ஆம்லேட்ல என்ன துவையல் ஆம்லேட்னு யோசிக்கிறீர்களா? நல்ல பிரஷ்ஷா துவையல் அரைச்சு அதுல இந்த ஆம்லெட் செஞ்சு பாருங்க கண்டிப்பா எல்லாருக்கும் ரொம்ப ரொம்ப பிடிக்கும். துவையல் வச்சு எப்படி ஆம்லேட் செய்வது என்று கவலையே பட வேணாம் இந்த துவையல் அரைக்கிறதுக்கு குறைவான பொருட்கள் மட்டுமே போதுமானது. தேங்காய் காய்ந்த மிளகாய் புளி எல்லாமே வச்சு ஒரு சூப்பரான காரசாரமான துவையல் அரைச்சு அதுல முட்டையை கலந்து இந்த ஆம்லெட் செஞ்சு பாருங்க. சுவை அட்டகாசமா இருக்கும்.
நிறைய வெங்காயம் போட்டு ஆம்லெட் செஞ்சு சாப்பிட்டு இருப்பீங்க கலக்கி சாப்பிட்டு இருப்பீங்க. ஆனா இந்த துவையல் ஆம்லெட் ரொம்பவே வித்தியாசமானதா இருக்கும். இதுவரைக்கும் இப்படி ஒன்னு நீங்க கேள்விப்பட்டிருக்கவே மாட்டீங்க. சுவையான இந்த ஆம்லேட் ரெசிபி சாம்பார் சாதம் காரக்குழம்பு ரசம் சாதம் வெரைட்டி சாதம் புளி சாதம் லெமன் சாதம்னு எல்லாத்துக்குமே சூப்பரான காமினேஷனா இருக்கும். ஆம்லெட் லவ்வர்ஸ் இருந்திங்கனா கண்டிப்பா வித்தியாசமா இந்த துவையல் ஆம்லெட் செஞ்சு பாருங்க. இது ரொம்பவே வித்தியாசமான டேஸ்ட்ல தான் இருக்கும். ஒரு தடவை இதை செஞ்சு பாத்துட்டீங்கன்னா அடிக்கடி செய்வீங்க.
வெறும் ஆம்லெட் சாப்பிட்டு சாப்பிட்டு போர் அடிச்சு போச்சுன்னா கண்டிப்பா இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு வீட்டுல இருக்க எல்லாருக்கும் கொடுத்து பாருங்க. இது நம்ம கரண்டி ஆம்லெட் மாதிரி செய்யப் போறோம் அதனால பஞ்சு மாதிரி ஒரு சூப்பரான டேஸ்ட்ல நமக்கு கிடைக்கும். இந்த டேஸ்டான சுவையான துவையல் ஆம்லெட் ரெசிபி கண்டிப்பா எல்லாருமே செஞ்சு சாப்பிட வேண்டிய ஒன்னு. சுவையான இந்த ரெசிபியை கண்டிப்பா வீட்ல இருக்கவங்க கூட சேர்ந்து சாப்பிட்டு என்ஜாய் பண்ணுங்க. இது செய்றதுக்கு ரொம்ப ரொம்ப குறைவான நேரம் மட்டுமே போதுமானது.
குறைவான பொருட்கள் போதுமானது இது செய்றதுக்கு நிறைய நேரம் எல்லாம் எடுக்காது. குழந்தைகளுக்கு லஞ்ச் பாக்ஸுக்கு ஏதாவது சிம்பிளான ரெசிபி கொடுத்து விடும்போது இந்த ஆம்லெட் செஞ்சு கொடுத்து விடுங்க கண்டிப்பா இந்த ஆம்லெட் காகவே சாப்பாட்ட சாப்பிட்டு முடிச்சிட்டு தான் வருவாங்க. குழந்தைகளுக்கு மட்டுமில்லாம வீட்ல இருக்குற எல்லாருமே இத லஞ்ச் பாக்ஸ்க்கு கொண்டு போகலாம். சூடா சாப்பிட்டால் இன்னுமே டேஸ்டா இருக்கும். இப்ப வாங்க இந்த வித்தியாசமான துவையல் ஆம்லெட் எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.
துவையல் ஆம்லேட் | Thuvaiyal Omelette Recipe In Tamil
தேவையான பொருட்கள்
- 1/4 கப் தேங்காய் துருவல்
- 4 பல் பூண்டு
- 4 வர மிளகாய்
- 1 டீஸ்பூன் சீரகம்
- 1 துண்டு புளி
- 1 கொத்து கறிவேப்பிலை
- உப்பு தேவையான அளவு
- எண்ணெய் தேவையான அளவு
- 2 முட்டை
செய்முறை
- ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து பூண்டு காய்ந்த மிளகாய் சீரகம் தேங்காய் துருவல் புளி கருவேப்பிலை சேர்த்து நன்றாக வறுத்து ஆற வைத்து மிக்ஸி ஜாரில் சேர்த்துக் கொள்ளவும்.
- சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரைத்து ஒரு பாத்திரத்திற்கு மாற்றி வைத்துக் கொள்ளவும்.
- அதிலிருந்து இரண்டு டேபிள் ஸ்பூன் அளவிற்கு துவையலை எடுத்து ஒரு முட்டையை உடைத்து ஊற்றி கலந்து கொள்ளவும்.
- தாளிப்பு கரண்டியில் எண்ணெய் சேர்த்து முட்டையை சேர்த்து இரண்டு பக்கமும் வேக வைத்து எடுத்தால் துவையல் ஆம்லேட் தயார்.
Nutrition
இதனையும் படியுங்கள் : மொறுமொறுன்னு குண்டு குண்டா முட்டை போண்டா நம்ம வீட்டிலயே இப்படி செய்து பாருங்க!