உங்கள் மணி பர்ஸில் பணம் அடிக்கடி காலி ஆகிடுதா வீட்டில் இந்த பொருள்களை காலியாக விடாதீங்கள்!!

- Advertisement -

மாத துவக்கத்தில் சம்பள பணம் வங்கி கணக்கிற்கு வந்த உடனே ஷாப்பிங், உணவகம், திரைப்படம் என்று பணத்தைச் செலவு செய்ய மனம் ஆசைப்படும். ஆனால் நாட்கள் செல்லச் செல்ல இந்தச் சந்தோசம் காணாமல் போய், ஒரு வித சோகம் ஏற்படும். இதற்குக் காரணம் பணப்பற்றாக்குறை. பணம் இன்றைக்குப் பல பிரச்னைகளைத் தீர்க்கும் சாவியாக இருந்து வருகிறது. பணம் எப்போதும் ஒருவரின் கையில் தவழ்ந்து கொண்டிருக்க வேண்டுமென்றால் சில பொருட்களை நம்‌ வீட்டில் எப்போதும் காலியாக வைக்க‌கூடாது.

-விளம்பரம்-

வாஸ்து சாஸ்திரத்தில் எல்லாவற்றிலும் எல்லா பொருட்களுக்கும் சிறப்பு ஆற்றல் விவரிக்கப்பட்டுள்ளது. வீட்டிலுள்ள ஒவ்வொரு திசைக்கும் அறைக்கும், ஏன் ஒவ்வொரு பொருளுக்கும் திட்டவட்டமான விதிகள் உள்ளன. வாஸ்து சாஸ்திரத்திலும் பணம் பெற பல வழிகள் சொல்லப்பட்டுள்ளன. பல நேரங்களில் இரவு பகலாக உழைத்தாலும் வீட்டில் பணம் வருவதில்லை அல்லது பணம் வீட்டில் நிலைக்காது. வாஸ்து சாஸ்திரத்தின்படி, வீட்டில் வைக்கப்பட்டுள்ள காலிப் பொருட்கள் உங்கள் முன்னேற்றத்தில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும். அதனால் வீட்டில் காலியாக வைக்கக் கூடாத பொருட்கள் பற்றி பார்க்கலாம்.

- Advertisement -

உப்பு பாத்திரம்

நம்முடைய உணவில் அதிகம் பயன்படுத்தப்படும் உப்பு மகாலட்சுமியின் அம்சம் நிறைந்ததாக கருதப்படுகிறது. அந்த உப்பினை நாம் தினமும் கைகளால் எடுத்துதான் வணங்கி விட்டு சமையலுக்கு போட வேண்டும். அப்போதுதான் உணவுப்பொருட்கள் நம்முடைய வீட்டில் குறைவில்லாமல் இருக்கும். அதனுடன் பண வரவும் இருக்கும். அதுமட்டுமல்லாமல் இந்த உப்பு பாத்திரத்தை காலியாக வைக்க கூடாது. இந்த உப்பு பாத்திரம் காலியாவதற்கு முன்னரை அதனை நிரப்பிட வேண்டும்.

உணவு பாத்திரங்கள்

வெற்று உணவு பாத்திரங்கள் மற்றும் ஜாடிகள் சாதாரண பொருட்கள் அல்ல; அவை ஒரு வீட்டிற்குள் ஏராளமான மற்றும் நேர்மறை ஆற்றலுக்கான திறனைக் கொண்டிருக்கும் பாத்திரங்களாகக் கருதப்படுகிறது. அப்படிப்பட்ட உணவு பாத்திரங்களை காலியாக வைத்திருந்தால் வீட்டிற்குள் இருக்க வேண்டிய நேர்மறை ஆற்றலின் ஓட்டம் சீர்குலையும். உங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சியையும் செழிப்பையும் பராமரிக்க, தானியங்கள் வைக்கும் பாத்திரத்தை எப்போதும் நிரப்பியே வைக்க வேண்டும்.

குளியலறை வாளி

வாஸ்து சாஸ்திரத்தில், குளியலறை என்பது செல்வம் மற்றும் செழிப்பின் சின்னமானக் கருதப்படுகிறது. அதனால் குளியலறையில் காலி வாளியை வைக்கக்கூடாது. குறிப்பாக காலையில் எழுந்தவுடன், காலி வாளியைப் பார்த்தால், உங்கள் பாக்கெட்டுகள் காலியாகிவிடும். எனவே, வாளியில் சிறிது தண்ணீர் நிரப்பி வைக்கவும். அதே நேரத்தில், உடைந்த வாளியை வைத்திருக்கக்கூடாது. குளியலறையில் உள்ள வாளி அல்லது குவளையும் நல்லதாக இருப்பதை மட்டும் வைக்கவும். குளியலறையில் நிரப்பப்பட்ட வாளியை வைப்பதன் மூலம், நேர்மறை ஆற்றலை நமது வீடு முழுவதும் பரப்ப முடியும்.

-விளம்பரம்-

பர்ஸ்

பணமே இல்லாத பணப்பையைப் பயன்படுத்துவது வாஸ்துவில் மிகவும் மோசமானதாகக் கருதப்படுகிறது. பணம் இல்லாமல் பர்ஸை வைத்திருப்பது லட்சுமி தேவியை கோபப்படுத்துவதாகவும், அதனால் அந்த நபர் ஏழையாகி விடுவதாகவும் நம்பப்படுகிறது. காலியான பர்ஸை பயன்படுத்துபவர்கள் வாழ்நாள் முழுவதும் நிதி நெருக்கடியை எதிர்கொள்கின்றனர். அதனால் பர்ஸில் ஒரு ரூபாவாது கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும்.

பூஜையறை தண்ணீர் பாத்திரம்

பூஜையறையில் தண்ணீர் வைப்பது மங்களகரமானது என்றும், அது வீட்டை இயங்க வைக்கும் என்று சமய நூல்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. பூஜையறையில் செம்புப் பாத்திரத்தில் தண்ணீர் வைத்தால் சிறப்பான பலன் கிடைக்கும். அதே சமயம் பூஜையறையில் தண்ணீர்‌ பாத்திரத்தை காலியாக வைப்பது அபசகுணமாக கருதப்படுகிறது. பூஜை அறையில் தண்ணீர் நிரப்பிய பாத்திரத்தை வைத்தால் இறைவனின் தாகம் தீரும் என அனைவராலும் நம்பப்படுகிறது. பூஜை அறையில் அதன் இருப்பு ஆரோக்கியமான மற்றும் நேர்மறையான சூழலை மேம்படுத்துவதாக நம்பப்படுகிறது.

இதனையும் படியுங்கள் : வீட்டில் பணம்‌ பல மடங்கு பெருக, எப்பேர்ப்பட்ட கடனும் தீர வெறுமா ஒரு ரூபாய் கையில் இருந்தால் போதும்!

-விளம்பரம்-