மகாலட்சுமி தேவி இருக்கின்ற இடத்தில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். மகாலட்சுமியின் அம்சம் ஒரு இடத்தில் இல்லை என்றால் அந்த இடத்தில் பல பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. அனைத்து பிரச்சினைகளுக்கும் காரணமாக இருப்பது பணம் தான். அந்த பண பிரச்சனையை சரி செய்ய மகாலட்சுமி தேவியின் அருள் முழுவதுமாக வேண்டும். மகாலட்சுமி தேவியாருடைய அருளை முழுவதுமாக பெறுவதற்கு நிறைய வழிகள் உள்ளது அந்த வகையில் மகாலட்சுமியினுடைய அருளை முழுவதுமாக பெறுவதற்கு செய்ய வேண்டிய ஒரு பரிகாரத்தைப் பற்றி இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் பார்க்கலாம்.
பரிகாரம் செய்யும் முறை
இந்த பரிகாரத்தை வியாழக்கிழமை அன்று செய்வது நல்லது. வியாழக்கிழமை இரவு தூங்குவதற்கு முன்பாக ஒரு பிங்க் நிற பேனாவை எடுத்து உங்களுடைய வலது கையில் ‘ஸ்ரீம்’ என்ற வார்த்தையை எழுதிக் கொள்ளுங்கள். நன்றாக அழுத்தி எழுதி கொள்ளுங்கள் ஏனென்றால் மறுநாள் காலையில அது தெரியும் படி இருக்க வேண்டும். தூங்கி எழுந்தாலும் கலைந்து போகாது அளவிற்கு அந்த வார்த்தையை கையில் எழுதிக் கொள்ள வேண்டும்.
மகாலட்சுமி ஆசிர்வாதத்தை கொடுக்கும் வார்த்தை
அந்த வார்த்தையை எழுதிவிட்டு இரவு தூங்க செல்ல வேண்டும் மறுநாள் காலை வெள்ளிக்கிழமை எழுந்தவுடன் நீங்கள் கண்விழித்து பார்க்கும்போது உங்களுடைய உள்ளங்கையை தான் முதலில் பார்க்க வேண்டும். ஸ்ரீம் என்ற வார்த்தையை வெள்ளிக்கிழமை காலையில் எழுந்தவுடன் பார்ப்பதால் மகாலட்சுமி தேவியின் உடைய ஆசீர்வாதம் உங்களுக்கு முழுமையாக கிடைக்கும். பேசு இரண்டு உள்ளங்கைகளையும் ஒன்றாக சேர்த்து வைத்து பார்க்க வேண்டும். முதலில் உங்களுடைய கால்களை தரையில் வைப்பதற்கு முன்பாக பூமாதேவியை தொட்டு வணங்கி விட்டு பிறகு காலை கிழக்கு நோக்கி பார்த்தவாறு எடுத்து வைக்க வேண்டும். பேசு காலை குளித்து முடித்துவிட்டு பூஜை அறையில் ஆறு மணிக்கு முன்பாகவே பிரம்ம முகூர்த்தத்தில் விளக்கு ஏற்றி மகாலட்சுமியை வீட்டிற்குள் வர வைக்க வேண்டும்.
பரிகாரத்தின் பலன்கள்
மகாலட்சுமி உடைய அம்சம் முழுவதுமாக கிடைக்க வேண்டும் பண பிரச்சினைகள் அனைத்தும் தீர வேண்டும் என்றால் மனதார பூஜை அறையில் அமர்ந்து வேண்டிக்கொள்ள வேண்டும். மகாலட்சுமி தேவியுடைய அருள் முழுவதுமாக கிடைக்க வேண்டும் என்று மனதார முழு நம்பிக்கையோடு வேண்டிக் கொள்ளுங்கள். மூன்று முதல் நான்கு வாரங்களில் உங்களுடைய வீட்டில் பண கஷ்டம் தீர்ந்து மகாலட்சுமியின் உடைய அம்சம் நிறைந்து வீடு மகிழ்ச்சியாக காணப்படும்.
இதனையும் படியுங்கள் : மகாலட்சுமிக்கு உங்களை பிடிப்பதற்கும், உங்கள் வீட்டில் நிரந்தரமாக தங்குவதற்கும் இதை மட்டும் பண்ணுங்க!