கடன் தீர்ந்து வீட்டில் பணம் சேர தை அம்மாவாசை அன்று நாம் செய்ய‌ வேண்டிய முக்கியமான விஷயங்கள்!

- Advertisement -

தை அமாவாசை அன்று நம் வீட்டில் செல்வ வளம் பெருக நாம் குலதெய்வத்தை வழிபட வேண்டும். நம் வீட்டில் மகாலட்சுமி கடாட்சம் உண்டாகவும் கடன் பிரச்சினைகள் தீரவும் கல் உப்பு வைத்து செய்யக்கூடிய ஒரு பரிகாரம் மிகவும் சக்தி வாய்ந்தது. தை அமாவாசை ஆனது பிப்ரவரி 9 வெள்ளிக்கிழமை வருவதால் இன்னும் விசேஷமானது. அம்மாவாசை அன்று நாம் செய்ய வேண்டிய சில முக்கியமான விஷயங்களையும் சக்தி வாய்ந்த கல்லுப்பு பரிகாரத்தையும் பற்றி இந்த பதிவில் பார்க்கப் போகிறோம்.

-விளம்பரம்-

அமாவாசை மற்றும் பௌர்ணமி நாளன்று பிரபஞ்சத்தில் சக்தி அதிகமாக இருக்கும் எனவே அன்று நாம் செய்யக்கூடிய அனைத்துமே நமக்கு நன்மையை அளிக்கக்கூடியது. பௌர்ணமி மற்றும் அமாவாசை அன்று நாம் செய்யக்கூடிய பரிகாரம் நமக்கு உடனே பலனை கொடுக்கும். தை அமாவாசை என்று பித்ரு தர்ப்பணம் என்பது மிகவும் முக்கியமான ஒன்று. தை அமாவாசை அன்று நம் முன்னோர்களுக்கு படையல் இட்டு வழிபட்டால் அவர்கள் கீழே வந்து நமக்கு ஆசி கொடுப்பார்கள்.

- Advertisement -

தை அமாவாசை அன்று செய்ய வேண்டிய சில விஷயங்கள்

வெள்ளிக்கிழமை என்பது மகாலட்சுமி கடாட்சம் கொண்ட நாளாகும். இந்த தை அமாவாசை வெள்ளிக்கிழமையில் வருவதால் இன்னும் விசேஷமானதாக கருதப்படுகிறது. இந்த அமாவாசை திதியானது பிப்ரவரி ஒன்பதாம் தேதி காலை 7:15 க்கு தொடங்கி அடுத்த நாள் பிப்ரவரி 10ஆம் தேதி அதிகாலை 3:53 மணி வரையில் இருக்கும். அமாவாசை திதியானது வெள்ளிக்கிழமை முழுவதுமாக இருப்பதால் அன்று முழுவதும் நாம் முன்னோர்களை நினைத்து வழிபடுவது மிகவும் நல்லது. தை அமாவாசை அன்று அப்பாக்களை இழந்த மகன்களும், கணவனை இழந்த மனைவிகளும் விரதம் இருந்து வழிபட்டால் அவர்களுடைய ஆசை முழுவதுமாக வந்து சேரும். விரதம் இருப்பவர்கள் காலை சீக்கிரமாகவே எழுந்து திதி கொடுக்கப் போகும் அழியங்களில் குளித்துவிட்டு தர்ப்பணம் கொடுக்க வேண்டும். முன்னோர்களுக்கு பிடித்த உணவுகளை படைத்து படைத்த உணவை முதலில் காக்கைகளுக்கு வைத்து காக்கை உண்ட பிறகு தான் வீட்டில் இருக்கும் அனைவரும் உண்ண வேண்டும். பிறகு முன்னோர்களுக்கு எள்ளும் தண்ணீரும் தர்ப்பணம் கொடுக்க வேண்டும். நம் வாழ்க்கையில் முன்னேறுவதற்கும் நமக்கு இருக்கும் அனைத்து தோஷங்களும் நீங்குவதற்கும் இந்த முன்னோர் வழிபாடு மிகவும் அவசியம்.

தை அமாவாசை அன்று பசுக்களுக்கு தானம் கொடுப்பது நமது கர்ம வினைகளுக்கு சிறந்ததாக அமையும். பசுக்களுக்கு கோதுமை உகந்த உணவு. அதுமட்டுமில்லாமல் சூரிய பகவானுக்கும் கோதுமை உகந்த உணவு எனவே பசுக்களுக்கு கோதுமையும் தவிலும் சேர்த்து தானமாக கொடுக்கலாம். அல்லது அரிசி கலந்த உணவு வாழைப்பழம் அகத்திக்கீரை என இவை அனைத்தையும் தானமாக கொடுக்கலாம். அதோடு நாம் அன்று ஏழை எளிய மக்களுக்கு உணவு அளிப்பதும் மிகவும் சிறந்தது. மனம் உருகி நாம் வழிபட்டால் நாம் நினைத்த காரியங்கள் அனைத்தும் நடக்கும்.

