Recipes
முகப்பு
அழகு

அழகு

  • சரும பராமரிப்பு
  • கூந்தல் பராமரிப்பு
  • அழகு குறிப்புகள்
ஆன்மிகம்

ஆன்மிகம்

  • ஆன்மிக கதைகள்
  • ஜோதிடம்
  • ராசி பலன்
உடல்நலம்

உடல்நலம்

  • வீட்டு வைத்தியம்
  • ஊட்டச்சத்து
  • மகளிர் நலம்
  • உடற்பயிற்சி & எடை குறைப்பு
  • குழந்தை நலம்
சமையல்

சமையல்

  • அசைவம்
  • சைவம்
Behind Talkies Recipes
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Behind Talkies Recipes. All rights reserved.
Plak Thayir
சிக்கன் பிரியாணி மட்டன் பிரியாணி காளான் பிரியாணி தக்காளி சாதம், புலாவ், தேங்காய் சாதம், வெஜிடபிள் பிரியாணி, குஸ்கா, மசாலா சப்பாத்தி அப்படின்னு இது எல்லாத்துக்கும் தயிர் பச்சடி வைத்து சாப்பிட்டால் ரொம்பவே சூப்பரா இருக்கும். காரமாய் இருக்கக்கூடிய உணவுகளோட இந்த தயிர் பச்சடிய சேர்த்த Photo: Recipes
முகப்பு/Uncategorized2024.03.29பதிப்பு · TA
Uncategorizedவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

பிரியாணி, புலாவுக்கு ஏத்த அட்டகாசமான வித்தியாசமான பாலக் தயிர் பச்சடி

சிக்கன் பிரியாணி மட்டன் பிரியாணி காளான் பிரியாணி தக்காளி சாதம், புலாவ், தேங்காய் சாதம், வெஜிடபிள் பிரியாணி, குஸ்கா, மசாலா சப்பாத்தி அப்படின்னு இது எல்லாத்துக்கும் தயிர் பச்சடி வைத்து சாப்பிட்டால் ரொம்பவே சூப்பரா இருக்கும். காரமாய் இருக்கக்கூடிய உணவுகளோட இந்த தயிர் பச்சடிய சேர்த்த

எழுதியவர்Ramya29 மார்ச், 2024 அன்று 12:08 PM
2 நிமிட வாசிப்பு
பகிர்
தயாரிப்பு
5 நிமிடம்
சமையல்
15 நிமிடம்
பேருக்கு
5
சமையல் முறை
tamil nadu
உணவு வகை
LUNCH

சிக்கன் பிரியாணி மட்டன் பிரியாணி காளான் பிரியாணி தக்காளி சாதம், புலாவ், தேங்காய் சாதம், வெஜிடபிள் பிரியாணி, குஸ்கா, மசாலா சப்பாத்தி அப்படின்னு இது எல்லாத்துக்கும் தயிர் பச்சடி வைத்து சாப்பிட்டால் ரொம்பவே சூப்பரா இருக்கும். காரமாய் இருக்கக்கூடிய உணவுகளோட இந்த தயிர் பச்சடிய சேர்த்து சாப்பிடும்போது ரொம்ப வெயிட் குளுகுளுன்னு சாப்பிடவே அவ்வளவு ஒரு ருசியா இருக்கும்.

நம்ம வீட்ல எப்பவுமே வெங்காய பச்சடி, வெண்பூசணி பச்சடி, வெள்ளரிக்காய் பச்சடி, கேரட் பச்சடின்னு தான் செஞ்சுருப்போம் ஆனா இன்னைக்கு கொஞ்சம் புதுசா வித்தியாசமா அதே நேரத்துல ஆரோக்கியமா இருக்கக்கூடிய பாலக்கீரை வச்சு பாலக் தயிர் பச்சடி செய்ய போறோம். இந்த பாலக் கீரையை வைத்து எப்படி தயிர் பச்சடி செய்வது அப்படின்னு யோசிக்கிறீங்களா ரொம்பவே சிம்பிள்தாங்க பாலைக்கீரையை எண்ணெயில் போட்டு நல்லா வதக்கி எடுத்துட்டு நம்ம பச்சடி செஞ்சோம் அப்படின்னா டேஸ்ட் ரொம்பவே சூப்பரா இருக்கும் எல்லா வகையான பிரியாணி ரொட்டி மசாலா சப்பாத்தின்னு சூப்பரா இருக்கும் எல்லாத்துக்கூடவும்.

இந்த ஒரு தயிர் பச்சடி மட்டும் நான் வச்சா போதும் பிரியாணிக்கு தொட்டுக்க வேற எந்த குருமாவுமே வைக்கத் தேவையில்லை. இந்த தயிர் பச்சடி மட்டுமே வச்சு சூப்பரா சாப்பிட்டு முடித்து விடலாம் அதே நேரத்துல ரொம்பவே சூப்பரான டேஸ்டாவும் இருக்கும். குழந்தைங்க எப்பவுமே கீரை சாப்பிட அடம் பிடிப்பாங்க அவங்களுக்கு எல்லாம் பிரியாணிக்கு உள்ள இந்த பால தயிர் பச்சடியை ஒளிச்சு வச்சு ஊட்டி விட்டிங்கனா அவங்களுக்கு வித்யாசமே தெரியாது அதே நேரத்தில் அந்த கீரையுடன் முழு சத்துக்களும் அவங்களுக்கு போய் சேரும்.

