பொதுவா உடம்பு ஆரோக்கியமா இருக்கணும் அப்படின்னா அதுக்கு பழ ஜூஸுக்கு அப்புறமா காய்கறிகள் தான் அதிகமா எடுத்துக்கணும். அந்த காய்கறிகள் அப்படியே சாப்பிட முடியலன்னா அதுல சூப் செஞ்சு எடுத்துக்கலாம். அந்த வகையில் ஏராளமான சூப் வகைகள் இருக்கு. மஸ்ரூம் சூப் மட்டன் சூப் சிக்கன் சூப் அப்படின்னு சொல்லிக்கிட்டே போகலாம். அந்த வரிசையில் அசைவத்துல சூப் குடிக்க முடியாதவங்க இந்த மாதிரி சைவத்துல காய்கறிகள் சூப் வச்சு குடிச்சா உடம்புக்கு நிறைய ஆரோக்கியங்கள் கிடைக்கும்.
அந்த சூப் ரெசிபியை ரொம்ப ரொம்ப ஈஸியா இந்த மாதிரி செஞ்சு பாருங்க கண்டிப்பா வீட்ல இருக்கக்கூடிய எல்லாருக்குமே ரொம்ப பிடிக்கும். இந்த சூப் ரெசிபி இல்ல கடைசியா கொஞ்சமா சோள மாவு கரைச்சு ஊத்துனா சூப்புக்கு ஒரு தனி ருசியை கொடுக்கும். இந்த சூப் ரெசிபிக்கு கண்டிப்பா வீட்ல இருக்குறவங்க அடிமையாவாங்க அந்த அளவுக்கு சிம்பிளான டேஸ்டான சூப்பர் ரெசிபியை கண்டிப்பா எல்லாருமே குடிச்சு பாக்கணும்.
ரொம்ப தொண்டை வலி தொண்டை எரிச்சல் தொண்டை அலர்ஜி சளி காய்ச்சல் போன்ற பிரச்சினைகள் இருக்கும் போது இந்த சூப் எடுத்துக்கிட்டா கண்டிப்பா இந்த பிரச்சினைகள் எல்லாமே சரியாகும். குழந்தைகளுக்கும் சின்ன வயசுல இருந்தே இந்த சூப் வகைகள் எல்லாமே கொடுத்து வந்தா உடம்புல நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். சின்ன குழந்தைகள் கண்டிப்பா காய்கறிகள் சாப்பிட மாட்டாங்க அந்த மாதிரி இருக்கிறவங்களுக்கு இந்த சூப் ரெசிபியை செஞ்சு கொடுங்க.
வெஜிடபிள் சூப் ரெசிபிக்கு உங்களுக்கு பிடித்தமான காய்கறிகளை நீங்க சேர்த்துக்கலாம். இந்த வெஜிடபிள் சூப் ரெசிப்பியில் நம்ம பீன்ஸ் கேரட் பீட்ரூட் இது மூன்று காய்கறிகளும் சேர்க்கப்போறோம். உங்களுக்கு பிடிச்சமான காய்கறிகள் கூட நீங்க சேர்த்துக்கலாம் இதுதான் சேர்க்கணும் அப்படின்னு அவசியம் கிடையாது. இதுல மிளகுத்தூள் கொஞ்சம் தூக்கலா போட்டு குடிச்சீங்கன்னா கண்டிப்பா தொண்டை கரகரப்பு சரி செஞ்சுடும். இந்த சுவையான ஆரோக்கியமான சிம்பிளான வெஜிடபிள் சூப் ரெசிபி எப்படி செய்வது என்று வாங்க பார்க்கலாம்.
வெஜிடபிள் சூப் | Vegetable Soup Recipe In Tamil
Equipment
- 1 பவுள்
- 1 கடாய்
தேவையான பொருட்கள்
- 50 கி கேரட்
- 50 கி பீன்ஸ்
- 50 கி பீட்ரூட்
- 4 பல் பூண்டு
- 4 சின்ன வெங்காயம்
- 1 தக்காளி
- 1 டீஸ்பூன் மிளகு தூள்
- 1 டீஸ்பூன் சீரகம்
- 1 டீஸ்பூன் சோள மாவு
- உப்பு தேவையான அளவு
- எண்ணெய் தேவையான அளவு
- கொத்தமல்லி சிறிதளவு
செய்முறை
- ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து தட்டிய பூண்டு தட்டி சின்ன வெங்காயம் நறுக்கிய தக்காளி சேர்த்து நன்றாக வதக்கி விடவும்.
- காய்கறிகளை பொடி பொடியாக நறுக்கி அதனையும் சேர்த்து வதக்கவும்.
- தேவையான அளவு தண்ணீர் சேர்த்து உப்பு உப்பு சேர்த்து பத்து நிமிடம் வேக வைக்கவும்.
- சோளமாவை தண்ணீரில் கலந்து பத்து நிமிடத்திற்கு பிறகு கலந்து கொத்தமல்லி இலைகள் மிளகு தூள் சேர்த்து இறக்கினால் சுவையான வெஜிடபிள் சூப் தயார்.
Nutrition
இதனையும் படியுங்கள் : சுட சுட ருசியான மட்டன் சூப் ஒருமுறை இப்படி செய்து குடிச்சி பாருங்க! பின் நீங்களே அடிக்கடி செய்வீங்க!