தை அமாவாசை அன்று செய்ய வேண்டிய கல் உப்பு பரிகாரம்

மதியம் ஒரு மணிக்குள் முன்னோர்களுக்கு படைப்பது தர்ப்பணம் கொடுப்பது அனைத்தையும் முடித்து விட வேண்டும் மாலை வேளையில் இப்பொழுது சொல்லப் போகின்ற இந்த கல் உப்பு பரிகாரத்தை செய்ய வேண்டும். இரவு 8 மணியில் இருந்து 9 மணி வரை மகாலட்சுமிக்கு உகந்த நேரம். எனவே அந்த நேரத்தில் நாம் இந்த கல் உப்பு பரிகாரத்தை செய்யலாம். இந்த நேரமானது சுப்ர பகவானின் ஆதிக்கம் நிறைந்த நேரம் சுக்கிர ஹோரையில் நாம் இந்த பரிகாரத்தை செய்யப்போவதால் இது மிகவும் விசேஷமானது. பிளாஸ்டிக் கிண்ணத்தை தவிர மற்ற ஏதாவது ஒரு கிண்ணத்தில் ஒன்றை கல் உப்பை நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு மஞ்சள் துணியில் ஒரு விரலி மஞ்சள் ,வெள்ளி பொருள்கள் அல்லது 1 ரூபாய் நாணயம்,5 ரூபாய் நாணயத்தை வைத்து கட்டிக் கொள்ளலாம். இந்த முடிச்சை கல் மறைத்து வைக்க வேண்டும். மறைத்து வைத்த கல் உப்பு கிண்ணத்தை நாம் பூஜை அறையிலும் வைக்கலாம் சமையல் அறையிலும் வைக்கலாம். பூஜை அறையில் வைத்தால் வடகிழக்கு திசை நோக்கி வைக்க வேண்டும். சமையலறையில் வைத்தால் தென்கிழக்கு திசை நோக்கி வைக்க வேண்டும்.

-விளம்பரம்-

நாம் இப்படி செய்தால் அந்த இடத்தில் வைத்திருக்கின்ற பொருளுக்கு தன வசியம் கிடைக்கும். நம் வீட்டில் உள்ள கடன் பிரச்சினைகள் அனைத்தும் நீங்கி செல்வ வளம் பெருகும். வெள்ளிக்கிழமை மகாலட்சுமி கடாட்சம் நிறைந்த நாள் என்பதால் நாம் வெள்ளிக்கிழமை அன்று வெள்ளை நிற பொருட்களை எல்லாம் உபயோகிக்கலாம். எனவே வெள்ளை நிறத்தில் உள்ள இந்த கல் உப்பை வைத்து பரிகாரம் செய்யும் பொழுது அதனுடைய பலன் நமக்கு சீக்கிரமாகவே கிடைத்துவிடும். அந்த கல் உப்பை ஒரு மாதத்திற்கு எடுக்காமல் அப்படியே வைத்து விடலாம் ஒரு மாதத்திற்கு பிறகு அதில் உள்ள நாணயங்களை ஏதாவது ஒரு கோவில் உண்டியலில் செலுத்தி விடலாம் அல்லது வெள்ளி பொருட்களை பயன்படுத்து இருந்தால் அதனை கழுவி மறுபடியும் அந்த முடிச்சிற்குள் வைத்து கட்டி அதே இடத்தில் வைத்து விட வேண்டும். ஒரு மாதத்திற்கு ஒரு முறையும் மாற்றலாம் அல்லது ஒவ்வொரு மாதத்திற்கும் வரும் அமாவாசை அன்று இதனை மாற்றி வைக்கலாம். இந்த தை அமாவாசை வெள்ளிக்கிழமை அன்று நம் குலதெய்வத்தை நினைத்து வழிபட்டால் நமக்கு நினைத்த காரியங்கள் அனைத்தும் நடக்கும்.

இதனையும் படியுங்கள் : உங்களுக்கு இருக்கும் கடன் தொல்லையில் இருந்து விடுபட உங்களிடம் சிறிது கல் உப்பு இருந்தால் போதும்!

-விளம்பரம்-