அனைத்து தெய்வங்களுக்கும் முதன்மையானவராக திகழக்கூடியவர் விநாயகப் பெருமான். விநாயகப் பெருமான் நாம் வேண்டியதை நமக்கு கொடுப்பார் ஒருமுறை நாம் விநாயகரிடம் இருந்து வரங்களை வாங்கி விட்டாள் நம்முடைய ஜென்மம் முழுவதுமே விநாயகப் பெருமாள் நம்முடனே இருப்பார். நமக்கான விஷயங்களை வாழ்க்கையில் முன்னேற்றத்தை கொடுத்துக் கொண்டே இருப்பார். ஒரு காரியத்தை தொடங்கும் போது விநாயகரை வழிபட்டு விட்டு தொடங்கினால் அந்த காரியம் வெற்றி அடையும் அதேபோல் ஏதாவது ஒரு விசேஷத்தை தொடங்கும் போது மஞ்சள் பிள்ளையாரை பிடித்து வைத்த பிறகு தான் அந்த காரியத்தை செய்வார்கள் அப்படி செய்தால் அந்த காரியம் வெற்றி அடையும். அதேபோல் வாழ்க்கையில் முன்னேற்றங்களையும் பல வெற்றிகளையும் பெறுவதற்கு விநாயகப் பெருமானை வழிபடும் முறையை பற்றி ஆன்மீகம் குறித்த பதிவு பார்க்கலாம்.

முயற்சிகள்
வாழ்க்கையில் முன்னேற நாம் ஒவ்வொருவரும் ஒரு சில முயற்சிகளை எடுத்துக் கொண்டே தான் இருப்போம் ஒவ்வொரு காலகட்டத்திற்கும் ஏற்ப ஒவ்வொரு விதமான முன்னேற்றத்திற்கு சில முயற்சிகள் நாம் எடுத்தாலும் எல்லா நேரத்திலும் அந்த முயற்சிகள் நமக்கு வெற்றியடையாது ஒரு சில நேரங்களில் அந்த முயற்சிகள் தோல்வி அடையவும் செய்யலாம் ஆனால் எப்பொழுதுமே நமக்கு ஒரு விஷயத்தில் வெற்றி கிடைப்பதற்கு விநாயகப் பெருமானே ஒரே ஒரு நாள் மட்டும் இதே போல் வழிபட்டு பாருங்கள்
அருகம்புல் பரிகாரம்
ஒவ்வொரு மாதத்திற்கும் 27 நட்சத்திரங்கள் உள்ளது அதில் ஒன்றுதான் அஸ்வினி நட்சத்திரம் அஸ்வினி நட்சத்திரம் அன்று ராகு காலம் எமகண்டம் நேரத்தை தவிர்த்து கௌரி நேரம் அல்லது நல்ல நேரத்தில் விநாயகர் ஆலயத்திற்கு சென்று ஒரே ஒரு பொருளை மட்டும் வாங்கி கொடுக்க வேண்டும் அதுதான் விநாயகருக்கு உகந்த அருகம்புல் அருகம்புல் ஒரு கட்டாக வாங்கிக் கொண்டு போய் விநாயகருக்கு கொடுத்தால் நம் வாழ்க்கையில் முன்னேற்றம் கிடைக்கும் நம் வாழ்க்கையில் என்னவெல்லாம் வேண்டும் என்று நினைக்கிறோமோ அதை எல்லாம் நினைத்துக் கொண்டே அருகம்புல்லை விநாயகருக்கு வாங்கி கொடுக்க வேண்டும் மேலும் அனைவருடைய பெயரிலும் அர்ச்சனை செய்துவிட்டு விநாயகப் பெருமானை வழிப்பட்டு விட்டு வர வேண்டும்.
விநாயகருக்கு நெய்வேத்தியம்
மேலும் விநாயகருக்கு பிடித்தமான நெய்வேத்தியங்களை படைத்து அவருக்கு சில அபிஷேகங்களை செய்து வந்தால் நல்லதே நடக்கும் மேலும் கோவிலில் வரும் பக்தர்களுக்கு உங்களால் முடிந்தவற்றை தானமாக கொடுக்கலாம். விநாயகப் பெருமானுக்கு முழு மனதோடு இந்த ஒரு சிறிய வழிபாட்டை செய்து வந்தால் போதும் நிச்சயமாக உங்களுக்கு வாழ்க்கையில் நல்லதே நடக்கும். இந்த வழிபாட்டை நீங்கள் என்று வேண்டுமானாலும் செய்யலாம்.
இதனையும் படியுங்கள் : விநாயகர் சிலையை வீட்டில் வைத்து வழிபட நினைப்பவர்கள் அவசியம் கடைபிடிக்க வேண்டிய விதிமுறை..!