இந்து பண்டிகைகளில் தீபாவளிக்கு என்று ஒரு தனி முக்கியத்துவமே உள்ளது 2024 வது வருடத்தில் அக்டோபர் 31ம் தேதி தீபாவளி வரப் போகிறது. அதற்கு பல நாட்களுக்கு முன்பாக இருந்தேன் புத்தாடைகள் வாங்குவது இனிப்பு பலகாரங்கள் செய்வது என வீடு களைகட்டி இருக்கும். அந்த வகையில் தீபாவளி அன்று விநாயகப் பெருமானையும் லட்சுமி தேவி யாரையும் வழிபடுவதன் மூலம் வீட்டில் மகிழ்ச்சியும் செல்வ செழிப்பும் உண்டாகும். அந்த வகையில் இன்னும் சில விஷயங்களை தீபாவளி என்று செய்வதன் மூலம் இவர்களுடைய அருளை முழுவதுமாக பெற முடியும். அதனைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

தீபாவளி அன்று காலையில் செய்ய வேண்டிய நான்கு விஷயங்கள்
வீடு சுத்தம்
தீபாவளி என்று வீட்டை சுத்தம் செய்து குப்பைகள் இல்லாமல் வைத்திருந்தால் வீட்டிற்கு லட்சுமி தேவியார் வருவார். பூஜை அறையை நன்றாக சுத்தம் செய்து அனைத்து தெய்வங்களுக்கும் அலங்காரம் செய்து விளக்கு ஏற்றி வைக்க வேண்டும்
துளசி நீர் வழங்குதல்
தீபாவளி என்று குளித்து முடித்த பிறகு துளசி செடிக்கு தண்ணீர் ஊற்ற வேண்டும் துளசி வழிபாடு தான் லட்சுமி தேவியார் வழிபாடு. இப்படி செய்யும் போது லட்சுமி தேவியார் மகிழ்ச்சி அடைவார் தீபாவளி என்று துளசி செடிக்கு அருகில் நெய் தீபம் ஏற்ற வேண்டும்.
துளசி தண்ணீர் தெளித்தல்
தண்ணீரில் துளசி இலைகளை சேர்த்து அந்த தீர்த்தத்தை வீடும் முழுவதும் தெளித்தால் வீட்டில் உள்ள எதிர்மறை சக்திகள் வெளியேறி நேர்மறை சக்திகள் அதிகரிக்கும்.
கோலம் போடுதல்
தீபாவளி அன்று வீட்டை மட்டுமில்லாமல் வீட்டிற்கு வெளியில் சுத்தமாக வைத்து வீட்டின் நுழைவு வாயிலில் அழகாக கோலம் போட்டு வைக்க வேண்டும் அது லட்சுமி தேவியை வீட்டிற்குள் வரவேற்கும்.
இதனையும் படியுங்கள் : மகாலட்சுமி தேவியின் அருள் கிடைப்பதற்கு என்ன செய்ய வேண்டும் ? வீட்டு வாசலில் இதை மட்டும் கட்டி விடுங்கள்!


