமான ஸ்நாக்ஸ். இந்தியாவில் மிகவும் பிரபலமாக இருக்கும் மீன் சார்ந்த உணவுகளை விரும்பி உண்ணும் உணவு பிரியர்களுக்கு மட்டுமின்றி இவை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமான ஒரு உணவாக இருக்கிறது.
பொதுவாக இந்த சில்லி ஃபிஷை மக்கள் பிரியாணி, ஃப்ரைட் ரைஸ் போன்றவற்றிற்க்கு சைடிஷ் ஆக சுவைக்கிறார்கள். ஆனால் இதை நாம் வெறுமனேவும் ஒரு மாலை நேர சிற்றுண்டியாகவும் சுவைக்கலாம். குழந்தைகளுக்கு ஏதாவது புதுமையாக செய்து கொடுக்க வேண்டும் என நீங்கள் விரும்பினால், இந்த ரெசிபியை ட்ரை பண்ணுங்க. மாதத்திற்கு ஒரு நாள் சில்லி ஃபிஷ் உங்கள் வீட்டிலேயே எளிமையாக தயார் செய்து சாப்பிடலாம். இப்போது சுவையான சில்லி ஃபிஷ் எப்படி செய்வதென்று பார்ப்போம்.
இதனையும் படியுங்கள் : அடுத்த முறை மீன் வாங்கினால் குழம்பு வைக்காமல் ஒரு முறை இந்த மீன் ஆம்லேட் செய்து பாருங்கள்!!
Ingredients
Method
முதலில் மீனை நன்கு சுத்தம் செய்து முள் நீக்கி விட்டு சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும்.
ஒரு பவுளில் இஞ்சி பூண்டு விழுது, உப்பு, மஞ்சள் தூள், காஷ்மீர் மிளகாய் தூள், மிளகாய் தூள், சோம்பு தூள், சோள மாவு, முட்டை, எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
அதன்பிறகு நறுக்கிய மீன் துண்டுகளை சேர்த்து நன்கு கலந்து அரை மணி நேரம் வரை ஊற வைத்து கொள்ளவும்.
ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ஒவ்வொரு மீன் துண்டுகளாக சேர்த்து பொரித்து எடுக்கவும். அவ்வளவுதான் சுவையான சில்லி ஃபிஷ் தயார்.






