- Prep
- 5 min
- Cook
- 20 min
- Total
- 26 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- Breakfast, LUNCH
Ingredients
Method
முதலில் வெங்காயம், தக்காளி இரண்டையும் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
அடுத்து அரிசியை கழுவி அரை மணி நேரம் ஊறவைக்கவேண்டும்.
ஒரு பெரிய பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும், பட்டை, கிராம்பு, ஏலக்காய், போட்டு தாளிக்கவும்.
அடுத்து அதில் வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது, சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்கு வதங்கியதும், நறுக்கிய தக்காளி,புதினா, பச்சைமிளாகாய், சேர்த்து வதக்கவும்.
தக்காளி வதங்கி கரைந்ததும், மட்டன் சேர்த்து வதக்கவும்.
நன்கு வதங்கியதும், மிளகாய் தூள், தயிர், எலுமிச்சை சாறு, சேர்த்து 1 லிட்டர் தண்ணீர் ஊற்றி மூடி வைக்கவும்.
தண்ணீர் நன்கு கொதிக்கும் போது ஊறவைத்த அரிசியைப் போடவும்.
அரிசி பாதி வெந்ததும் தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
அரிசி வெந்ததும் நெய், டால்டா சேர்த்து கிளறி இறக்கவும்.
இப்பொழுது சுவையான தலப்பாக்கட்டு மட்டன் பிரியாணி தயார்.






