Home அசைவம் நெத்திலி கருவாட்டு தொக்கு இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு பாருங்க!!

நெத்திலி கருவாட்டு தொக்கு இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு பாருங்க!!

நீங்க யார் கூடயாவது அதிகமா சண்டை போட்டு இருந்தீங்கன்னா இந்த சண்டைய சமாதானப்படுத்துவதற்கு இந்த மாதிரி ஒரு நெத்திலி கருவாட்டுத் தொக்கு மட்டும் செஞ்சு பாருங்க கண்டிப்பாக இவ்ளோ பெரிய சண்டையா இருந்தாலும் சரி ஆகிடும். இந்த நெத்திலி கருவாட்டு தொக்கு அவங்க மனச மாத்திடும் அந்த அளவுக்கு டேஸ்ட்டா இருக்கும். டேஸ்ட்டான நெத்திலி கருவாட்டு தொக்கு ஒரே ஒரு தடவை மட்டும் உங்க வீட்ல இந்த மாதிரி செஞ்சு பாருங்க. ஒரு சிலருக்கு மட்டன் சிக்கன் மீன் இது எல்லாத்தையும் விட கருவாடு தான் ரொம்ப பிடிக்கும். அந்த வகையில ஒரு சிலர் கருவாட்டு குழம்பு விரும்பி சாப்பிடுவாங்க.

-விளம்பரம்-

ஒரு சிலர் தொக்கு விரும்பி சாப்பிடுவாங்க. அந்த வகையில இந்த கருவாட்டு தொக்கு செஞ்சு சுட சுட சாதத்தில் போட்டு பிசைந்து சாப்பிட்டு பாருங்க அவ்வளவு ருசியாவும் மணமாகவும் இருக்கும். ருசியான வாசனையான நெத்திலி கருவாட்டு தொக்கு இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு பாருங்க. வீட்ல இருக்க கூடிய எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க இதுக்கு நெத்திலி கருவாட்ட உப்பு மஞ்சள் போட்டு கொஞ்ச நேரம் ஊற வச்சிட்டு அதுக்கப்புறம் எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்து இந்த தொக்கு செஞ்சா அவ்வளவு சூப்பரா இருக்கும். சுவையான நெத்திலி கருவாட்டு தொக்கு எல்லாரும் விரும்பி சாப்பிடுற மாதிரி இருக்கும்.

பழைய சாதத்துக்கு இந்த தொக்கு கண்டிப்பாக ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கும். சுடு கஞ்சி வச்சு அதுக்கும் சைடு டிஷ்ஷாக இதை செஞ்சு பாருங்க. பிரியாணி கூட தோத்து போயிடும். பக்கத்து வீட்டுக்கும் சேர்த்து மணக்கும். மணக்க மணக்க இந்த நெத்திலி கருவாட்டு தொக்கு ஒரே தடவை செஞ்சு பாருங்க அதுக்கப்புறம் அடிக்கடி செய்வீங்க. நெத்திலி கருவாட்டு தொக்கு இந்த செய்முறையை பின்பற்றி செய்தால் இரண்டு நாளைக்கு கூட கெட்டு போகாமல் அப்படியே இருக்கும். அவ்ளோ சுவையான நெத்திலி கருவாட்டு தொக்கை பார்த்தாலே நாக்கில் எச்சில் ஊறும்.அந்த அளவுக்கு டேஸ்ட்டான இந்த நெத்திலி கருவாட்டு தொக்கு எப்படி செய்வது என்று வாங்க பார்க்கலாம்.

