Recipes
முகப்பு
அழகு

அழகு

  • சரும பராமரிப்பு
  • கூந்தல் பராமரிப்பு
  • அழகு குறிப்புகள்
ஆன்மிகம்

ஆன்மிகம்

  • ஆன்மிக கதைகள்
  • ஜோதிடம்
  • ராசி பலன்
உடல்நலம்

உடல்நலம்

  • வீட்டு வைத்தியம்
  • ஊட்டச்சத்து
  • மகளிர் நலம்
  • உடற்பயிற்சி & எடை குறைப்பு
  • குழந்தை நலம்
சமையல்

சமையல்

  • அசைவம்
  • சைவம்
Behind Talkies Recipes
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Behind Talkies Recipes. All rights reserved.
Mushrromm Butter
இரவு நேரத்தில் சப்பாத்திக்கு ஒரு வித்தியாசமான சைடு டிஷ் செய்ய நினைக்கிறீர்களா? அதிலும் சற்று க்ரீமியாக கிரேவி செய்ய விரும்புகிறீர்களா? அப்படியானால் காளான் பட்டர் மசாலா செய்யுங்கள். இதுவரை நீங்கள் பன்னீர் பட்டர் மசாலாவைத் தான் கேட்டிருப்பீர்கள். காளான் பட்டர் மசாலா என்பது வேறொன்று Photo: Recipes
முகப்பு/Uncategorized2024.04.18பதிப்பு · TA
Uncategorizedவாசிப்பு நேரம் · 1 நிமிடம்

டிபன் என்ன செய்தாலும் தொட்டு சாப்பிட ருசியான மஷ்ரூம் பட்டர் மசாலா இப்படி செஞ்சி பாருங்க!

இரவு நேரத்தில் சப்பாத்திக்கு ஒரு வித்தியாசமான சைடு டிஷ் செய்ய நினைக்கிறீர்களா? அதிலும் சற்று க்ரீமியாக கிரேவி செய்ய விரும்புகிறீர்களா? அப்படியானால் காளான் பட்டர் மசாலா செய்யுங்கள். இதுவரை நீங்கள் பன்னீர் பட்டர் மசாலாவைத் தான் கேட்டிருப்பீர்கள். காளான் பட்டர் மசாலா என்பது வேறொன்று

PK
எழுதியவர்Prem Kumar18 ஏப்ரல், 2024 அன்று 09:18 AM
1 நிமிட வாசிப்பு
பகிர்
தயாரிப்பு
15 நிமிடம்
சமையல்
15 நிமிடம்
மொத்தம்
30 நிமிடம்
பேருக்கு
4
சமையல் முறை
Indian
உணவு வகை
dinner

இரவு நேரத்தில் சப்பாத்திக்கு ஒரு வித்தியாசமான சைடு டிஷ் செய்ய நினைக்கிறீர்களா? அதிலும் சற்று க்ரீமியாக கிரேவி செய்ய விரும்புகிறீர்களா? அப்படியானால் காளான் பட்டர் மசாலா செய்யுங்கள். இதுவரை நீங்கள் பன்னீர் பட்டர் மசாலாவைத் தான் கேட்டிருப்பீர்கள். காளான் பட்டர் மசாலா என்பது வேறொன்றும் இல்லை. இதில் பன்னீருக்கு பதிலாக காளானை சேர்க்க வேண்டும். முக்கியமாக இந்த காளான் பட்டர் மசாலா குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும். இப்போது காளான் பட்டர் மசாலாவை எப்படி செய்வதென்று காண்போம். குறிப்பாக சைவ பிரியர்களுக்கு காளான் சிக்கன் போன்றது. இதில் புரதச்சத்து அதிகம் இருப்பதால் அசைவத்தை காட்டிலும் காளான் உடலுக்கு பல நன்மைகளை வழங்குகிறது.

சப்பாத்திக்கு கிழங்கு, குருமா என சாப்பிட்டு போரடித்தவர்கள் நிச்சயம் காளான் பட்டர் மசாலாவை முயற்சி செய்து பார்க்கலாம். வட இந்திய உணவான இது தற்போது தென்னிந்தியாவிலும் அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவாக மாறியுள்ளது. புளிப்பு, காரம், ஸ்வீட் என காளான் பட்டர் மசாலா நாவுக்கு அலாதியான ருசியை தருவதால் குழந்தைகளும் இதை விரும்பி சாப்பிடுகின்றனர். பானி பூரிக்கு பிறகு தென்னிந்தியாவில் பட்டர் மசாலா தனி இடத்தை பிடித்து விட்டது. அதே நேரம் இதை வீட்டில் செய்வதை காட்டிலும் பலரும் ஹோட்டலில் வாங்குவதையே வழக்கமாக வைத்துள்ளனர். கடையில் வாங்கி சாப்பிடுவதை விடவும் வீட்டிலேயே செய்து சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நல்லது. வட இந்திய சுவையில் காளான் பட்டர் மசாலா செய்து கொடுங்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள்.

