வீட்டில் பணம் மழையாக பொழிய கார்த்திகை திருநாளன்று இந்த ஒரு பொருளை மட்டும் வாங்குங்கள் போதும்!!

- Advertisement -

நம் வீட்டில் பணம் இருந்து கொண்டே இருப்பதற்காக கஷ்டப்பட்டு உழைக்கின்றோம். ஆனால் சம்பளம் வாங்கி வந்தவுடன் பணம் எந்த பக்கம் போகிறதே என்றே தெரியவில்லை. வருடம் முழுவதும் உழைத்து கொண்டே இருக்கின்றனர். இப்படி உழைத்தும் கூட வீட்டில் பணம் தாங்காமல் இருந்தால் ரொம்பவே கஷ்டப்படுவோம். இதற்கு என்ன தான் காரணம் என்று யோசித்து கொண்டே இருப்போம். கோவில் மற்றும் ஜோதிடரை நாடி செல்வோம். அப்படி நீங்கள் காசு கொடுத்து பரிகாரத்தை செய்தாலும் அதற்கான பலன் கிடைக்கவில்லை என்று வருந்துவர்களுக்கு இந்த பதவி பயனுள்ளதாக இருக்கும். கையில் காசு இருந்தாலும் பையில் தங்கலையே என்று இன்றைக்கு பலரும் கவலைப்படுகின்றனர். வருமானத்தை விட செலவுகள்தான் அதிகம் இருக்கிறது. வீட்டில் செல்வம் நிலைத்திருக்க வருமானம் பெருக கார்த்திகை நாளில் என்ன‌ செய்ய‌ வேண்டும் என இந்த பதிவில் பார்க்கலாம்.

-விளம்பரம்-

கார்த்திகை தீபம்

இந்து மதத்தை பின்பற்றும் மக்கள் பிற பண்டிகையைப் போன்று “கார்த்திகை தீபத்திருநாள்” மிகவும் மகிழ்ச்சியுடன் கொண்டாடுகின்றனர். இந்நாளில் மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் விளக்கேற்றி சிவனை வழிபடுவது வழக்கம். இந்நாளில், ‘திருவண்ணாமலை தீபம்’ மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. அதுபோல் இந்நாளில், அண்ணாமலையார் கோயில் மலை உச்சியில் ‘மகாதீபம்’ ஏற்றப்படும். இந்த நாளில் பௌர்ணமி தினமும் சேர்ந்து வருவதால் இந்த நாளில் நாம் சில விஷயங்களை மேற்கொள்ளும் பொழுது எப்பேர்ப்பட்ட துன்பங்களாக இருந்தாலும் அது விலகி குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும்.

- Advertisement -

கார்த்திகை தீப வரலாறு

படைத்தல் தொழிலைச் செய்யும் பிரம்மனும், காத்தல் தொழிலைச் செய்யும் விட்டுணுவும் நானே பெரியவன் என்று வாதாடிப் பல வருடங்கள் போரிட்டனர். சிவபெருமான் சோதிப்பிழம்பாகத் தோன்றினார். அடியையும் முடியையும் தேடும்படி அசரீரி கூறியது. இருவரும் அடிமுடி தேடிக் காணமுடியாமல் சிவபெருமானே முழுமுதற் கடவுள் என்று ஏற்றுக்கொண்டனர். அவர்கள் இருவரும் தாம் கண்ட சோதியை எல்லோரும் காணும்படி காட்டியருள வேண்டும் என்று விண்ணப்பிக்க அவர் திருக்கார்த்திகை நட்சத்திரத்தன்று காட்டியருளினார். இந்தத் தத்துவத்தை விளக்குவதே கார்த்திகை திருநாளாகும். இந்த நாளில் நாம் சிவபெருமானையும், பெருமாளையும் நினைத்து விரதம் மேற்கொள்ளும் பொழுது நாம் நினைத்த காரியங்கள் அனைத்தும் வெற்றி பெற ஆரம்பிக்கும்.

எத்தனை விளக்குகள் ஏற்ற‌ வேண்டும்?

இந்த நன்னாளில், மாலையில் அந்தி சாயும் நேரத்தில், உங்கள் வீட்டில், எவ்வளவு விளக்குகளை ஏற்றி வைக்கமுடியுமோ, அத்தனை விளக்குகளையும் ஏற்றி வைத்து இறைவனை வணங்கினால் எல்லா வளங்களும் கிடைக்கும். குறைந்தது ஒன்பது, இருபத்தேழு அல்லது நூற்றியெட்டு என்ற‌ எண்ணிக்கையில் விளக்கு ஏற்ற வேண்டும்.

இந்த நாளில் வாங்க வேண்டிய முக்கியமான பொருட்கள்

பொதுவாக ஞாயிற்றுக்கிழமை என்பது சூரிய பகவானுக்கு உரிய நாளாகும். அதுமட்டுமல்லாமல், இந்த நாளில் பௌர்ணமி தினமும் சேர்ந்து வருவதால் கோதுமையால் ஆன ஒரு பொருளை நமது வீட்டிற்கு வாங்கி வரலாம். அல்லது கோதுமையால் ஆன பொருட்களை மற்றவர்களுக்கு தானமாக அளிக்கலாம்.

-விளம்பரம்-

லட்சுமிதேவி வெள்ளை நிற பொருட்களில் நிரம்பி இருக்கிறார் என்பதால் வெள்ளை நிறத்தில் உள்ள‌ சர்க்கரை அல்லது உப்பு போன்ற பொருட்களை வாங்கி வழிபடலாம்.

வெல்லம், மஞ்சள் மற்றும் ‌குங்குமம் ஆகியவை மகாலட்சுமி தேவி வாசம் செய்யும் பொருட்களாக பார்க்கப்படுவதால் இந்த பொருட்களை கார்த்திகை திருநாளன்று வாங்கும் போது உங்களுக்கும், உங்கள் வீட்டிலும் மகிழ்ச்சி, செழிப்பு ஏற்படும்.

இதனையும் படியுங்கள் : வீட்டில் இருக்கும் வறுமையை விரட்டி அடித்து, பணம் வரவு அதிகரிக்க இப்படி மட்டும் தீபம் ஏற்றுங்கள் மோதும்!

-விளம்பரம்-