நவகிரகங்களில் மிகவும் நியாயமான நேர்மையான கிரகம் தான் சனிபகவான். நவகிரகங்களிலேயே மிக மெதுவாக நகரக்கூடிய கிரகமான சனி பகவான் 2025 இல் மார்ச் 28ஆம் தேதி கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு மாறப் போகிறார். கும்ப ராசியில் பூரட்டாதி நட்சத்திரத்தில் பயணம் செய்து கொண்டிருக்கும் சனி பகவான் ராசி மாற்றத்திற்குப் பிறகு ஒரு சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுப்பார் அந்த ராசிக்காரர்களை பற்றி பார்க்கலாம்.
ரிஷப ராசி

ரிஷப ராசிக்காரர்களுக்கு சனிபகவானின் நட்சத்திர பெயர்ச்சியால் நிறைய அதிர்ஷ்டமான பலன்கள் சாதகமான பலன்கள் கிடைக்கும். வணிகத்தில் வேலை செய்து கொண்டிருப்பவர்களுக்கு முன்னேற்றமும் நிறைய பணம் சம்பாதிக்கும் வாய்ப்பு கிடைக்கும். வேலை பார்க்கும் இடத்தில் உங்களுடைய வேலை மதிக்கப் பட்டு உங்களுடைய மரியாதை அதிகரிக்கும். உங்களுடைய குடும்ப தேவைகளை நிறைவேற்றுவதற்கான தேவையான பணம் கிடைக்கும் நீண்ட நாட்களாக தாமதப்பட்டு வந்த வேலைகள் விரைவில் முடிவடையும் சனி பகவானுடைய அருளால் வெளிநாடு செல்லும் கனவு உங்களுக்கு நனவாகும்.
சிம்ம ராசி

சிம்ம ராசிக்காரர்களுக்கு சனிபகவானின் நட்சத்திர மாற்றம் நிறைய பொருளாதார மாற்றத்தை கொடுக்கும். வணிகத்தில் இருப்பவர்களுக்கு கூட்டுத் தொழில் செய்பவர்களுக்கு அதிக லாபம் கிடைக்கும். காதல் வாழ்க்கையில் இருந்து வந்த அனைத்து பிரச்சனைகளும் தீர்ந்து போகும். நிதி நிலையில் பெரிய மாற்றங்களில் ஏற்படும் குடும்பத்தில் நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பீர்கள். வேலையில் பிடிப்பு அதிகரித்து உங்களுக்கு பிடித்த அனைத்து விஷயங்களையும் செய்வீர்கள். உங்களுக்கு இருந்த பண தடைகள் கடன் பிரச்சினைகள் அனைத்தும் நீங்கும்.
கன்னி ராசி

கன்னி ராசிக்காரர்களுக்கு சனிபகவானின் மாற்றத்தால் வாழ்க்கையில் பல அதிர்ஷ்டமான விஷயங்கள் நடக்கும். உடல் ரீதியான மன ரீதியான பிரச்சனைகள் தீரும். வேலை சம்பந்தமாக இருந்து வந்த பிரச்சனைகள் அனைத்தும் நீங்கி சிறப்பாக செயல்படுவீர்கள். விளையாட்டுப் போட்டிகளில் சாதிக்கும் வாய்ப்பு அதிகம். திருமண வாழ்க்கையில் இருந்து வந்த அனைத்து பிரச்சனைகளும் நீங்கி கணவன் மனைவிக்கு இடையே ஒற்றுமை நீடிக்கும் மகிழ்ச்சியான சூழலும் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் இருந்து வந்த கஷ்டங்கள் அனைத்தும் குறையும்.
இதனையும் படியுங்கள் : சனிபகவானின் வக்ர நிவர்த்தியால் ஒளிமயமான எதிர்காலத்தை பெறப்போகும் ராசிகள்!


