Advertisement
சைவம்

வாரம் ஒரு முறை ருசியான இந்த எள்ளு சாதம் இனி இப்படி செய்து பாருங்க! ஒரு தட்டு சாதமும் காலியாகும்!

Advertisement

எள்ளு என்றாலே அதில் உடலுக்குத் தேவையான பலவித நன்மைகள் இருக்கின்றன. பொதுவாக நம் உணவில் மற்ற பொருட்களை அதிகமாக சேர்த்துக் கொண்டாலும் எள்ளு வகைகளை பெருமளவு எடுப்பதில்லை. எள்ளை நாம் உணவில் எடுப்பதென்றால், ஒன்று எள்ளுருண்டை, அல்லது கொழுக்கட்டை இது போன்றுதான் சேர்த்துக் கொள்கிறோம்.

அன்றாட உணவில் எள்ளை அதிக அளவில் சேர்த்து கொள்வதில்லை. இந்த எள்ளில் இருந்து தான் நல்லெண்ணெய் தயாரிக்கப்படுகிறது. இந்த எண்ணெயை சமையலில் பயன்படுத்தும் பொழுது  நல்ல பலன்களை தருகிறது என்பது பலருக்கும் தெரியும். நல்லெண்ணெயை காலையில் ஒரு ஸ்பூன் அளவு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வெறும் வயிற்றில் எடுத்துக்கொள்ள உடலில் உள்ள எலும்புகள் அனைத்தும் வலுப்பெறும். அதுமட்டுமல்லாமல் வயிறு சுத்தமாகும்.

Advertisement

இதையும் படியுங்கள் : கொத்தமல்லி சாதம்

 இவ்வாறு எள்ளை ஏதேனும் ஒரு வகையில் உணவுடன் சேர்த்துக் கொள்வது என்பது மிகவும் நல்லது. அதற்காக இப்படி எள்ளு சாதம் செய்து சாப்பிட்டால் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். வாருங்கள் இதனை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

எள்ளு சாதம் | Sesame Rice Recipe In Tamil

Print Recipe
எள்ளு என்றாலேஅதில் உடலுக்குத் தேவையான பலவித நன்மைகள் இருக்கின்றன. பொதுவாக நம் உணவில் மற்ற பொருட்களை அதிகமாக சேர்த்துக் கொண்டாலும்எள்ளு வகைகளை பெருமளவு எடுப்பதில்லை. எள்ளை நாம் உணவில் எடுப்பதென்றால், ஒன்று எள்ளுருண்டை,அல்லது கொழுக்கட்டை இது போன்றுதான் சேர்த்துக் கொள்கிறோம். அன்றாட உணவில்எள்ளை அதிக அளவில் சேர்த்து கொள்வதில்லை. இந்த எள்ளில் இருந்து தான் நல்லெண்ணெய்தயாரிக்கப்படுகிறது. இந்த எண்ணெயை சமையலில் பயன்படுத்தும் பொழுது  நல்லபலன்களை தருகிறது என்பது பலருக்கும் தெரியும். நல்லெண்ணெயை காலையில் ஒரு ஸ்பூன் அளவுகுழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வெறும்
Advertisement
வயிற்றில் எடுத்துக்கொள்ள உடலில் உள்ள எலும்புகள்அனைத்தும் வலுப்பெறும். அதுமட்டுமல்லாமல் வயிறு சுத்தமாகும். இவ்வாறு எள்ளை ஏதேனும் ஒரு வகையில் உணவுடன் சேர்த்துக்கொள்வது என்பது மிகவும் நல்லது. அதற்காக இப்படி எள்ளு சாதம் செய்து சாப்பிட்டால் அனைவருக்கும்மிகவும் பிடிக்கும். வாருங்கள் இதனை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவின்மூலம் தெரிந்து கொள்வோம்.
Course LUNCH
Cuisine tamilnadu
Keyword Sesame Rice
Prep Time 5 minutes
Cook Time 10 minutes
Servings 4
Calories 29

Equipment

  • 1 கடாய்

Ingredients

  • 1 கப் வெள்ளை எள்ளு
  • 5 மிளகாய் வற்றல்
  • 1 மேசைக்கரண்டி வெள்ளை உளுத்தம் பருப்பு
  • குண்டு மணி அளவு பெருங்காயம்
  • 1 தேக்கரண்டி கல் உப்பு
  • 1 கப் வடித்த சாதம்

