- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 5
- Cuisine
- Indian, TAMIL
- Course
- evening, Side Dish
என்னதான் நம்ம வீட்ல போண்டா, பஜ்ஜி, பக்கோடா அப்படின்னு செஞ்சாலும் கடையில் கிடைக்கிற மாதிரி ரெசிப்பீஸ் வீட்ல செய்யணும். அப்படின்னு தான் ஆசைப்படுவோம் அதை சாப்பிடணும் அப்படின்னு ரொம்ப ரொம்ப ஆர்வமா இருப்போம் அந்த வகையில டீக்கடையில் கிடைக்கக்கூடிய தூள் பஜ்ஜி ரெசிபி எப்படி செய்வது என்று யோசித்து இருப்பீங்க. இதே செய்முறையில் செஞ்சு பாருங்க கண்டிப்பா டீக்கடையில் கிடக்கிற அதே தூள் பஜ்ஜி டேஸ்ட் கிடைக்கும். இந்த டேஸ்டான ரெசிபி கண்டிப்பா சின்ன குழந்தைகளிலிருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருக்குமே ரொம்ப பிடிக்கும்.
ஒரே ஒரு தடவை இதனை வீட்ல ட்ரை பண்ணி பாருங்க கண்டிப்பாக சூப்பரா வரும் கடையில கிடைக்கிற அதே டேஸ்ட்ல இருக்கும். சாம்பார் சாதம், ரசம் சாதம், பருப்பு சாதம், புளி சாதம், தக்காளி சாதம் அப்படின்னு எல்லாத்துக்கும் சைடு டிஷ் ஆக வச்சு சாப்பிடலாம். ரொம்ப முக்கியமா ஈவினிங் டைம்ல டீ காபியோட இந்த ரெசிபியை சாப்பிட்டீங்கன்னா கண்டிப்பா அட்டகாசமா இருக்கும். இந்த டேஸ்டான ரெசிபியை மிஸ் பண்ணாம கண்டிப்பா வீட்ல செஞ்சு சாப்பிட்டு பாருங்க. இந்த சுவையான டேஸ்டான தூள் பஜ்ஜிக்கு கண்டிப்பா எல்லாருமே அடிமை ஆகிடுவாங்க.
இதை ஒரு வாரத்துக்கு கூட நீங்க செஞ்சு வச்சுக்கலாம். நல்ல ஒரு டப்பால போட்டு மூடி வச்சுட்டீங்கன்னா மொறுமொறுப்பு தன்மை போகாமல் அப்படியே இருக்கும். கண்டிப்பா மிஸ் பண்ணாம இந்த தூள் பஜ்ஜி ரெசிபியை வீட்ல செஞ்சு பாருங்க இனிமேல் இந்த தூள் பஜ்ஜி சாப்பிடணும் போல இருந்துச்சுன்னா கடைக்கு போக அவசியமே இல்ல பத்தே நிமிஷத்துல வீட்ல செஞ்சுக்கலாம். வெங்காயம் நறுக்கறதுக்கு மட்டும்தான் டைம் ஆகும் மத்தபடி ரொம்ப ஈசியா சட்டுனு செஞ்சிடலாம். இப்ப வாங்க இந்த டீக்கடை தூள் பஜ்ஜி ரெசிபி வீட்லயே எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : டீக்கடை உருளைக்கிழங்கு போண்டா இந்த மாதிரி தான் செய்யணும்!!
Ingredients
Method
ஒரு பாத்திரத்தில் வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கி சேர்த்துக் கொள்ளவும்.
அதனுடன் கடலை மாவு அரிசி மாவு, உப்பு, பெருங்காயத்தூள், மிளகாய் தூள் கருவேப்பிலை சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
லேசாக தண்ணீர் தெளித்து பிசையவும் பிறகு சூடான எண்ணெயில் பிசைந்து வைத்த கலவையை உதிரியாக சேர்த்து பொரித்து எடுத்தால் சுவையான தூள் பஜ்ஜி தயார்.






