Home ஆன்மிகம் கடவுளுக்கு வெற்றிலை மாலை சாற்றுவதால் கிடைக்கும் நன்மைகள்!!

கடவுளுக்கு வெற்றிலை மாலை சாற்றுவதால் கிடைக்கும் நன்மைகள்!!

வெற்றிலை இந்துக்களின் சாஸ்திர இப்படி மிகவும் முக்கியமான ஒன்று செல்வம் சுபிட்சம் ஐஸ்வரியம் போன்றவற்றை தரக்கூடிய பொருளாகவும் வெற்றிலை கருதப்படுகிறது. பொதுவாக ஏதாவது ஒரு பரிகாரத்திற்கு வெற்றிலையை பயன்படுத்தி நாம் செய்யும் போது அந்த பரிகாரம் பெரிய பலன்களை நமக்கு கொடுக்கும் ஏனென்றால் இந்த வெற்றிலையில் மகாலட்சுமி தேவியார் குடியிருக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது.

-விளம்பரம்-

வெற்றிலை வழிபாடு

பொதுவாக இருக்கக்கூடிய அனைத்து தெய்வங்களுக்கும் நாம் வெற்றிலையை படைத்து வழிபாடு செய்யலாம் ஆனால் வெற்றிலை மாலையை நாம் தெய்வத்திற்கு படைப்பதற்கு ஒரு சில விதிமுறைகளும் உள்ளது அந்த விதிமுறைகளின் படி வெற்றிலை மாலையை நாம் தொடுத்து கடவுளுக்கு சாற்றினால் நமக்கு அதற்கான பலன்கள் பல மடங்காகவும் சீக்கிரத்திலேயே கிடைக்கும் வெற்றிலை வழிபாடு செய்வதால் நினைத்த காரியங்கள் அனைத்தும் வெற்றியை கொடுக்கும் நம்முடைய வழிபாடும் வேண்டுதல்களும் உடனடியாக நிறைவேறும்.

வெற்றிலையின் மகிமை

இந்துக்களின் முறைப்படி மங்களகரமான பொருளான வெற்றிலை பல இடங்களில் பயன்படுத்தப்படும் சுப காரியங்கள் மட்டுமில்லாமல் அசுப காரியங்களிலும் கூட வெற்றிலை பாக்கு சேர்த்து தாம்பூலம் கொடுக்கின்ற வழக்கம் இன்னமும் கூட உள்ளது. கோவில்களில் நாம் என்னதான் கடவுளுக்கு நிறைய பழங்கள் நெய்வேத்தியங்கள் தேங்காய் எலுமிச்சை பழம் என அனைத்தும் படைத்து வழிபாடு செய்தாலும் வெற்றிலை தாம்பூலத்திற்கு பிறகு தான் கடவுளுக்கு தீபாராதனை காட்டி நம்மால் தெய்வத்தை வணங்க முடியும். ஒரு சிறப்பான விருந்திற்கு பிறகு வெற்றிலை பாக்கு சாப்பிட்டால் நம்முடைய மனம் முழுவதும் மகிழ்ச்சி பொங்கும் என்கின்ற ஒரு ஐதீகமும் உள்ளது அதனால் தான் கடவுளுக்கும் வெற்றிலை தாம்பூலத்தை சமர்ப்பித்து கடவுளை மனம் மகிழ செய்கிறோம். மகாலட்சுமியின் சுலபமான வெற்றிலை வெற்றியை தரக்கூடிய ஒரு பொருள்.

வெற்றிலை மாலைக்கு உரிய தெய்வம்

பொதுவாக கோவில்களில் தெய்வத்திற்கு வெற்றிலை மாலை சாற்றுவது வழக்கம் ஒரு சிலர் பரிகாரத்திற்காக வெற்றிலை மாலையை சாற்றி தெய்வத்தை வழிபாடு செய்வார்கள் ஆனால் எந்த கடவுளுக்கு வெற்றிலை மாலை சாற்ற வேண்டும் எந்த முறையில் வெற்றிலை மாலையை சாற்ற வேண்டும் எந்த கிழமையில் சாற்றினால் எந்தெந்த பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும் என்பதை தெரிந்து கொண்டு தான் நாம் வெற்றிலை மாலையை தெய்வத்திற்கு சாற்ற வேண்டும். முதலில் வெற்றிலை மாலையை விநாயகருக்கு சாற்றலாம். அதன் பிறகு அனுமாருக்கு வெற்றிலை மாலை சாற்றலாம். இந்த இரண்டு தெய்வங்களை தவிர வேறு எந்த தெய்வத்திற்கும் வெற்றிலை மாலையை சாற்றி வழிபாடு செய்ய கூடாது ஆனால் வெற்றிலை பாக்கு தாம்பூலமாக வைத்து தெய்வத்தை வழிபடலாம்.

