- Prep
- 10 min
- Cook
- 20 min
- Total
- 30 min
- Serves
- 4
- Cuisine
- Indian
- Course
- LUNCH
உழவஞ்சாறு சிக்கன் பிரியாணி பேரு கொஞ்சம் வித்தியாசமா இருக்குனு யோசிக்கிறீங்களா. நிறைய பேரு இந்த ரெசிபியை கேள்விப்பட்டிருப்பீங்க. குக் வித் கோமாளில சுசித்ரா செஞ்சது தான் இந்த ரெசிபி. இன்னும் பிரியாணி கொள்ளு பருப்பை வேகவைத்து அரைச்சு உழவஞ்சாறு செஞ்சு அதையும் சிக்கனையும் வச்சு தம் போட்டு செய்ற பிரியாணி. நம்ம தனியா சிக்கன் பிரியாணி செஞ்சு சாப்பிட்டு இருப்போம் ஆனால் இந்த பிரியாணி ரொம்பவே வித்தியாசமா சாப்பிடுவதற்கு ரொம்ப ருசியா இருக்கும்.
என்னதான் சிக்கன் பிரியாணி மட்டன் பிரியாணி மஸ்ரூம் பிரியாணி ஃபிஷ் பிரியாணி நிறைய வகையான பிரியாணி இருந்தாலும் ஏதாவது டிஃபரண்டா சாப்பிடணும் போல தான் நமக்கு தோணும் அப்படி உங்களுக்கு தோணும்போது உங்க வீட்ல கண்டிப்பா இந்த பிரியாணியை செஞ்சு சாப்பிட்டு பாருங்க உங்க வீட்ல இருக்குற எல்லாருக்குமே ரொம்ப ரொம்ப பிடிக்கும். கொள்ளு பருப்புல பிரியாணியா அப்படின்னு யோசிக்காதீங்க ஒரு தடவை செஞ்சு சாப்பிட்டு பாருங்க. டேஸ்ட் ரொம்பவே அட்டகாசமா இருக்கும். குழந்தைகளில் இருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருமே கண்டிப்பா விரும்பி சாப்பிடுவாங்க. இப்ப வாங்க இந்த டிஃபரண்டான அருமையான உழவஞ்சாறு சிக்கன் பிரியாணி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : இதுவரை எத்தனையோ பிரியாணி செய்திருப்பீர்கள் ஆனால் மலபார் ஸ்டைலில் மீன் பிரியாணி செய்ததுண்டா? இல்லையெனில் ஒரு முறை செய்து பாருங்கள்!!
Ingredients
Method
முதலில் 5 மணி நேரம் கொள்ளு பருப்பை ஊறவைத்து குக்கரில் சேர்த்து உப்பு சேர்த்து 7 விசில் விட்டு எடுத்துக் கொள்ளவும்.
இப்பொழுது ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து பெரிய வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கி சேர்த்து பொன்னிறமாக வறுத்து தனியாக எடுத்துக் கொள்ளவும்.
சிக்கன் கழுவி சுத்தம் செய்து ஒரு பாத்திரத்தில் எடுத்து அதனுடன் மல்லித்தூள் ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள், கரம் மசாலா மஞ்சள் தூள் சீரகத்தூள் உப்பு பொன்னிறமாக வறுத்த வெங்காயம் சிறிதளவு, சிறிதளவு கொத்தமல்லி இலைகள் புதினா இலைகள் கருவேப்பிலை தயிர் அனைத்தையும் சேர்த்து நன்றாக கலந்து வைத்துக் கொள்ளவும்.
இப்பொழுது வெங்காயம் வறுத்த அதே கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை 1 டீஸ்பூன் சீரகம் ,2 பச்சை மிளகாய் இரண்டு காய்ந்த மிளகாய் ,பொடியாக நறுக்கிய பூண்டு சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்.
இப்பொழுது கொள்ளு பருப்பை வேகவைத்த தண்ணீர் சேர்த்து நன்றாக கலந்து மஞ்சள் தூள் அரை டீஸ்பூன் மிளகாய்த்தூள் சேர்த்து நன்றாக உப்பு சேர்த்து கலந்து விடவும்.
வேக வைத்துள்ள கொள்ளு பருப்பை மிக்ஸி ஜாரில் நன்றாக அரைத்து அதனையும் சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து இறுதியாக ஒரு துண்டு வெள்ளம் சேர்த்து இறக்கினால் உழவஞ்சாறு தயார்.
ஒரு பெரிய பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து சீரகம் சோம்பு பட்டை கிராம்பு பிரியாணி இலை நட்சத்திர சோம்பு இரண்டு நறுக்கிய பச்சை மிளகாய் தேவையான அளவு உப்பு அனைத்தையும் சேர்த்து கொதிக்க வைத்து பிரியாணி அரிசியை கழுவி சேர்த்து அரைவேக்காடு வேக வைத்து எடுத்துக்கொள்ளவும்.
இப்பொழுது கலந்து வைத்துள்ள சிக்கனை ஒரு குக்கரில் சேர்த்து அதன் மேல் வேக வைத்துள்ள சாதம் அதன் மேல் உழவஞ்சாறு பிறகு பொன்னிறமாக வறுத்த வெங்காயம் சேர்த்து மறுபடியும் இதே போல் சாதம் உழவஞ்சாறு வெங்காயம் சேர்த்து அதன் மேல் நெய் சேர்த்து 45 நிமிடங்கள் அடுப்பை மிதமான தீயில் வைத்து தம் போட்டு இறக்கினால் சுவையான உழவஞ்சாறு சிக்கன் பிரியாணி தயார்.






