கோடை வெயிலுக்கு சூப்பரான தர்பூசணி பழம் குல்பி ஐஸ் இப்படி செஞ்சி பாருங்கள்!

- Advertisement -

குல்பி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு சுவையான உணவு வகை. வெயில் காலங்களில் வீட்டு வாசலில் மணி அடித்துக் கொண்டு வரும் குல்பிகாரரிடம் குல்பி வாங்கி சாப்பிடுவது, நம் குழந்தை பருவத்தில் யாராலும் மறக்கவே முடியாத இனிமையான நினைவுகள். சுவையான குல்பி, பால், சர்க்கரை, பாதாம், பிஸ்தா போன்றவற்றை பயன்படுத்தி மிகவும் சுலபமான முறையில் வீட்டிலேயே செய்யலாம். இதனை வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து மிகவும் சுலபமான முறையில் வீட்டிலேயே செய்யலாம். கடைகளில் வாங்குவதை காட்டிலும் சுவையாகவும் அதே சமயத்தில் ஆரோக்கியமாகவும் இருக்கும். சுவையான குல்பியை நீங்களும் செய்து சுவைத்து மகிழுங்கள். இதனை அதிகபட்சமாக 30 முதல் 40 நிமிடங்களுக்குள்ளாகவே செய்யலாம் இரவில் செய்து ஃப்ரிட்ஜில் வைத்தால் காலையில் சுவையான குல்பி தயாராகிவிடும்.

-விளம்பரம்-

கோடைக்காலம் ஆரம்பிக்க உள்ள நிலையில் ஆங்காங்கு தர்பூசணி விற்கப்படுவதைக் காணலாம். குழந்தைகளுக்கு தர்பூசணி என்றால் மிகவும் பிடிக்கும். அத்தகைய குழந்தைகளுக்கு தர்பூசணியைக் கொண்டு ஒரு வித்தியாசமான ஒரு ரெசிபி செய்து கொடுக்க ஆசைப்படுகிறீர்களா? அப்படியெனில் அருமையான முறையில் ஒரு குல்பி செய்து கொடுக்கலாமே!வெயிலில் இருந்து தப்பிக்க ஜூஸ், தயிர், மோர் வகைகளை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும். கோடை காலம் ஆரம்பித்து விட்டால் ஜில்லென ஏதாவது சாப்பிட விரும்புவோம். அந்த வகையில் கோடை காலத்துக்கு இதமா தர்பூசணி குல்பி செய்வது குறித்து இங்கு பார்ப்போம். இந்த தர்பூசணி குல்பி செய்வது மிகவும் சுலபம். கோடைக்காலத்தில் கடைகளில் விற்கப்படும் ஐஸ்கிரீம்களை வாங்கி கொடுப்பதற்கு பதிலாக, வீட்டிலேயே குல்பியை செய்து கொடுத்து மகிழுங்கள்.

- Advertisement -
Print
2 from 2 votes

தர்பூசணி குல்பி | Watermelon Kulfi Recipe In Tamil

குல்பி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு சுவையான உணவு வகை. வெயில் காலங்களில் வீட்டு வாசலில் மணி அடித்துக் கொண்டு வரும் குல்பிகாரரிடம் குல்பி வாங்கி சாப்பிடுவது, நம் குழந்தை பருவத்தில் யாராலும் மறக்கவே முடியாத இனிமையான நினைவுகள். சுவையான குல்பி, பால், சர்க்கரை, பாதாம், பிஸ்தா போன்றவற்றை பயன்படுத்தி மிகவும் சுலபமான முறையில் வீட்டிலேயே செய்யலாம். இதனை வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து மிகவும் சுலபமான முறையில் வீட்டிலேயே செய்யலாம். கடைகளில் வாங்குவதை காட்டிலும் சுவையாகவும் அதே சமயத்தில் ஆரோக்கியமாகவும் இருக்கும். சுவையான குல்பியை நீங்களும் செய்து சுவைத்து மகிழுங்கள்.
Prep Time10 minutes
Active Time10 minutes
Total Time20 minutes
Course: Dessert
Cuisine: Indian
Keyword: watermelon kulfi
Yield: 3 People
Calories: 46kcal

Equipment

  • 1 பவுள்
  • 1 மிக்ஸி
  • 3 டம்ளர்

தேவையான பொருட்கள்

  • 1/2 தர்பூசணி
  • 1/2 லி பால்
  • 1/2 கப் சர்க்கரை
  • 1 டேபிள் ஸ்பூன் சோள மாவு
  • 2 டேபிள் ஸ்பூன் நறுக்கிய பாதாம், முந்திரி
  • 2 டீஸ்பூன் ஏலக்காய் தூள்
  • 3 ஐஸ்கிரீம் குச்சி

செய்முறை

  • முதலில் ஒரு பால் பாத்திரத்தை அடுப்பில் வைத்து பாலை ஊற்றி பாதியளவு குறையும் வரை தண்ணீர் விடாமல் நன்கு காய்ச்சவும்.
  • பின் ஒரு பவுளில் சோள மாவு மற்றும் தண்ணீர் சேர்த்து நன்கு கட்டியில்லாமல் கரைத்து, ஊற்றி கைவிடாமல் நன்கு கலந்து விடவும்.
  • பால் சிறிது கெட்டியானதும், ஏலக்காய்த்தூள், சர்க்கரை சேர்த்து கொதித்ததும் அடுப்பை அணைத்து விடவும்.
  • தர்பூசணியை நன்கு கழுவி தோல் சீவி சற்று பெரிய துண்டுகளாக நறுக்கி, ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்கு மைய அரைத்துக் கொள்ளவும்.
  • பின் தர்பூசணியுடன் பாலை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து நன்கு அரைத்து ஒரு பவுளுக்கு மாற்றவும்.
  • அதன்பிறகு அதன் மேல் நறுக்கின முந்திரி, பாதாம் போட்டு நன்கு கலந்து டம்ளர்களில் 3 ஊற்றி நடுவில் ஐஸ்கிரீம் குச்சிகளை வைத்து பிரிட்ஜில் இரவு முழுவதும் வைத்து விடவும். அவ்வளவுதான் சுவையான, சுலபமான மற்றும் வித்தியாசமான தர்பூசணி குல்பி தயார்.

Nutrition

Serving: 300g | Calories: 46kcal | Carbohydrates: 1.2g | Protein: 9g | Fat: 2g | Sodium: 99mg | Potassium: 648mg | Fiber: 1.6g | Sugar: 1.5g | Vitamin C: 14mg | Calcium: 54mg | Iron: 2.4mg

இதனையும் படியுங்கள் : குக் வித் கோமாளி தர்பூசணி துளசி ரசம் இப்படி செய்து பாருங்க! புது விதமான சுவையில்!