வெற்றிலை மாலை கட்டும் முறை

ஒரு சிலருக்கு வெற்றிலை மாலையை எப்படி கட்ட வேண்டும் என்பது தெரியாது வெற்றிலை மாலை கட்டும்போது ஒற்றைப்படை எண்ணிக்கையில் வெற்றிலையை வைத்து தான் கட்ட வேண்டும் அதற்கு முன்பாக வெற்றிலையின் காம்பை கிள்ளிவிட்டு வெற்றிலையின் நடுவில் இரண்டு கொட்டை பாக்கு அல்லது சுருள் பாக்கு வைத்து கட்டி அதனை மாலையாக கட்ட வேண்டும். ஒரே ஒரு வெற்றிலையை வைத்தோம் அல்லது பாக்கு வைக்காமலோ வெற்றிலை மாலை கட்டக் கூடாது.

-விளம்பரம்-

வெற்றிலை மாலையால் தீரக்கூடிய சில பிரச்சினைகள்

வீட்டில் நிறைய குழப்பங்கள் சண்டைகள் இருந்தால் கோவிலுக்கு போய் பூஜை செய்ய முடியவில்லை என்றால் பதினொரு வெற்றிலையை மாலையாக கட்டி விநாயகர் அல்லது அனுமானுக்கு சாற்றி வழிபாடு செய்து வரலாம்.

வீட்டில் குழந்தைகள் சரியாக படிக்கவில்லை அவர்களுக்கு அதிகமான ஞாபக மறதி உள்ளது படிப்பில் கவனம் செலுத்தவில்லை என்றால் 9 வெற்றிலைகளை மாலையாக கட்டி விநாயகர் அல்லது அனுமானுக்கு சாற்றி வழிபாடு செய்து வரலாம்.

வீட்டில் தீராத பண கஷ்டம் திருமண தடைகள் சுபகாரிய தடைகள் போன்ற பிரச்சினைகளுக்கு 21 வெற்றிலைகளை மாலையாக கட்டி குரு பகவானுக்கு உகந்த வியாழக்கிழமை அல்லது சனிக்கிழமைகளில் அனுமாருக்கு சாற்றி வழிபாடு செய்துவர பண வரவு வீட்டில் அதிகரிக்கும்.

-விளம்பரம்-

பல பிரச்சினைகள் தீர்வதற்கான வழிபாடு

திருமணத்தடை பணக்கஷ்டம் கடன் பிரச்சனை நோய் படிப்பில் நாட்டம் இல்லாத நிலைமை என்று நிறைய பிரச்சினைகள் வீட்டில் நிம்மதியை சீர்குலைக்கிறது அதற்கான ஏதாவது ஒரு பரிகாரம் இருந்தால் நன்றாக இருக்கும் என்று யோசிப்பவர்களுக்கு இந்த பரிகாரம் கை கொடுக்கும். 108 வெற்றிலைகளை மழையாக தொடுத்து சனிக்கிழமைகளில் அனுமாருக்கு சாற்றி தயிர் சாதத்தை நெய்வீதியமாக படைத்து உங்களுக்கு என்னவெல்லாம் பிரச்சனைகள் இருக்கிறதோ அதை எல்லாம் அனுமாரிடம் சொல்லி 21 நாட்கள் தொடர்ந்து செய்ய வேண்டும். அப்பொழுது அனுமாரை 11 முறை வலம் வந்து அவரிடம் மனதார பிரச்சனைகளை சொல்லி வழிபாடு செய்ய வேண்டும். தொடர்ந்து 21 நாட்கள் அல்லது 21 சனிக்கிழமைகளில் இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம். குடும்பத்துடன் சென்று இந்த வழிபாட்டை செய்வது நமக்கு பல மடங்கு பலன்களை கொடுக்கும். அனுமாரை பதினொரு முறை வலம் வரும்போது எந்த பிரச்சினையையும் அவரிடம் சொல்லாமல் ராம் ராம் என்ற மந்திரத்தை மனதில் சொல்லியபடியே வளம் வந்தால் அனுமார் உங்களுடைய அனைத்து பிரச்சினைகளையும் தீர்த்து வைப்பார்.

இதனையும் படியுங்கள் : ஆஞ்சநேயரின் திருமணம் பற்றி பலரும் அறியாத சில உண்மைகள் மிஸ் பண்ணிராதீங்க!