- Prep
- 10 min
- Cook
- 15 min
- Total
- 25 min
- Serves
- 4
- Cuisine
- Indian
- Course
- LUNCH
அசைவ உணவுப் பட்டியலில் உள்ள கோழி, ஆடு, நண்டு, மீன் ஆகியவற்றில் ஆரோக்கியத்தில் முதல் இடம் பிடிப்பது மீன். மீன் உடலுக்கு மிகவும் ஏற்றது. மற்ற அசைவ உணவுகளை விட கடல் உணவான மீனில், சாச்சுரேட் கொழுப்பு உள்ளதால் இது உடல் எடையை அதிகரிக்காது. மேலும் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான ஃபேட்டி ஆசிட்களான ஒமேகா 3 இதில் உள்ளது. இதனால் உடலுக்கு நல்ல ஆற்றல் கிடைப்பதோடு மட்டுமல்லாமல், டயட்டில் இருப்போருக்கு உகந்த ஒன்றாகவும் விளங்குகிறது. மீனில் கொழுப்புச் சத்தை விட புரதச் சத்துகள் மிகுந்துள்ளன.
மீனில் ஒமோகா-3 என்ற ஒரு வகை அமிலம் உள்ளது. இது நம் உடலில் நடைபெறும் வளர்ச்சிதை மாற்றத்தில் முக்கிய பங்காற்றுவதுடன் புற்று நோயிலிருந்து நமக்கு பாதுகாப்பு அளிக்கிறது. பொதுவாக மீன் என்றாலே வாசனை மிக்க குழம்பும், சாப்பிட சாப்பிட திகட்டாத வறுவல், மீன் புட்டு, மீன் பிரியாணி தான் நம்மில் பலருக்கும் நினைவுக்கு வரும். அதனால் எப்போதும் போல் குழம்பு, வறுவல் என்று செய்யாமல் மீன் நிர்வாணா ஒரு முறை வீட்டில் செய்து பாருங்கள்.
அதன் சுவையே தனி. பெயர் வித்தியாசமாக இருப்பதால் செய்வதற்கு கடினமாக இருக்குமோ என்று நினைக்க வேண்டாம். இந்த உணவை 30 நிமிடத்திற்குள் எளிமையான முறையில் சமைத்து முடித்துவிடலாம். பொதுவாக மீன் என்றாலே எல்லோருக்கும் மிகவும் பிடித்தமான உணவுகளில் ஒன்றாகும். அதிலும் தேங்காய் பால் சேர்த்து செய்யும் இந்த மீன் நிர்வாணா என்றால் சொல்லவே வேண்டாம் அலாதி ருசி தான். இப்போது சுவையான அதேசமயம் வித்தியாசமான மீன் நிர்வாணா எப்படி செய்வது என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : கானாங்கெளுத்தி மீன் வச்சு இந்த கிரீன் மீன் ஃப்ரை செஞ்சு அசத்துங்க!
Ingredients
Method
முதலில் ஒரு பவுளில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள், உப்பு, எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலந்து அதில் மீனை நன்கு பிரட்டி எடுத்து கொள்ளவும்.
ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மீனை சேர்த்து இரண்டு பக்கமும் பொரித்து எடுத்து கொள்ளவும்.
ஒரு அகலமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் வாழை இலை வைத்து தேங்காய் பால் சேர்த்து அதில் நாம் பொரித்த மீன், நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, மிளகு தூள் சேர்த்து ஒரு கொதி வந்ததும் மீண்டும் சிறிதளவு மிளகு தூள் சேர்த்து இறக்கவும். அவ்வளவுதான் சுவையான மீன் நிர்வாணா தயார்.






