- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 5
- Cuisine
- Indian, TAMIL
- Course
- evening, snacks
பொதுவா குழந்தைகள் காய்கறிகள் சாப்பிடாமல் அடம் பிடிப்பாங்க ஆனா காய்கறிகள் சாப்பிடுவதன் மூலம் நம்ம உடம்புக்கு நிறைய நன்மைகள் கிடைக்கும் அதுல தான் ஆரோக்கியமே நிறைந்திருக்கு. என்னதான் பொரியல் கிரேவி கூட்டு அப்படின்னு நிறைய செய்து கொடுத்தாலும் குழந்தைகளுக்கு டிஃபரண்டா ஏதாவது செஞ்சு கொடுத்தால் தான் ரொம்ப பிடிக்கும். குழந்தைகள் ஸ்கூல் விட்டு வரும் போது இந்த மாதிரி ஒரு சூப்பரான வெஜிடபிள் பால்ஸ் செஞ்சு கொடுத்து பாருங்க கண்டிப்பா விரும்பி சாப்பிடுவாங்க.
இதுல நம்ம உருளைக்கிழங்கு கேரட் பீன்ஸ் மக்காச்சோளம் எல்லாமே சேர்த்து செய்திருக்கிறோம். உங்களுக்கு தேவையான காய்கறிகளை சேர்த்து நீங்க செஞ்சுக்கோங்க. இந்த மாதிரி ஒரு சூப்பரான ரெசிபியை கண்டிப்பா மிஸ் பண்ணாம உங்க குழந்தைகளுக்கு செஞ்சு கொடுத்து அசத்துங்க. ஈவினிங் டைம்ல டீ காபி ஓட இந்த ஸ்நாக்ஸ் சாப்பிடுவதற்கு ரொம்ப ருசியாக இருக்கும். தக்காளி சாஸ் சேர்த்து சாப்பிடும்போது ரொம்ப ருசியா இருக்கும். தேவைப்பட்டா இதுல சீஸ் கூட சேர்த்து சீஸ் பால்ஸ் மாதிரி ட்ரை பண்ணி பாருங்க.
ஒரே ஒரு தடவை இந்த மாதிரி செஞ்சு பாருங்க அதுக்கப்புறம் உங்களுக்கு இந்த ரெசிபி அடிக்கடி செய்ய தோணும். நல்ல மொறு மொறுன்னு சாப்பிடுவதற்கு அவ்வளவு ருசியா ஆரோக்கியமான இந்த ரெசிபியை மிஸ் பண்ணாம செஞ்சு பாருங்க. இந்த ரெசிபி செய்வது ரொம்ப ரொம்ப ஈஸி. சூப்பரான இந்த ரெசிபியை மிஸ் பண்ணாம வீட்டுக்கு வரக்கூடிய விருந்தாளிகளுக்கும் செஞ்சு கொடுத்து அசத்துங்க. இப்ப வாங்க இந்த ருசியான வெஜிடபிள் பால்ஸ் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : சாமை வெஜிடபிள் பிரியாணி
Ingredients
Method
ஒரு பாத்திரத்தில் வேகவைத்த உருளைக்கிழங்கு துருவிய பீட்ரூட் நறுக்கிய பீன்ஸ் மக்காச்சோளம் கொத்தமல்லி இலைகள் சேர்த்துக் கொள்ளவும்.
மிளகாய் தூள் கரம் மசாலா உப்பு இஞ்சி பூண்டு விழுது, எலுமிச்சைச்சாறு அரிசி மாவு, சோள மாவு அனைத்தையும் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
பிசைந்து வைத்த மாவை சிறு உருண்டைகளாக உருட்டி சூடான எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்தால் சுவையான வெஜிடபிள் பால்ஸ் தயார்.






