குறைந்த செலவில், குறைவான நேரத்தில் சமைக்கும் உணவு தான் சட்னி. இதை பெரும்பாலும் நாம் இட்லி, தோசை, சப்பாத்தி ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிடுவோம். அப்படி எளிமையாக தயார் செய்யப்படும் சுண்டைக்காய் சட்னி எப்படி செய்வது என இந்த தொகுப்பில் பார்க்கலாம். தினமும் நாம் காலை உணவாக சாப்பிடும் இட்லி, தோசை போன்றவற்றிற்கு தேங்காய் சட்னி, கார சட்னி, சாம்பார் என்று செய்ததே செய்து அலுத்து விட்டதா? இதனை தவிர வேறு ஏதாவது சட்னியை செய்து தருமாறு வீட்டில் உள்ளவர்கள் கேட்டால் இந்த சுண்டைக்காய் சட்னியை செய்து கொடுங்கள். பின் இதனையே அடிக்கடி செய்து தருமாறு வீட்டில் இருப்பவர்கள் சொல்லும் அளவிற்கு அதன் சுவை அபாரமாக இருக்கும்.
கசப்பு சுவை நிறைந்த பொருட்கள் ஒன்று தான் பச்சை சுண்டைக்காய். சுண்டைக்காய் சுவை நம்மில் பலருக்கு பிடிக்காது. ஆனால், மருத்துவக் குணம் நிறைந்தது. மருந்துகள் பொதுவாக கசப்புச் சுவை நிறைந்ததாக இருக்கும். சுண்டைக்காயும் கூட கசப்பாக தான் இருக்கும். ஆனால், வயிற்றுப்பூச்சிகளை கொல்வதில் இருந்து மூலநோயைக் குணப்படுத்துவது, ஹீமோகுளோபினை அதிகரிப்பது என பல்வேறு மருத்துவக் குணங்களைக் கொண்டது. இந்த சுண்டைக்காயை வைத்து சட்னி செய்தால் போதும் எத்தனை இட்லி சாப்பிட்டோம் என்று தெரியாமல் சாப்பிடுவார்கள்.
சுண்டைக்காய் சட்னி | Turkey Berry Chutney Recipe In Tamil
Equipment
- 1 கடாய்
- 1 பவுள்
- 1 மிக்ஸி
தேவையான பொருட்கள்
- 1 கப் சுண்டைக்காய்
- 1 டீஸ்பூன் கடலை பருப்பு
- 1 கொத்து கறிவேப்பிலை
- 1 டீஸ்பூன் உளுந்தும் பருப்பு
- 5 வர மிளகாய்
- 1 துண்டு புளி
- 1/2 டீஸ்பூன் கடுகு
- உப்பு தேவையான அளவு
- எண்ணெய் தேவையான அளவு
செய்முறை
- முதலில் சுண்டைக்காயை தட்டி, விதை நீக்கி வேண்டும் என விருப்பப்பட்டால், விதையை நீக்கி தண்ணீரில் போட்டு வைத்துக் கொள்ளவும்.
- ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வர மிளகாய், உளுந்தும் பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
- பின் வெங்காயம், பூண்டு, கறிவேப்பிலை, தேங்காய், சுண்டைக்காயை சேர்த்து நன்கு வதக்கி எடுத்துக் கொள்ளவும்.
- இவை நன்கு ஆறியதும் இதனை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து அதனுடன் புளி, உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.
- ஒரு தாளிப்பு கரண்டியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து சட்னியில் சேர்த்து கலந்து விடவும். அவ்வளவுதான் சுவையான சுண்டைக்காய் சட்னி தயார்.
Nutrition
இதனையும் படியுங்கள் : ருசியான சுண்டைக்காய் வத்தல் குழம்பு அடுத்தமுறை இப்படி ட்ரை பண்ணி பாருங்கள்!