வீட்டில் பணம் அதிகமாக சேர வேண்டும் என்றால் அது அந்த வீட்டில் உள்ள பெண்கள் நினைத்தால் தான் முடியும் பெண்கள் சம்பாதித்தாலும் சரி சம்பாதிக்க விட்டாலும் சரி பெண்கள் பொறுப்போடு நடந்து கொண்டால் தான் வீட்டில் பணம் நிலையாக நிலைத்திருக்கும். பெண்கள் பணத்தை சேமித்தால் தான் அந்த வீட்டில் லட்சுமி கடாட்சம் உண்டாகும் எனவே குடும்பத்தில் அதிகமாக பணம் சேர சமையல் அருகில் பெண்கள் செய்ய வேண்டிய ஒரு சில சேமிப்புகளை பற்றி பார்க்கலாம்.
பரிகாரம் செய்ய தேவையானவை

இந்த பரிகாரத்திற்கு செம்பினால் ஆன ஒரு சின்ன சொம்பு தேவைப்படும். அதில் நிறைய தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்து காய வைக்க வேண்டும் மார்கழி மாதத்தில் ஏதாவது ஒரு நாளை தேர்ந்தெடுத்து அதிகாலையில் பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து குளித்து முடித்துவிட்டு அந்த சொம்பை சமையல் அறையில் வைக்க வேண்டும். அந்த சொம்பு மற்றவர்களுடைய கண்களுக்கு தெரியக்கூடாது. மறைவாக ஏதாவது ஒரு உயரமான இடத்தில் தான் வைக்க வேண்டும். காலையில் பிரம்ம முகூர்த்த நேரத்தில் அந்த சொம்புக்கு மஞ்சள் குங்குமப்பொட்டு வைத்து சொம்பின் உள்ளே துவரம் பருப்பு வெந்தயம் வெள்ளை மொச்சை போன்றவற்றை சிறிதளவு போட்டு நிரப்ப வேண்டும்.
பணம் சேர சமையலறையில் சில்லறை காசுகள் வைக்க வேண்டிய இடம்
பிறகு வீட்டில் உள்ள குடும்ப தலைவியின் கையால் மூன்று ஒரு ரூபாய் நாணயங்களை அந்த சோம்பல் போட்டு ஏதாவது ஒரு இடத்தில் வைக்க வேண்டும். குலதெய்வத்தை நினைத்து இந்த பரிகாரத்தை பிரம்ம முகூர்த்த நேரத்தில் செய்ய வேண்டும். கையில் சில்லறை காசுகள் கிடைக்கும் போது அந்த சொம்பு சில்லறை காசு போட்டு வைக்க வேண்டும். அந்த சோம்பல் எவ்வளவு காசுகள் நிறைந்து இருக்கிறதோ உங்கள் வீட்டில் அந்த அளவிற்கு பண வரவு அதிகரிக்கும். தேவைக்கு ஏற்ப பணம் நிச்சயமாக உங்கள் வீட்டில் சேரும். பணம் நிறைய சேர்ந்த பிறகு அந்த சோம்பின் உள்ளே இருக்கக்கூடிய சில்லறை காசுகளை பூ காய்கறிகள் பால் போன்றவற்றை வாங்குவதற்கு வைத்துக் கொள்ளலாம் ஆனால் சொம்பில் உள்ள காசுகளையும் மொத்தமாக எடுக்கக் கூடாது. சோம்பல் போட்டு வைத்த வெள்ளை மொச்சை துவரம் பருப்பு வெந்தயம் போன்றவற்றை மூன்று மாதத்திற்கு ஒரு முறை மாற்ற வேண்டும் இந்த பரிகாரத்தை முழுமனதோடு செய்து வாருங்கள் நிச்சயமாக பணவரவு அதிகரிக்கும்.
இதனையும் படியுங்கள் : வீட்டில் எவ்வளவு பணம் கஷ்டம் இருந்தாலும் தீர்ந்து பணம் சேர்ந்து கொண்டே இருக்க வேண்டுமா ? இந்த ஒரு விளக்கு போதும்!



