Home ஆன்மிகம் வீடு செல்வ செழிப்புடன் இருக்க பெரிய பணக்காரர்கள் எல்லாம் வீட்டின் வரவேற்பறையில் இதை தான் செய்வார்களாம்!

வீடு செல்வ செழிப்புடன் இருக்க பெரிய பணக்காரர்கள் எல்லாம் வீட்டின் வரவேற்பறையில் இதை தான் செய்வார்களாம்!

அனைவருக்கும் செல்வ செழிப்புடன் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். எல்லோரும் உடனடியாக பணக்காரர் ஆக வேண்டும் என்று விரும்புகிறார்கள். அம்பானி, அதானி போல நாமும் எப்போது பணக்காரர்கள் ஆவோம் என்ற ஏக்கம் பலருக்கு உண்டு. கோடி கோடியாய் செல்வம் பெருக வேண்டும் என்ற ஆசை சிலருக்கு இருக்கத்தான் செய்கிறது. ஆனால் எப்படி பணக்காரர் ஆவது குபேரனின் அருள் நமக்குக் கிடைக்குமா என்றும் ஏங்குகின்றனர்.

-விளம்பரம்-

கடின உழைப்பு இருந்தும் வீட்டின் நிதி நெருக்கடியைச் சமாளிக்க முடியாமல் நீங்கள் சிரமப்பட்டிருந்தால், ஏமாற்றமடைய வேண்டாம். அதிலிருந்து விடுபட பல அற்புத வழிகள் சாஸ்திரங்களில் விவரிக்கப்பட்டுள்ளன. செல்வம் சேரும் இடத்தில்தான் சேரும். செல்வத்தை ஈர்க்க சில வழிகள் உள்ளன. வரவேற்பறையில் நாம் வைக்கும் சில பொருட்களும் செல்வத்தை ஈர்ப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. சில மாற்றங்களை நம்முடைய வீட்டில் செய்வதன் மூலம், லட்சுமி தேவி மற்றும் குபேர் தேவ் இருவரின் ஆசீர்வாதமும் கிடைக்கும். அதுமட்டுமல்லாமல் நமக்கு வாழ்க்கையில் துரதிர்ஷ்டம் ஏற்பட்டால், எவ்வளவு கடினமாக உழைத்தாலும் பலன் கிடைக்காது. துரதிர்ஷ்டம் வராமல் இருக்க வீட்டில் செய்ய வேண்டிய எளிய மாற்றங்களை இந்த ஆன்மிகப் பதிவில் பார்க்கலாம்.

வரவேற்பறை

உறவுகள் கூடி மகிழும் அறை வரவேற்பு அறை. விருந்தினர்களை வரவேற்கவும் குடும்பத்தினர் கூடி ஆலோசனை செய்யவும் பயன்படுத்தும் அறை வரவேற்பு அறை. நாம் வரவேற்பு அறையில் வைக்கும் எந்த பொருட்களும் களைந்த நிலையில் இருக்கக் கூடாது. அதுமட்டுமல்லாமல் அங்கு நாம் வைத்திருக்கும் பொம்மைகள், மர சிற்பங்கள், தொலைக்காட்சி, சோபா, மேஜை நாற்காலி, ஜன்னல் போன்றவைகள் ‌எப்போதும் சுத்தமாக இருக்க வேண்டும். இதனால் நம்முடைய வீடு அனந்தமாக‌ இருக்கும். நம்மில் சிலர் வாஸ்து பார்த்து வீடு கட்டாததால் பல பிரச்சனைகளுக்கு உள்ளாகிறோம். வரவேற்பறை எந்த இடத்தில் இருக்கலாம் என்கிற சந்தேகம் நிறைய மக்களுக்கு இருக்கிறது. ஒரு இல்லத்தில் தென்மேற்கு பகுதி தவிர, மற்ற அனைத்து இடங்களிலும் வரவேற்பு அறை இருக்கலாம். ஒருவேளை ஒருவரது வீட்டில் வாஸ்து குறைபாடுகள் உள்ளது என்றால் அதனை எப்படி சரி செய்வது என்று பார்ப்போம்.

