Home அசைவம் பாப்கான் சிக்கன் இந்த மாதிரி இனிமேல் நாமளும் வீட்டிலேயே செய்யலாம்!!

பாப்கான் சிக்கன் இந்த மாதிரி இனிமேல் நாமளும் வீட்டிலேயே செய்யலாம்!!

பொதுவா அசைவ பிரியர்களுக்கு பாப்கான் சிக்கன், சிக்கன் ப்ரை இது எல்லாமே ரொம்ப ரொம்ப பிடிக்கும். அதுலயும் வீட்டிலேயே இந்த ரெசிபியை செஞ்சு கொடுத்தா சொல்லவா வேணும் எவ்வளவு வேணா சாப்பிடுவாங்க. சாப்பிட்டுக்கிட்டே இருப்பாங்க. சுவையான இந்த பாப்கான் சிக்கன் ரெசிபி செய்றது ரொம்ப ரொம்ப ஈசி. இதுக்கு நம்ம ஒரு பொடி மட்டும் தயார் செய்து வைக்கணும். அது இருந்தா போதும் நம்ம எப்ப வேணும்னாலும் நினைச்ச உடனே சிக்கன் வாங்கி இந்த பாப்கான் சிக்கன் செஞ்சுக்கலாம். அப்படியே கேப்சி ல கடையில கிடைக்கிற மாதிரி வீட்டிலேயே சூப்பரா செய்யலாம்.

-விளம்பரம்-

சின்ன குழந்தைகளிலிருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருமே ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க. சுவையான இந்த ரெசிபிக்கு நிறைய பேரு அடிமையா கூட இருப்பாங்க. பொதுவாக குழந்தைகளுக்கு இந்த மாதிரி கடையில வாங்கி பொரிச்ச சிக்கன் கொடுக்க கூடாதுன்னு சொல்லுவாங்க. அதனால இனிமேல் குழந்தைகளுக்கு இந்த மாதிரி ஆரோக்கியம் இல்லாமல் கடைகளில் வாங்கி கொடுக்கிறத விடுத்து வீட்டிலேயே சூப்பரா செஞ்சு கொடுங்க. எப்பவாவது ஒரு தடவை செஞ்சு கொடுத்தா தப்பில்ல ஆனா எப்பவுமே செஞ்சு கொடுக்கக் கூடாது.

இப்ப எல்லாம் கடைகளில் பயன்படுத்தின என்னையவே திரும்பத் திரும்ப பயன்படுத்துறாங்க அதனால அந்த மாதிரி எண்ணெயில் பொரிச்ச சிக்கன் வாங்கி கொடுக்காம இந்த மாதிரி வீட்டிலேயே ஆரோக்கியமான முறையில கடைல கிடைக்கிற மாதிரியான டேஸ்ல செஞ்சு கொடுங்க. குழந்தைகள் ஈவினிங் டைம்ல ஸ்கூல் விட்டு வரும்போது அவங்களுக்கு இதை செஞ்சு கொடுத்தீங்கன்னா ரொம்ப குஷியாகிடுவாங்க.

குழந்தைகள் மட்டுமில்லாமல் வீட்ல இருக்கக்கூடிய பெரியவங்களும் கூட ரொம்ப குஷியாவாங்க. இந்த சுவையான ரெசிபியை ரொம்ப ஈஸியா வீட்ல செய்யலாம். ஒரு சிலருக்கு இதோட ரெசிபி தெரியாம இருக்கும் தெரியாதவங்க இதே செய்முறையில் மட்டும் முயற்சி செஞ்சு பாருங்க கண்டிப்பா உங்களுக்கு ஒரு பெர்பெக்ட் ஆன பாப்கான் சிக்கன் கிடைக்கும். இப்ப வாங்க இந்த சுவையான பாப்கான் சிக்கன் ரெசிபி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

Print
No ratings yet

பாப்கான் சிக்கன் | Popcorn Chicken Recipe In Tamil

பொதுவா அசைவ பிரியர்களுக்கு பாப்கான் சிக்கன், சிக்கன் ப்ரை இது எல்லாமே ரொம்ப ரொம்ப பிடிக்கும். அதுலயும் வீட்டிலேயே இந்த ரெசிபியை செஞ்சு கொடுத்தா சொல்லவா வேணும் எவ்வளவு வேணா சாப்பிடுவாங்க. சாப்பிட்டுக்கிட்டே இருப்பாங்க. சுவையான இந்த பாப்கான் சிக்கன் ரெசிபி செய்றது ரொம்ப ரொம்ப ஈசி. இதுக்கு நம்ம ஒரு பொடி மட்டும் தயார் செய்து வைக்கணும். அது இருந்தா போதும் நம்ம எப்ப வேணும்னாலும் நினைச்ச உடனே சிக்கன் வாங்கி இந்த பாப்கான் சிக்கன் செஞ்சுக்கலாம். அப்படியே கேப்சி ல கடையில கிடைக்கிற மாதிரி வீட்டிலேயே சூப்பரா செய்யலாம். சின்ன குழந்தைகளிலிருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருமே ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க. குழந்தைகள் ஈவினிங் டைம்ல ஸ்கூல் விட்டு வரும்போது அவங்களுக்கு இதை செஞ்சு கொடுத்தீங்கன்னா ரொம்ப குஷியாகிடுவாங்க.
Prep Time10 minutes
Active Time10 minutes
Total Time20 minutes
Course: snacks
Cuisine: Indian
Keyword: popcorn chicken
Yield: 4 People
Calories: 182kcal

Equipment

  • 1 பவுள்
  • 1 மிக்ஸி
  • 1 வாணலி

தேவையான பொருட்கள்

  • 1/2 கி எலும்பில்லாத சிக்கன்
  • 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  • 1/4 டீஸ்பூன் வெங்காய பவுடர்
  • 1/4 டீஸ்பூன் மாங்காய் பொடி
  • 1/2 டீஸ்பூன் மிளகு தூள்
  • 1/2 டீஸ்பூன் சர்க்கரை
  • 1/2 டீஸ்பூன் ஆர்கனோ
  • 1/2 டீஸ்பூன் கார்லிக் பவுடர்
  • 1 கப் மைதா மாவு
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு

செய்முறை

  • ஒரு மிக்ஸி ஜாரில் மிளகாய் தூள் வெங்காய பவுடர் மாங்காய் பவுடர், ஆர்கானோ, சர்க்கரை உப்பு கார்லிக் பவுடர் அனைத்தையும் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
  • சிக்கனை கழுவி சுத்தம் செய்து அதில் இந்த பொடியை சேர்த்து கலந்து வைத்துக் கொள்ளவும்.
  • பிறகு ஒரு பாத்திரத்தில் மைதா மாவு சேர்த்து உப்பு சேர்த்து கலந்து வைத்துக் கொள்ளவும்.
  • ஊற வைத்துள்ள சிக்கனை மைதா மாவில் பிரட்டி எடுத்து குளிர்ந்த தண்ணீரில் முக்கி எடுத்து மறுபடியும் மைதா மாவில் பிரட்டி எடுத்து சூடான எண்ணெயில் பொரித்து எடுத்தால் சுவையான பாப்கான் சிக்கன் தயார்.

Nutrition

Serving: 550g | Calories: 182kcal | Carbohydrates: 2.7g | Protein: 11g | Fat: 4.7g | Sodium: 62mg | Potassium: 138mg | Fiber: 14.5g | Vitamin A: 44IU | Vitamin C: 150mg | Calcium: 15mg | Iron: 9mg

இதனையும் படியுங்கள் : சிக்கன் கீமா ரெசிபி இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு பாருங்க!

-விளம்பரம்-