குழந்தைங்க கீரை சாப்பிடல அப்படின்னா அவங்களுக்கு புடிச்ச மாதிரி ஏதாவது ஒரு உணவுல அந்த கீரையை வைத்துக் கொடுத்தா ரொம்பவே நல்லது. எப்பவுமே ஒரே மாதிரியான பச்சடி செய்யாமல் கொஞ்சம் வித்தியாசமா ஒரு முறை இந்த பாலக் தயிர் பச்சடி உங்க வீட்ல செஞ்சு பாருங்க. சுவையும் அருமையா இருக்கும் ஆரோக்கியமானதாவும் இருக்கும் இப்ப வாங்க இந்த வித்தியாசமான சுவையான பால தயிர் பச்சடி எப்படி செய்வது என்று பார்க்கலாம்

இதையும் படியுங்கள் : புளிச்சக்கீரை வைத்து ஒரு தடவை இந்த ஆந்திரா ஸ்டைல் கோங்குரா பச்சடி செஞ்சு பாருங்க!

5 பேருக்கு

தேவையான பொருட்கள்

செய்முறை

  1. 1

    பாலக்கீரையை முதலில் நன்கு கழுவி சுத்தம் செய்து சிறியதாக நறுக்கி கொள்ளவும்

  2. 2

    வெங்காயம்,பச்சை மிளகாய் மற்றும் கொத்தமல்லி இலைகளை சிறியதாக நறுக்கி கொள்ளவும்

  3. 3

    கடாயில் எண்ணெய் ஊற்றி பாலக்கீரையை போட்டு நன்றாக வதக்கவும். ஒரு பாத்திரத்தில் தயிர் சேர்த்து நன்றாக கடைந்து கொள்ளவும்

  4. 4

    பிறகு நறுக்கிய வெங்காயம் பச்சை மிளகாய், மற்றும் கொத்தமல்லி இலைகளை சேர்த்து கொள்ளவும்

  5. 5

    தேவையான அளவு உப்பு மற்றும் பாலக்கீரையை போட்டு கிளறி எடுத்தால் சுவையான பாலக் தயிர் பச்சடி தயார்.

ஊட்டச்சத்து (ஒரு பேருக்கு)

  • 19 கலோரி
  • புரதம் · 0.8g
  • கார்போஹைட்ரேட் · 3.9g
தலைப்புகள்
#பாலக் தயிர் பச்சடி#கேரளா பீட்ரூட் பச்சடி#ராயலசீமா உளுந்து பச்சடி#ஆந்திரா கோங்குரா பச்சடி
எழுதியவர் குறிப்பு
Ramya
தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

காரசாரமான உருளைக்கிழங்கு சாதம் மதிய உணவிற்கு சட்டுன்னு இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்!!

காரசாரமான உருளைக்கிழங்கு சாதம் மதிய உணவிற்கு சட்டுன்னு இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்!!

மாலை நேரத்தில் டீ காபியுடன் சேர்த்து சாப்பிட முட்டைக்கோஸ் வடை இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்!!

மாலை நேரத்தில் டீ காபியுடன் சேர்த்து சாப்பிட முட்டைக்கோஸ் வடை இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்!!

hello world

இன்றைய ராசிபலன் – 11 நவம்பர் 2026!

இன்றைய ராசிபலன் – 11 நவம்பர் 2026!

கொங்கு நாட்டு ஸ்டைலில் வெள்ளை பிரியாணி இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் அசத்தலாக இருக்கும்!!

கொங்கு நாட்டு ஸ்டைலில் வெள்ளை பிரியாணி இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் அசத்தலாக இருக்கும்!!

ஆரோக்கியம் நிறைந்த பீட்ரூட் ரசம் இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் சுவையாக இருக்கும்!!

ஆரோக்கியம் நிறைந்த பீட்ரூட் ரசம் இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் சுவையாக இருக்கும்!!

அதிகம் படித்தவை

  1. 01கொங்கு நாட்டு ஸ்டைலில் வெள்ளை பிரியாணி இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் அசத்தலாக இருக்கும்!!
  2. 02ஆரோக்கியம் நிறைந்த பீட்ரூட் ரசம் இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் சுவையாக இருக்கும்!!
  3. 03வாழைக்காய் வைத்து மிகவும் ருசியான இந்த வாழைக்காய் மிளகு வறுவல் செய்து பாருங்கள் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்!!
  4. 04தித்திக்கும் ரசமலாயை எளிமையான முறையில் இப்படி ஒரு முறை வீட்டிலேயே செய்து பாருங்கள்!!
  5. 05வார இறுதியில் மீன் வாங்கினால் காரசாரமான இந்த ஆந்திரா ஸ்டைல் மீன் கறி செய்து பாருங்கள்!!
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement