இந்த ‌பொருட்களை மறந்தும் கூட கடனாக வாங்கி விடாதீர்கள்! எதிர் பார்க்காத வறுமை தேடி வரும்!

- Advertisement -

கடன் வாங்குவது என்பது எந்த காலத்திலும் தவறானதாக கூறப்படுவதில்லை. கடன் அன்பை முறிக்கும் என்பது பழமொழியாக இருந்தாலும், பல நேரங்களில் அது உண்மையாகவே உள்ளது. ஆனால் எந்த பொருளை கடன் வாங்குகிறோம் என்பதில் கவனமாக இருக்கவேண்டியது அவசியம். சில பொருட்களை கடன் வாங்குவதன் மூலம், அவை நமது வாழ்வில் நிரந்தர வறுமையை ஏற்படுத்தும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த பொருட்களை பிறரிடம் இருந்து வாங்குவது அல்லது அவர்களுக்கு தெரியாமல் எடுப்பது என்பது, கெட்ட நேரத்தை நம்மளை நோக்கி அழைத்துவரும்.

-விளம்பரம்-

நம்மில் பலருக்கு மற்றவர்களிடம் கடனாக வாங்கும் பழக்கம் இருக்கும். ஆனால் கடன் வாங்கினால், அன்பு முறிவது மட்டுமின்றி, நம்மைத் தேடி வறுமையும் வரும் என்பது நமக்கு தெரியமலேயே போய்விடுகிறது. அதுவும் குறிப்பிட்ட பொருட்களை கடனாக வாங்கினால், வறுமை நிலைக்கு தள்ளப்படுவோம். எனவே மற்றவர்களிடம் இருந்து எந்த பொருட்களை வாங்கினால், வறுமை நம்மை தேடி வரும் என தெரிந்துக் கொள்வோம்…!

- Advertisement -

பேனா

பெரும்பாலும் மக்கள் அவசரமாக பேனாவை வைத்திருக்க மறந்துவிடுகிறார்கள். அவர்களுக்குத் தேவைப்படும்போது, அவர்கள் மற்றவர்களிடம் பேனாவைக் கேட்கிறார்கள். பல சமயங்களில் பேனாவைக் கேட்டுவிட்டு திரும்ப மறந்துவிடுவார்கள். ஒருவரிடம் பேனாவை வாங்கி, அதை திருப்பி கொடுக்காமல் அப்படியே வைத்துக் கொண்டால், அந்த பொருள் மிகவும் மோசமான வறுமை மற்றும் அவமானத்தை சந்திக்க வழிவகுக்கும். அதுமட்டுமல்லாமல் நாம் வைத்திருக்கும் பேனா நம்முடைய நல்ல மற்றும் கெட்ட செயல்களை கண்காணிக்கிறது. அதனால் தவறுதலாக கூட யாருக்கும் தானம் செய்யாதீர்கள். மற்றவரின் பேனாவை உங்களுடன் வைத்துக் கொள்ளாதீர்கள்.

படுக்கை

வாஸ்து விதிப்படி, படுக்கையறையை யாருடனும் பகிர்ந்து கொள்ளவோ அல்லது நீங்கள் படுங்கள் என்றோ அனுமதிக்க கூடாது. இவ்வாறு செய்வதால் லக்ஷ்மி தேவி உங்கள் மீது கோபப்படுவதோடு, நீங்கள் நிதி பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். அதனுடன் கணவன், மனைவிக்கிடையே அடிக்கடி சண்டையை வரவழைப்பதோடு, உறவு முறிவடையவும் வாய்ப்புள்ளது. கை கடிகாரம் வாஸ்து சாஸ்திரத்தில் கடிகாரத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. கடிகாரம் ஒரு நபரின் நல்ல மற்றும் கெட்ட நேரங்களுடன் தொடர்புடையதாகக் கருதப்படுகிறது. நாம் மற்றவர்களிடம் கை கடிகாரம் வாங்கி பயன்படுத்தி வந்தால், அது வறுமை மற்றும் வாழ்வில் எதிலும் தோல்வியை சந்திக்க வழிவகுக்கும். அதுமட்டுமல்லாமல் நாம் இதை செய்தால், அது நம்முடைய தொழில் வாழ்க்கையை நேரடியாக பாதிக்கும். எனவே யாரிடமும் கைக்கடிகாரத்தை வாங்காதீர்கள்.

உடைகள்

சிலசமயம் நம்முடைய துணிகளை துவைக்காமல் அப்படியே போட்டு விடுவோம். அவசரமாக வெளியே செல்ல வேண்டும் என்றவுடன் நம்முடைய நண்பர்கள் அல்லது உடன் பிறந்தவர்கள் உடையை அணிந்து விட்டு வெளியே செல்வோம். ஆனால் அது மிகவும் தவறான ஒன்றாகும். குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் உடைகளை பகிர்ந்து கொள்வது என்பது நல்ல ஐடியாவாக இருக்கலாம். ஆனால் அப்படி உடைகளை பகிர்ந்து கொண்டால், அது நிதி பிரச்சனைகளை உண்டாக்கும். அடுத்தவர் உடைகளை நாம் வாங்கிப் போட்டுக் கொண்டால், அவர்களுடைய துரதிருஷ்டம் நம்மிடத்தில் ஒட்டிக் கொள்ளும்.

-விளம்பரம்-

கைக்குட்டை

பொதுவாக கைக்குட்டை அதிகமாக இரவல் பெறும் பொருட்களுள் ஒன்று. திடீரென அவசர தேவை ஏற்பட்டால் சற்றும் யோசிக்காமல் நமது நண்பர்களுடைய கைக்குட்டையை கடனாகப் பெற்று விடுகிறோம். அவர்கள் பயன்படுத்திய கைக்குட்டையை நாம் பயன்படுத்துவதால் நமக்கு தரித்திரம் வந்து சேரும். இது ஆரோக்கிய ரீதியாகவும் கிருமி பாதிப்பை உண்டாக்கும். கைக்குட்டையை மற்றவர்களிடம் வாங்கினால், அதனால் கிருமிகள் மட்டும் பரவுவதில்லை, மிகவும் மோசமான வறுமையும் தான் ஏற்படும்.

money

பணம்

நம்மிடமிருந்து கடன் வாங்குபவர்கள் அதிகமாக திருப்பி தருவதே இல்லை. பிடி இல்லாமல் கடன் கொடுத்தால் பணம், உறவு, நட்பு என அனைத்தையும் இழக்க நேரிடும். கடன்‌ கொடுத்தால் தான் பிரச்சினை என்றால் மற்றவர்களிடம் கடனாக பணம் வாங்கினாலும் பிரச்சினை தான். அதனால் அவர்களுடனான உறவு முறிவடைவது மட்டுமின்றி, பணம் வாங்கும் போது வாங்கியவரின் கையின் வழியே துரதிர்ஷ்டமும் தான் வரும். அதனால் மேலும் பல சிரமங்களை அனுபவிக்க நேரிடும்.

இதனையும் படியுங்கள் : வெறும் 7 நாட்களில் கடன் தொல்லையிலிருந்து விடுபட்டு வீட்டில் பணம் சேர நாம் செய்ய வேண்டியவை!