ஸ்படிக லிங்கம்

இந்த ஸ்படிக லிங்கங்கள் அனைத்து கிரக தோஷங்களையும் மிக முக்கியமாக எதிர்மறை சக்திகளை விரட்டி அடிக்கும் மிகவும் உன்னதமான ஒன்றாகும். அதனால் இந்த ஸ்படிக லிங்கத்தை ஒரு கண்ணாடி பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பி அதில் வாசனை மலர்களை வைத்து நடுவில் இந்த லிங்கத்தை வைத்து‌ விடுங்கள். இந்த ஸ்படிக லிங்கத்தை வரவேற்பறையில் வைத்தால் அதன் அதிர்வலைகள் நம்மை சுற்றி அரணாக நல்ல சக்திகளை பரப்பும். இதனால் எவ்வித தோஷங்கள், வாஸ்து குறைபாடுகள் இருந்தாலும் தீர்த்து நன்மைகளே நடக்கின்றன. இந்த லிங்கத்தை மாதந்தோறும் வரும் பிரதோஷம் அன்று பூஜையறையில் வைத்து வழிபாடு செய்து மறுபடியும் இதே மாதிரி கண்ணாடி பாத்திரத்தில் வைத்து விடலாம்.

அலங்கார பொருட்கள்

அன்போடும் அக்கறையோடும் நம் வீட்டுக்கு வரும் விருந்தினரை உற்சாகமாக வரவேற்கும் நாம் அவரை ஆசுவாசப்படுத்த வேண்டி அமரவைக்கும் அறை வரவேற்பறை தான். அதனால் இந்த அறை எப்போதும் வெறுமனே இருக்க‌ கூடாது. காமதேனு பொம்மை, கடிகாரம், மகாலட்சுமி தாயாரின் பாதம், செயற்கை நீருற்று, யானை பொம்மை, மூங்கில் செடி போன்ற பொருட்கள் கட்டாயம் வரவேற்பறையில் இடம்‌ பெற வேண்டும். இதனால் கண் திருஷ்டி செய்வினை கோளாறுகள் இருந்தாலும் நீங்கும். பண வரவில் ஏற்படும் தடைகடள நீங்கும்.

-விளம்பரம்-

வரவேற்பறை நிறம்

வீட்டில் வரவேற்பறையே அதிகமாகப் பயன்படுத்தும் இடமாக இருக்கிறது. அதனால் வரவேற்பறையின் சுவர்களின் நிறம் மனதுக்கு உகந்ததாக இருக்க வேண்டும். வீட்டுக்குள் நுழையும் நண்பர்களின் மனத்தில் ஆரோக்கிய அதிர்வுகளை உருவாக்கும் வகையிலான நிறத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும். வெள்ளைச் சுவர்கள் வெளிச்சத்தைப் பிரதிபலிக்கும் தன்மையுடையதால் இங்கு வெள்ளை நிறத்தை நாம் பயன்படுத்தலாம்.

மீன் தொட்டி

வீட்டில் அமைதியும் ஆனந்தமும் நிறைந்திருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் வரவேற்பறையில் மீன்‌ தொட்டி வைக்கலாம். மீன் தொட்டி வீட்டை அலங்கரிப்பதில் மிக முக்கிய பங்கு வகிக்கின்றது. இந்த மீன் தொட்டியில் குறைந்தது 9 மீன்களாவது இருக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் இதனை வடக்கு அல்லது வடகிழக்கு திசைகளில் வைப்பதே மிகவும் சிறந்தது.

மஞ்சள், சர்க்கரை ‌மற்றும்‌ வாசனை மலர்கள்

மஞ்சள் மற்றும் சர்க்கரை மகாலட்சுமி தாயாருக்கு உகந்த பொருட்கள். அதனால் இந்த இரண்டு பொருட்களையும் ஒரு தட்டில் வாசனை மிகுந்த மலர்களுடன்‌ சேர்த்து வரவேற்பறையில் இருக்கும் நாற்காலி மீது வைத்து விடுங்கள். நமது வீட்டில் பூஜை செய்யும் போது இந்த மூன்று பொருட்களும் நம்முடைய வரவேற்பறையில் இருந்தால் மகாலட்சுமி தாயார் நமது வீட்டிலேயே தங்கி விடுவார்.

-விளம்பரம்-

இதனையும் படியுங்கள் : வாஸ்து படி இதை மட்டும் இதை மட்டும் செய்யுங்கள் வீட்டில் பணம் சேர்ந்து கொண்டே இருக்கும்!