ஜோதிட ரீதியாகவும் சாஸ்திர ரீதியாகவும் கிரகங்களின் நிலைகள் அனைவருடைய வாழ்க்கை இனி நடக்கப்போகும் அனைத்து பலன்களையும் கணித்து சொல்லும். ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் கிரகங்கள் ராசியை மாற்றும் போது ஒரு சிலருடைய வாழ்க்கையில் நன்மைகளும் தீமைகளும் சேர்ந்து நடக்கும். அந்த வகையில் சனிபகவான் அவருடைய ராசியை இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்றுவார்.
சச ராஜயோகம்
தற்பொழுது தீபாவளி பண்டிகை அன்று அவருடைய சொந்த ராசியான கும்ப ராசியில் பயணிக்கிறார் மேலும் மகா புருஷ ராஜ யோகங்களில் ஒன்றான சசி ராஜயோகம் உருவாகியுள்ளது. 30 ஆண்டுகளுக்கு பிறகு தீபாவளி நாளில் இந்த சச ராஜயோகம் உருவாகப் போவதால் மூன்று ராசிக்காரர்களுக்கு இந்த ராஜயோகம் அதிர்ஷ்டத்தை கொடுக்கப் போகிறது. சனிபகவான் அவருடைய சொந்த ராசியான ராசியில் இருக்கும் போது தான் இந்த சச ராஜயோகம் உருவாகும். அந்த வகையில் இந்த ராஜயோகத்தால் அதிர்ஷ்டத்தை பெறப்போகும் சில ராசிக்காரர்களை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
ரிஷப ராசி
இந்த சச ராஜயோகம் ரிஷப ராசியில் பத்தாவது வீட்டில் உருவாகியுள்ளதால் இவர்களுக்கு வேலை மற்றும் தொழிலில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். நீண்ட நாட்களாக வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். பதவி உயர்வு கிடைக்கும் நல்ல சம்பள உயர்வும் கிடைக்கும். வணிகத்தில் இருப்பவர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் மற்றும் நல்ல லாபமும் கிடைக்கும்.
சிம்ம ராசி
சிம்ம ராசியில் இந்த ராஜயோகம் ஏழாவது வீட்டில் உருவாகியுள்ளதால் நீண்ட நாள் ஆசைகள் அனைத்தும் சிம்ம ராசியினருக்கு நிறைவேறும். திருமணம் ஆனவர்களுக்கு வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். வாழ்க்கையில் நல்ல மகிழ்ச்சியும் நிம்மதியும் கிடைக்கும். கூட்டுத் தொழில் செய்பவர்களுக்கு அதில் அதிக அளவில் லாபம் கிடைக்கும். வாழ்க்கையில் அனைத்து தேவைகளும் எளிதில் நிறைவேறும்.
மகர ராசி
மகர ராசியினருக்கு இரண்டாவது வீட்டில் இந்த சச ராஜயோகம் உருவாகுவதால் பொருளாதாரத்தில் நல்ல மாற்றம் கிடைக்கும் அதனால் வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்கும். வேலையில் நல்ல முன்னேற்றமும் புதிய நண்பர்களுடைய அறிமுகமும் கிடைக்கும். வாழ்க்கையில் இருக்கக்கூடிய அனைத்து பிரச்சினைகளும் தீர்ந்து நிம்மதி கிடைக்கும்.
இதனையும் படியுங்கள் : சனி மற்றும் ராகு பகவான் கொடுக்கக்கூடிய நட்சத்திர பரிவர்த்தன ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் கிடைக்கப் போகும் சில ராசிகள்!