- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 5
- Cuisine
- Indian, TAMIL
- Course
- Breakfast, evening
பணியாரத்தில் நிறைய வகைகள் இருக்கு கார பணியாரம், இனிப்பு பணியாரம், கருப்பட்டி பணியாரம், நெய் பணியாரம் அப்படின்னு சொல்லிக்கிட்டே போகலாம். அந்த வகையில மசாலா தோசை மாதிரி மசாலா பணியாரம் ஒரு தடவ செஞ்சு சாப்பிட்டு பாருங்க கண்டிப்பாக ரொம்ப பிடிக்கும். இதுக்கு நம்ம வெங்காயம் உருளைக்கிழங்கு சேர்த்து ஒரு மசாலா செய்ய போறோம். இந்த மசாலா சாப்பிடுறதுக்கு ரொம்ப ருசியா இருக்கும் இத அப்படியே கூட ரசம் சாதத்துக்கு தயிர் சாதத்துக்கு சைடு டிஷ்ஷாக வைத்து சாப்பிடலாம் அந்த அளவுக்கு ஒரு ருசியான மசாலா வச்சு இந்த பணியாரம் ரெசிபி செய்ய போறோம். இந்த மசாலா பணியாரத்துக்கு சைட் டிஷ் தேவைப்படாது.
தேவைப்பட்டால் கார சட்னி வச்சு சாப்பிட்டுக்கலாம். இந்த சுவையான மசாலா பணியாரம் ரெசிபிக்கு கண்டிப்பா எல்லாருமே விரும்பி சாப்பிடுவாங்க. 10,20 பணியாரம் கூட சாப்பிடுவாங்க அந்த அளவுக்கு ருசியா இருக்கும். இந்த மசாலா பணியாரம் ரெசிபி சின்ன குழந்தைகளிலிருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருக்குமே ரொம்ப பிடிக்கும். மசாலா பணியாரம் கண்டிப்பா ப்ரேக்பாஸ்ட்க்கு ஒரு சூப்பரான ஆப்ஷனாக இருக்கும். இந்த மசாலா பணியாரம் ரெசிபிக்கு வெறும் வெங்காயம் மட்டும் கூட போட்டு நீங்க மசாலா செய்யலாம் உருளைக்கிழங்கு இருந்தால் அதை சேர்த்து உருளைக்கிழங்கு மசாலாவாக தயார் செய்து கொள்ளலாம். வீட்டுக்கு யாராவது விருந்தாளிகள் வந்தா அவங்களுக்கும் கூட இந்த ரெசிபியை செஞ்சு கொடுத்து அசத்தலாம்.
வீட்ல உருளைக்கிழங்கு மசால் சைடு டிஷ் ஆக செஞ்சிருப்போம் அது மீந்து போச்சுன்னா கூட ஈவினிங் டைம்ல குழந்தைகள் ஸ்கூல் விட்டு வரும் போது அவங்களுக்கு அந்த மசாலாவை வச்சு ஒரு சூப்பரான மசாலா பணியாரம் செஞ்சு கொடுக்கலாம். இந்த டேஸ்டான மசாலா பணியாரத்துக்கு கண்டிப்பா நிறைய பேரு அடிமையாகிடுவாங்க அந்த அளவுக்கு ருசியா இருக்கும். இந்த டேஸ்டான ருசியான மசாலா பணியாரம் ரெசிபி எப்படி செய்வது என்று பார்க்கலாம் வாங்க.
இதனையும் படியுங்கள் : திருவண்ணாமலை இனிப்பு பணியாரம்
Ingredients
Method
உருளைக்கிழங்கை வேக வைத்து தோலுரித்து எடுத்துக் கொள்ளவும்.
ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, பெரிய வெங்காயம்,கருவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொள்ளவும்.
பொடியாக நறுக்கிய இஞ்சி மசித்த உருளைக்கிழங்கு மிளகாய்த்தூள் மஞ்சள் தூள் உப்பு சேர்த்து நன்றாக கலந்து விட்டு கொத்தமல்லி இலைகள் தூவி இறக்கிக் கொள்ளவும்.
அதனை சிறு உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளவும்.
பணியாரக் கல்லில் பாதி அளவிற்கு மாவு ஊற்றி அதன் மேல் உருளைக்கிழங்கு மசாலா வைத்து அதன் மேல் மறுபடியும் மாவு ஊற்றி எண்ணெய் ஊற்றி மூடி போட்டு இரண்டு பக்கமும் வேக வைத்து எடுத்தால் சுவையான மசாலா பணியாரம் தயார்.