Print
No ratings yet

நெத்திலி கருவாட்டு தொக்கு | Nethili Thokku Recipe In Tamil

நீங்க யார் கூடயாவது அதிகமா சண்டை போட்டு இருந்தீங்கன்னா இந்த சண்டைய சமாதானப்படுத்துவதற்கு இந்த மாதிரி ஒரு நெத்திலி கருவாட்டுத் தொக்கு மட்டும் செஞ்சு பாருங்க கண்டிப்பாக இவ்ளோ பெரிய சண்டையா இருந்தாலும் சரி ஆகிடும். இந்த நெத்திலி கருவாட்டு தொக்கு அவங்க மனச மாத்திடும் அந்த அளவுக்கு டேஸ்ட்டா இருக்கும். டேஸ்ட்டான நெத்திலி கருவாட்டு தொக்கு ஒரே ஒரு தடவை மட்டும் உங்க வீட்ல இந்த மாதிரி செஞ்சு பாருங்க. ஒரு சிலருக்கு மட்டன் சிக்கன் மீன் இது எல்லாத்தையும் விட கருவாடு தான் ரொம்ப பிடிக்கும். அந்த வகையில ஒரு சிலர் கருவாட்டு குழம்பு விரும்பி சாப்பிடுவாங்க. ஒரு சிலர் தொக்கு விரும்பி சாப்பிடுவாங்க. அந்த வகையில இந்த கருவாட்டு தொக்கு செஞ்சு சுட சுட சாதத்தில் போட்டு பிசைந்து சாப்பிட்டு பாருங்க அவ்வளவு ருசியாவும் மணமாகவும் இருக்கும். ருசியான வாசனையான நெத்திலி கருவாட்டு தொக்கு இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு பாருங்க.
Prep Time10 minutes
Active Time15 minutes
Total Time25 minutes
Course: Side Dish
Cuisine: Indian, TAMIL
Keyword: Nethili Thokku
Yield: 5 People
Calories: 186kcal

Equipment

  • 1 பவுள்
  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 100 கி நெத்திலி கருவாடு
  • 20 சின்ன வெங்காயம்
  • 4 பல் பூண்டு
  • 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 1 கொத்து கறிவேப்பிலை
  • 1/2 டீஸ்பூன் கடுகு உளுத்தம்பருப்பு
  • 1/2 டீஸ்பூன் வெந்தயம்
  • 1/2 டீஸ்பூன் சீரகம்
  • 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  • 1/2 டீஸ்பூன் காஷ்மீர் மிளகாய்த்தூள்
  • 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1 தக்காளி
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு
  • 1/2 டீஸ்பூன் தனியா தூள்
  • கொத்தமல்லி சிறிதளவு

செய்முறை

  • ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு உளுந்து வெந்தயம் சீரகம் போட்டு தாளித்துக் கொள்ளவும். இடித்த பூண்டு பற்கள் சேர்த்து கறிவேப்பிலை சின்ன வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்.
  • ஒரு தக்காளி இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்றாக வதக்கியதும் மிளகாய்த்தூள் காஷ்மீரி மிளகாய் தூள் மஞ்சள் தூள் தனியா தூள் உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.
  • நெத்திலி கருவாட்டை சுடுதண்ணீரில் கழுவி உப்பு மஞ்சள் தூள் சேர்த்து எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்து வெங்காயம் தக்காளி வதக்கி வைத்ததில் சேர்த்து வதக்கவும்.
  • பிறகு ஐந்து நிமிடத்திற்கு பிறகு கொத்தமல்லி இலைகள் தூவி நன்றாக வதக்கி இறக்கினால் சுவையான நெத்திலி கருவாட்டு தொக்கு தயார்.

Nutrition

Serving: 450g | Calories: 186kcal | Carbohydrates: 2.8g | Protein: 17g | Fat: 4.2g | Sodium: 130mg | Potassium: 196mg | Fiber: 7.3g | Vitamin C: 168mg | Calcium: 17mg | Iron: 19mg

இதனையும் படியுங்கள் : ருசியான பீர்க்கங்காய் கருவாடு தொக்கு சுட சுட சாதத்துடன் போட்டு பிசைந்து சாப்பிட்டால் சுவை அருமையாக இருக்கும்!