Instructions

  • எள்ளை சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும். மேலே குறிப்பிட்டுள்ள மற்ற பொருட்களை தயாராக எடுத்துக் கொள்ளவும்.
  • வாணலியில் எண்ணெய் ஊற்றாமல் எள்ளை போட்டு 4 நிமிடம் பொன்னிறமாகும் வரை வறுக்கவும். தீயை குறைத்து வைத்து கை விடாமல் வறுத்துக்கொண்டே இருக்கவும். எள்ளு பொரிந்ததும் ஒரு தட்டில் எடுத்துக் கொள்ளவும்.
  • வாணலியில் ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி பெருங்காயத்தை போட்டு பொரிக்கவும். பிறகு அதில் உளுத்தம் பருப்பு மற்றும் மிளகாய் வற்றல் போட்டு 2 நிமிடம் வறுக்கவும்.
  • வறுப்பட்டவுடன் எல்லாவற்றையும் எடுத்து ஒரு தட்டில் வைத்து ஆற விடவும். ஆறியதும் மிக்ஸியில் வறுத்த பெருங்காயம், மிளகாய் வற்றல், உளுத்தம் பருப்பு மற்றும் உப்பு சேர்த்து பொடி செய்துக் கொள்ளவும்.
  • பிறகு அதில் வறுத்த எள்ளை போட்டு மீண்டும் பொடி செய்து ஒரு டப்பாவில் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  • தேவையான போது ஒரு பாத்திரத்தில் சாதத்தை போட்டு எண்ணெய் ஊற்றி பிசைந்துக் கொள்ளவும். மேலே எள்ளு பொடியை தூவி சாதம் முழுவதும் படரும்படி கலந்து பரிமாறவும்.
  • சுவையான எள்ளு சாதம் தயார்.
     

Nutrition

Serving: 50g | Calories: 29kcal | Protein: 0.8g | Fat: 2.3g | Vitamin A: 2.6IU | Calcium: 62.3mg | Iron: 0.4mg
Advertisement
Prem Kumar

Recent Posts

ருசியான சிக்கன் மஞ்சூரியன் ரெஸ்டாரெண்ட் ஸ்டைலில் இப்படி ட்ரை பண்ணி பாருங்க! இதன் ருசியே தனி ருசி!

தற்போது காலநிலை குளிர்ச்சியாக இருப்பதால், மாலை வேளையில் வீட்டில் இருப்போர் சூடாக ஏதாவது செய்து கொடுக்க கேட்பார்கள். அப்படிப்பட்ட சமயத்தில்…

5 மணி நேரங்கள் ago

வீட்டில் தங்கம் சேர, அடகு நகை திரும்ப பெற இந்த ஒரு‌ பொருளை மட்டும் நகையுடன் சேர்த்து வைத்து பாருங்கள்!

தங்கம், வெள்ளி போன்ற ஆபரணங்கள் மகாலட்சுமியின் அடையாளமாக கருதப்படுகிறது. வீட்டில் எப்போதும் மகாலட்சுமி இருந்து கொண்டே இருக்க வேண்டும் என்பதால்…

6 மணி நேரங்கள் ago

சுவையான அரிசி உப்புமா நீர்ருண்டை இப்படி செய்து பாருங்க! எளிமையான காலை மற்றும் இரவு உணவு!

நீர்ருண்டை அப்படின்னு சொன்னால் 90ஸ் கிட்ஸ் எல்லாருக்குமே ரொம்பவே பிடிச்ச ஒரு மாலை நேர சிற்றுண்டி. இது ரொம்ப பழைய…

7 மணி நேரங்கள் ago

தித்திக்கும் சுவையில் மாம்பழ ரவை அல்வா,இப்படி செய்து பாருங்க!

இனிப்பு உணவு என்றாலே அனைவருக்கும் பிடித்த உணவாக தான் இருக்கும். அதிலும் முதலிடம் பிடிப்பது அல்வா என்றே சொல்லலாம். அல்வா…

8 மணி நேரங்கள் ago

ருசியான ஆலு மேத்தி சப்ஜி ரெசிபி இப்படி செஞ்சி பாருங்க! உருளைக்கிழங்கு வறுவல்,குருமா வைப்பது போலவே ரொம்ப சுலபம்!!

பொதுவா இந்த சப்பாத்தி பூரி போன்ற டிபன் வகைகளுக்கு ஏதாவது காரசாரமான சைடு டிஷ் இருந்தால் சாப்பிட ரொம்பவே நல்லா…

11 மணி நேரங்கள் ago

டீ பிரியர்கள், மசாலா டீ இப்படி செய்து பாருங்க? சுவையும், மணமும் அசத்தலாக இருக்கும்!!

இப்பொழுதைய நாட்களில் சாப்பாடு சாப்பிடாமல் கூட ஆண்கள் இருந்து விடுவார்கள் ஆனால் டீ குடிக்காமல் அவர்களால் இருக்க முடியாது. ஏன்…

11 மணி நேரங்கள் ago