இதனையும் படியுங்கள் : பாரம்பரிய ருசியில் சூப்பரான காளான் வெள்ளை குழம்பு இப்படி ஒரு தரம் ட்ரை பண்ணி பாருங்கள்!

4 பேருக்கு

தேவையான பொருட்கள்

செய்முறை

  1. 1

    முதலில் காளானை நன்கு கழுவி நான்கு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

  2. 2

    பின் வெங்காயம், தக்காளியை ஒரு மிக்ஸி ஜாரில் விழுதாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.

  3. 3

    ஒரு வாணலியை அடுப்பில் வைத்து பட்டர் சேர்த்து உருகியதும் நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

  4. 4

    பின் அரைத்து வைத்துள்ள வெங்காய, தக்காளி விழுது சேர்த்து வதக்கவும். இதன் பச்சை வாசம் போனதும் மஞ்சள் தூள், கரம் மசாலா தூள், மிளகாய்த்தூள், சீரகத்தூள் சேர்த்து நன்கு கலந்து விடவும்.

  5. 5

    பின் காளான் சேர்த்து நன்கு வதக்கவும். அத்துடன் தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து மூடி வைத்து கொதிக்க விடவும்.

  6. 6

    இது கொதித்து தண்ணீர் சுண்டி எண்ணெய் பிரிந்து வந்ததும் கடைசியாக ஃப்ரெஷ் கிரீம் சேர்த்து நன்கு கலந்து இரண்டு நிமிடங்கள் வேக விட்டு கஸ்தூரி மேத்தி, மல்லி இலை தூவி இறக்கவும்.

  7. 7

    அவ்வளவுதான் சுவையான காளான் பட்டர் மசாலா தயார். இந்த கறி பிரியாணி, கீ ரைஸ், சப்பாத்தி, ரொட்டி, நாண் போன்ற எல்லா உணவுடன் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

ஊட்டச்சத்து (ஒரு பேருக்கு)

  • 51 கலோரி
  • கொழுப்பு · 2g
  • புரதம் · 3.24g
  • கார்போஹைட்ரேட் · 3.2g
தலைப்புகள்
#மஷ்ரூம் பட்டர் மசாலா#காளான் இறால் சில்லி கறி#காளான் கடாய்#காளான் குடைமிளகாய் வறுவல்
எழுதியவர் குறிப்பு
PK
Prem Kumar
தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

காரசாரமான உருளைக்கிழங்கு சாதம் மதிய உணவிற்கு சட்டுன்னு இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்!!

காரசாரமான உருளைக்கிழங்கு சாதம் மதிய உணவிற்கு சட்டுன்னு இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்!!

மாலை நேரத்தில் டீ காபியுடன் சேர்த்து சாப்பிட முட்டைக்கோஸ் வடை இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்!!

மாலை நேரத்தில் டீ காபியுடன் சேர்த்து சாப்பிட முட்டைக்கோஸ் வடை இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்!!

hello world

இன்றைய ராசிபலன் – 10 நவம்பர் 2026!

இன்றைய ராசிபலன் – 10 நவம்பர் 2026!

கொங்கு நாட்டு ஸ்டைலில் வெள்ளை பிரியாணி இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் அசத்தலாக இருக்கும்!!

கொங்கு நாட்டு ஸ்டைலில் வெள்ளை பிரியாணி இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் அசத்தலாக இருக்கும்!!

ஆரோக்கியம் நிறைந்த பீட்ரூட் ரசம் இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் சுவையாக இருக்கும்!!

ஆரோக்கியம் நிறைந்த பீட்ரூட் ரசம் இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் சுவையாக இருக்கும்!!

அதிகம் படித்தவை

  1. 01கொங்கு நாட்டு ஸ்டைலில் வெள்ளை பிரியாணி இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் அசத்தலாக இருக்கும்!!
  2. 02ஆரோக்கியம் நிறைந்த பீட்ரூட் ரசம் இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் சுவையாக இருக்கும்!!
  3. 03வாழைக்காய் வைத்து மிகவும் ருசியான இந்த வாழைக்காய் மிளகு வறுவல் செய்து பாருங்கள் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்!!
  4. 04தித்திக்கும் ரசமலாயை எளிமையான முறையில் இப்படி ஒரு முறை வீட்டிலேயே செய்து பாருங்கள்!!
  5. 05வார இறுதியில் மீன் வாங்கினால் காரசாரமான இந்த ஆந்திரா ஸ்டைல் மீன் கறி செய்து பாருங்கள்!!
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement