நவராத்திரி விழா என்பது இந்துக்களில் மிக முக்கியமான பண்டிகையாகும். சக்தியின் ஆற்றல் பூமியில் அதிகரித்து காணப்படும் இந்த ஒன்பது நாட்களும் அம்பிகையை மனதார வெளியிடுவதால் அம்பிகையின் அருளால் வேண்டிய வரங்கள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. நவராத்திரி பண்டிகையின் முக்கிய நோக்கமே, நாம் எல்லோரும் ஒன்றே, அனைத்தும் இறைசக்தியின் வடிவமே என்று உணர்த்துவது தான். நவராத்திரி நன்னாளில் துர்க்கையான பார்வதியை முதல் 3 நாட்களும், அடுத்து லட்சுமியை 3 நாட்களும், இறுதி 3 நாட்கள் சரஸ்வதியையும் 10-வது நாள் விஜய சாமுண்டீஸ்வரியாக வணங்க வேண்டும். இந்த நாட்களில் முப்பெரும் தேவியரை வழிபட்டால் ஒப்பற்ற வாழ்க்கை அமையப்பெறும் என்பது நம்பிக்கை. அப்படி நவராத்திரி நாட்களில் வழிபாடு செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் எப்படி வழிபாட வேண்டும் என்பது குறித்து இந்த ஆன்மிகப் பதிவில் பார்ப்போம்.

நவராத்திரி 2025
நவராத்திரி என்பது தாய் மகிஷாசுரனுடன் எட்டு நாட்கள் போர் புரிந்து ஒன்பதாவது நாள் வெற்றி பெறுகிறார். பத்தாவது நாள் தாயின் வெற்றியை தேவர்கள் கொண்டாடுகிறார்கள். இப்படி அம்பிகை மகிஷாசுரடன் எட்டு நாளில் போர் புரிந்து ஒன்பதாவது நாள் வெற்றி பெறுவதை நவராத்திரி என்று அழைக்கின்றார்கள். இந்த ஆண்டு நவராத்திரி பண்டிகை செப்டம்பர் 22ம் தேதி துவங்கி, அக்டோபர் 02ம் தேதி விஜயதசமியும் நிறைவடைகிறது. இந்த நவராத்திரியின் ஒன்பது நாட்களும் காலை மாலை பூஜை செய்ய வேண்டும். குறிப்பாக காலை 10.30-12.00 மணி வரையும், மாலை 6 மணி முதல் 9:00 மணிக்குள் வணங்க வேண்டும். பூஜை செய்யும் நேரத்தில் ராகு காலம், எமகண்டம் இல்லாமல் பார்த்துக் கொண்டு பூஜையை துவங்குவது நல்லது.
நவராத்திரி வழிபாட்டு முறை
நவராத்திரியை கொண்டாடுவதற்கு வழிமுறைகள் பல இருக்கின்றன. அதில் முதலாவது கொலு வைக்கும் பழக்கம். ஆனால் ஒருமுறை நாம் கொலு வைத்து விட்டோம் என்றால் இறுதிவரை கொலு வைத்து கொண்டாட வேண்டும். கொலு வைப்பவர்கள் கொலுவை கிழக்கு அல்லது வடக்கு நோக்கி வைக்க வேண்டும். கொலு வைப்பதன் சூட்சுமம் என்னவென்றால் இவ்வுலகில் உள்ள உயிர்கள் எல்லாம் இறைவனுக்கு கீழே என்பதை உணர்த்துவதற்காக வைக்கப்படுவது தான். நவராத்திரி கொலு படிகளை ஐந்து, ஏழு, ஒன்பது என்ற ஒற்றைப் படை வரிசையில் அமைக்க வேண்டும்.
இரண்டாவதாக கொலு வைத்து வழிபட முடியாதவர்கள் பூஜைகள் ஒரு கலசத்தை வைத்து தாயை கலசத்தில் ஆவாகனம் செய்ய வேண்டும். ஒன்பது நாட்களும் கலசத்தில் உள்ள தாய்க்கு பூஜை செய்து நைவேத்தியம் படைத்து வழிபட்டு வர வேண்டும்.
மூன்றாவது பூஜையறையில் அன்னையின் முன் அகண்ட தீபம் ஏற்றி அணையா விளக்காக ஒன்பது நாட்களும் தாயை தீபத்தில் ஆவாகனம் பண்ணி பூஜை செய்து வர வேண்டும்.
நான்காவதாக நவராத்திரி நன்னாளில் நம்முடைய வீட்டிற்கு வரும் பெண்கள், குழந்தைகளுக்கு மஞ்சள், குங்குமம், பூ போன்ற மங்கல பொருட்கள் கொடுக்க வேண்டும். நவராத்திரி தினத்தில் நம்முடைய இல்லத்திற்கு வருபவர் யாராக இருந்தாலும் அவரை அம்பிகையாக பாவித்து அவருக்கு ஏதாவது ஒரு பரிசு பொருளை கொடுத்து மகிழ்விக்க வேண்டும்.
இவை எதையும் செய்ய இயலாதவர்கள் இறுதியாக வீட்டில் உள்ள ஏதோ ஒரு அம்பிகையின் படத்திற்கு காலௌ மாலை என இரு வேளையும் பூஜை செய்து நமக்கு தெரிந்த ஒரு பாடலை பாராயணம் செய்து பூஜித்து தாயின் அருளைப் பெறலாம். மேலும் எதிர்மறையான விளைவுகள் எதுவும் அண்டாது. கடன் தொல்லைகள் நீங்கும். ஆயுளும் செல்வமும் விருத்தி அடையும், திருமணம் தடை நீங்கும், குழந்தை பாக்கியம் ஆகியவை நிறைவேறும்.
இதனையும் படியுங்கள் : நவராத்திரியில் வீட்டில் இப்படி கொலு வைத்தால் அம்பிகை வீட்டில் நிரத்தரமாம குடியேறுவாள்!


