- Prep
- 10 min
- Cook
- 20 min
- Total
- 30 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- Kulambu, Main Course
மொச்சைக்கொட்டையும் கத்திரிக்காயையும் வைத்து ஒரு புளிக் குழம்பு செய்து சுட சுட சாதத்தில் ஊற்றி சாப்பிட்டால் அவ்வளவு சுவையாக இருக்கும். ஆனால் இந்த மொச்சை கத்தரிக்காய் குழம்பை கிரமாத்து பகுதிகளில் வைப்பது போன்றே பக்குவமாக செய்து பார்க்க போகிறோம். இந்த குழம்பை இது போன்று உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுத்தால்
இதையும் படியுங்கள் : சுவையான கத்தரிக்காய் மிளகு கறி செய்வது எப்படி ?
உங்கள் வீட்டில் உள்ள அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள் ஒரு தட்டு சோறும் காலியாகும் அந்த அளவிற்கு அற்புதமான சுவையில் இருக்கும். அந்த வகையில் கிராமத்து சுவையில் எப்படி செய்யலாம் என்பதை கீழே செய்முறை விளக்கங்கள், தேவையான பொருட்கள் என்ன என்பதை கொடுத்துளோம் படித்துப் பார்த்து நீங்களும் ஒரு முறை செய்து பாருங்கள் மிகவும் சுவையாக இருக்கும்.
Ingredients
Method
முதலில் மொச்சையை 6 மணி நேரம் ஊறவைத்து குக்கரில் போட்டு வேக வைத்துக்கொள்ளவும்.
கத்திரிக்காயை வேண்டிய வடிவில் வெட்டிக்கொள்ளவும்.
அடுத்து வெங்காயம், தக்காளி, பூண்டை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும், தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை போட்டு தாளிக்கவும். தாளித்த பின் கறிவேப்பிலை, வெங்காயம், பூண்டு, சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.
பின்னர் வெட்டி வைத்துள்ள கத்திரிக்காய் சேர்த்து நன்கு வதக்கவும்.
கத்திரிக்காய் நிறம் மாறி வதங்கி வரும் போது தக்காளி, தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள், சேர்த்து வதக்கவும்.
அடுத்து அதில் புளிசாறு, மிளகாய்தூள், மற்றும் 2 கோப்பை தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.
கத்திரிக்காய் வெந்ததும், வேக வைத்த மொச்சையை சேர்த்து 5 நிமிடம் மிதமான தீயில் கொதிக்கவிடவும்.
குழம்பு கெட்டியானதும் இறக்கினால் சுவையான மொச்சைக் கத்திரிக்காய் குழம்பு தயார்.






