- Prep
- 10 min
- Cook
- 20 min
- Total
- 30 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- LUNCH
மட்டன் குழம்பு, கோழிக் குழம்பு வரிசையில் உள்ள மீன் குழம்புக்கு மக்கள் மத்தியில் எப்போதுமே அலாதி பிரியம் உண்டு. இந்த மணமணக்கும் மீன் குழம்புகளில் பல வகைகள் உள்ளன. அவை ஒவ்வொரு பகுதிகளுக்கும், ஊர்களுக்கும் ஏற்ப மாறுபடுகிறது. பொதுவாக கடல் உணவு அனைத்து வயதினருக்கும் உகந்த உணவு. பொதுவாக அனைத்து கடல் உணவுகளிலும் கால்சியம், வைட்டமின்-டி, புரதம், தாது உப்புக்கள், ஒமேகா-3, கொழுப்பு அமிலம், எண்ணெய், துத்தநாகம் போன்றவை உள்ளன. இப்படியான டேஸ்டி மீன் குழம்புகளில் சுவை தரும் மீன்களை சேர்த்தால் அதன் சுவையே தனி தான். மீன் குழம்புகளில் ஒரு குறிப்பிட்ட மீன்களை சேர்ப்பதால் அவற்றுக்கு அந்த மீனின் பெயர்களே சூட்டப்படுகிறது.
இதனை செய்யும் பொழுதே வீடு முழவதும் மணமணக்கும். இதனை சூடான சாதத்தில் ஊற்றி சாப்பிட்டால் அருமையாக இருக்கும். மறுநாள் வைத்து சாப்பிட்டால் இன்னுமும் டேஸ்டாக இருக்கும். அதுவும் மறு நாள் வைத்து தோசைக்கோ, இட்லிக்கோ அல்லது சாதத்தில்லோ ஊற்றி சாப்பிட்டால் அதனின் ருசியே தனி தான். இந்த மீன் குழம்பை வெவ்வேறு பகுதிகளில் அவரவர் உணவு முறைக்கு ஏற்ப வெவ்வேறு மசாலாக்கள் மற்றும் அங்கு கிடைக்கும் மீன் வகைகளை கொண்டு செய்கிறார்கள். அந்த வகையில் நாம் இன்று கிராமத்து ஸ்டைலில் வாவல் மீன் குழம்பு எப்படி வீட்டிலேயே சுவையாக எப்படி வைப்பது என்று பார்ப்போம்.
இதனையும் படியுங்கள் : ருசியான நெத்திலி மீன் வடை இதுவரை செய்ததில்லை என்றால் உடனே இப்படி செய்து பாருங்கள் இதன் சுவைக்கு அடிமையாகிவிடுவீர்கள்
Ingredients
Method
முதலில் மீனை நன்கு சுத்தம் செய்து விட்டு துண்டுகளாக நறுக்கி மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து மற்றொரு முறை நன்கு கழுவி வைத்துக் கொள்ளவும்.
பின் புளியை நன்கு கெட்டியாக கரைத்து, அந்த கரைசலில் மிளகாய்த் தூள், மல்லித் தூள், உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.
பின் அடுப்பில் ஒரு மண் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சோம்பு, வெந்தயம், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
பின் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.
அதன்பிறகு கரைத்து வைத்துள்ள புளிக்கரைசலை சேர்த்து மூடி வைத்து கொதிக்க விடவும். குழம்பு ஒரு கொதி வந்ததும் மீன் துண்டுகளை சேர்த்து ஒரு கொதி விட்டு தீயை குறைத்து வைத்து விடவும்.
பின் தக்காளி விழுது மற்றும் தேங்காய் விழுது, மாங்காய் துண்டுகளை சேர்த்து அடுப்பை 20 நிமிடங்கள் மிதமான தீயில் வைத்து விட்டு குழம்பு கெட்டியானதும் கொத்தமல்லி தழை தூவி இறக்கவும். அவ்வளவுதான் கிராமத்து ஸ்டைல் வாவல் மீன் குழம்பு தயார்.





