குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவு செய்து கொடுக்க நினைத்தால் தினை இனிப்பு கஞ்சி இப்படி செஞ்சி பாருங்க!

- Advertisement -

பல நூற்றாண்டுகளாக நமது பாரம்பரிய சமையலில் தினை அரிசி பயன்படுத்தும் முறை இருந்து வருகிறது. தினைகளில் நார்ச்சத்து மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. தினையில் அரிசி, ராகியை விட அதிகளவு நார்ச்சத்து நிறைந்துள்ளது.அதிகளவு புரதச்சத்து நிறைந்துள்ளது. கார்போஹைட்ரேட் மிக குறைவான அளவே இருக்கிறது. தினையில் புரதம், மாவுச்சத்து, நார்ச்சத்து, கொழுப்புச்சத்து, கனிமச்சத்து, இரும்புச்சத்து மற்றும் பீட்டாகரோட்டின் நிறைந்திருக்கிறது. திணையில் வளமான புரதம் இருப்பதால், உடலுக்கு உடனடி ஆற்றல் கிடைக்கும். வாயு, கபத்தைப் போக்கும். எலும்புகள் நன்றாக உறுதியாகும். இதயத்தை பலப்படுத்தும். இந்த தினையை நம் உணவோடு சேர்த்து வந்தால், நம்முடைய கண் பார்வை நன்றாக தெரியும். கூடவே நம்முடைய முடி வளர்ச்சியும் அதிகரிக்கும். உங்கள் நாளை ஒரு இனிப்புடன் தொடங்க வேண்டும் என்று நினைத்தால் தினை இனிப்பு கஞ்சி செய்யுங்கள். இது ஒரு ஆரோக்கியமான உணவும் கூட.

-விளம்பரம்-

சிறுதானிய உணவுகளை சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இந்த தினை கஞ்சி உடலில் சேரக்கூடிய சர்க்கரை அளவை தடுத்து நல்ல ஆரோக்கியமான உடல் எடையையும் பராமரிக்கச் செய்கிறது. சிறுதானியங்களை குழந்தைகள் சாப்பிடுவதை தவிர்ப்பர். சுவையாக இருக்காது என்பர். ஆனால் அவற்றை அவர்களுக்கு பிடித்த விதத்தில் செய்து கொடுத்தால் சாப்பிடுவர். சிறுதானியங்களில் பல்வேறு வகையான ருசியான ரெசிபிகள் செய்யலாம். அந்த வவையில் சிறுதானியங்களில் ஒன்றான தினை அரிசியில் இனிப்பு கஞ்சி எப்படி செய்வது என்பது குறித்து பார்ப்போம். இந்த தினை கஞ்சி சுகர் பேஷண்ட்ஸ் மற்றும் உடல் எடை குறைப்பவர்களுக்கு இது ஒரு நல்ல தேர்வாக இருக்கும். இந்த கஞ்சி செய்வது மிகவும் சுலபம். குறிப்பாக மாலை நேரங்களில் குழந்தைகள் பள்ளி விட்டு வரும் போது இதை உணவாக செய்து கொடுக்க ஏற்றதாக இருக்கும்.

- Advertisement -
Print
No ratings yet

தினை இனிப்பு கஞ்சி | Thinai Sweet Kanji Recipe In Tamil

பல நூற்றாண்டுகளாக நமது பாரம்பரிய சமையலில் தினை அரிசி பயன்படுத்தும் முறை இருந்து வருகிறது. தினைகளில் நார்ச்சத்து மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. தினையில் அரிசி, ராகியை விட அதிகளவு நார்ச்சத்து நிறைந்துள்ளது. அதிகளவு புரதச்சத்து நிறைந்துள்ளது. கார்போஹைட்ரேட் மிக குறைவான அளவே இருக்கிறது. தினையில் புரதம், மாவுச்சத்து, நார்ச்சத்து, கொழுப்புச்சத்து, கனிமச்சத்து, இரும்புச்சத்து மற்றும் பீட்டாகரோட்டின் நிறைந்திருக்கிறது. திணையில் வளமான புரதம் இருப்பதால், உடலுக்கு உடனடி ஆற்றல் கிடைக்கும். வாயு, கபத்தைப் போக்கும். எலும்புகள் நன்றாக உறுதியாகும். இதயத்தை பலப்படுத்தும். இந்த தினையை நம் உணவோடு சேர்த்து வந்தால், நம்முடைய கண் பார்வை நன்றாக தெரியும். கூடவே நம்முடைய முடி வளர்ச்சியும் அதிகரிக்கும். உங்கள் நாளை ஒரு இனிப்புடன் தொடங்க வேண்டும் என்று நினைத்தால் தினை இனிப்பு கஞ்சி செய்யுங்கள்.
Prep Time15 minutes
Active Time15 minutes
Total Time30 minutes
Course: Breakfast
Cuisine: Indian
Keyword: Thinai Sweet Kanji
Yield: 3 People
Calories: 351kcal

Equipment

  • 1 பவுள்
  • 1 கடாய்
  • 1 பால் பாத்திரம்

தேவையான பொருட்கள்

  • 1 கப் தினை
  • 1/2 கப் நாட்டு சர்க்கரை
  • 1/2 கப் தேங்காய் துருவல்
  • 1 கப் பால்
  • நல்லெண்ணெய் தேவையான அளவு
  • 1/2 டீஸ்பூன் ஏலக்காய் தூள்

செய்முறை

  • முதலில் தினையை சுத்தம் செய்து சிறிதளவு தண்ணீர் விட்டு 1 மணி நேரம் வரை ஊற வைத்துக் கொள்ளவும்.
  • பால் பாத்திரத்தை அடுப்பில் வைத்து பாலை ஊற்றி ஏலக்காய் தூள் சேர்த்து நன்கு சுண்ட காய்ச்சிக் கொள்ளவும்.
  • ஒரு கடாயை அடுப்பில் வைத்து சர்க்கரை மற்றும் தண்ணீர் சேர்த்து சர்க்கரை பாகு செய்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  • ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து 1 கப்‌ அரிசிக்கு 4 கப்‌ தண்ணீர் விட்டு தினையை சேர்த்து நன்கு வேகவைத்து கொள்ளவும்.
  • தினை முக்கால் பாகம் வெந்ததும் சர்க்கரை பாகு, பால் சேர்த்து நன்கு கலந்து விடவும். பின் தேங்காய் துருவல் சேர்த்து நன்கு கலந்து அனைத்தும் ஒன்று சேர்ந்து வந்ததும் அடுப்பை அணைத்து விடவும்.
  • அவ்வளவுதான் சுவையான மற்றும் ஆரோக்கியமான தினை இனிப்பு கஞ்சி தயார். நல்லெண்ணெய் பிடித்தவர்கள் தினை கஞ்சி மேல் ஊற்றி சாப்பிடலாம்.

Nutrition

Serving: 400g | Calories: 351kcal | Carbohydrates: 6.2g | Protein: 12.3g | Fat: 4.3g | Potassium: 250mg | Fiber: 6.7g | Sugar: 3.1g | Vitamin A: 4IU | Calcium: 31mg | Iron: 8.9mg

இதனையும் படியுங்கள் : காலை டிபனுக்கு சூப்பரான தினை பால் பொங்கல் ஒரு முறை இப்படி செய்து பாருங்கள்!