வாராந்திர ராசிபலன் 23 செப்டம்பர் 2024 முதல் – 29 செப்டம்பர் 2024 வரை!

- Advertisement -

மேஷம்

இந்த வாரம் பிறருடன் கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கக்கூடும், வாரத்தின் நடுப்பகுதியில் சிக்கலில் இருந்து விடுபடும் வாய்ப்புகள் வரும். வருமானம் குறைவாக இருக்கும் ஆனால் செலவுகள் அதிகரிக்கும். முயற்சியின் பலனாக தொழில் முன்னேற்றகரமாக நடக்கும். வியாபாரத்தை விரிவு படுத்துவீர்கள். நண்பர்கள் மூலமாக வில்லங்கம் வீடு தேடி வரும். அரசு ஊழியர்களுக்கு வேலை மாறுதல் உண்டாகும். கமிஷன் வியாபாரங்கள் கை நிறைய காசு பணத்தை கொண்டு வரும்.

-விளம்பரம்-

ரிஷபம்

விளையாட்டுத்துறையில் ஈடுபட்டிருப்பவர்கள் கவனமாக இருக்கவும். குடும்பத்தில் மூத்தவர்களின் அறிவுரைகளை கேட்டு நடப்பது நல்லது. குடும்பத்தினர் ஊக்கம் கொடுப்பார்கள். தொழில் முன்னேற்றமாக இருக்கும். நண்பர்கள் உதவி செய்வார்கள். குடும்பத்தில் மருத்துவச் செலவுகள் வரலாம். அக்கறையுடன் அரசு ஊழியர்கள் வேலை பார்க்க வேண்டும். மேல் அதிகாரிகளின் கோபப்பார்வை சங்கடப்படுத்தும். நீண்ட காலமாக மனதில் இருந்த ஆசை நிறைவேறும்.

- Advertisement -

மிதுனம்

வீட்டிற்கு புதிய பொருட்களை வாங்கலாம். மிதுன ராசிக்காரர்களுக்கு வரும் வாரத்தின் நடுப்பகுதியில் மேலதிகாரியுடன் வாக்குவாதம் ஏற்படலாம். பணம் கொடுக்கல் வாங்கலில் பக்குவமாக நடந்து கொள்ளுங்கள். முக்கியமான சில வேலைகள் காலதாமதம் ஆவதால் கவலை உண்டாகும். திடீர் செலவுகள் ஏற்பட்டு திணறடிக்கும். வியாபாரம் சற்று மந்தமாக இருக்கும். கொடுத்த பணத்தை திரும்ப வாங்குவதில் சிக்கல் உண்டாக்கும். பெரியோர்களின் சந்திப்பு தொழிலுக்கு உதவியாக இருக்கும்.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு வியாபாரத்திற்கு சாதகமாக வாரம் இது. வார இறுதியில் திடீர் செலவுகள் அதிகரிக்கும். எதிரிகள் பொறாமைப்படும் அளவுக்கு தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். பயத்தோடு செய்கின்ற காரியங்களில் கூட நல்ல பலன் கிடைக்கும். புதிய நண்பர்களால் ஆதாயம் கிடைக்கும். கவனமுடன் செய்யும் வேலைக்கு கணிசமான பலன் உண்டாகும். வழக்குகள் சாதகமாக முடியும். எதிர்காலத்திற்காக திட்டமிட்டு பணத்தை சேமிப்பீர்கள்.

சிம்மம்

மகிழ்ச்சியான செய்திகள் வருவதால், சிம்ம ராசிக்காரர்களின் குடும்பத்தில் கலகலப்பு அதிகரிக்கும். எதிர்பார்த்த செய்திகள் வந்து சேரும். நீண்ட நாளாக தொல்லை கொடுத்த நோய் தொந்தரவு விலகும். மூக்குக்கு மேல் இருக்கும் கோபத்தை விலக்கி வையுங்கள். இல்லையென்றால் நல்ல மனிதர்களின் விரோதம் ஏற்படலாம். வியாபாரத்திற்கு பணம் போடலாமா வேண்டாமா என்ற மன குழப்பம் நிலவும். அரசு அதிகாரிகளின் பகை உண்டாகும்.

-விளம்பரம்-

கன்னி

தந்தையின் உடல்நிலை மோசமடையலாம். வாரத்தின் கடைசி நாட்களில் காதல் வாழ்க்கையில் பிரச்சனை வரலாம். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். தள்ளிப்போன சுப காரியம் சொல்லி வைத்த மாதிரி நடக்கும். தாய் தந்தையருக்கு மருத்துவச் செலவு ஏற்படலாம். எதிரிகளின் சூழ்ச்சியால் தொழில் பிரச்சனை உண்டாகும். தொழில் துறையில் சின்ன சின்ன தடங்கல் ஏற்படும். நல்ல நண்பர்கள் கூட சில நேரங்களில் விரோதியாக மாறுவார்கள். மறைமுக எதிர்ப்புகள் தோன்றி மறையும்.

துலாம்

ஆக்கப்பூர்வமான சிந்தனையுடன் வேலையை சில புதிய வழியில் முன்னோக்கி கொண்டு செல்ல முயற்சிப்பீர்கள், அது வெற்றிகரமாக இருக்கும். வீட்டிலும் வெளியிலும் சில எதிர்ப்புகள் தோன்றும். துணிவுடன் இறங்கி சில நல்ல காரியங்களை செய்வீர்கள். மண வாழ்க்கை அமையவில்லை என்று ஏக்கத்தில் இருந்தவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். அரசாங்க ஒப்பந்தங்கள் போடும்போது ஒரு முறைக்கு இரு முறை சரி பார்த்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு எதிர்ப்பாக இருக்கும் விரோதிகளின் கை ஓங்கும்.

விருச்சிகம்

விருச்சிக ராசியினர் நினைத்த காரியங்கள் சட்டென்று முடியாமல் இழுத்துக் கொண்டே போகும். தாழ்வு மனப்பான்மையை விலக்கி வையுங்கள். வாக்கு கொடுத்து நிறைவேற்ற முடியாமல் பழிச் சொல்லுக்கு ஆளாகாதீர்கள். தக்க சமயத்தில் ஆலோசனை கூறி தொழிலில் ஏற்பட்ட சரிவை நண்பர்கள் சரி செய்வார்கள். வேலை இடங்களில் உடன் இருப்பவரின் தொல்லை அதிகரிக்கும். கொடுக்கல் வாங்கலில் கெட்ட பெயர் வராமல் பார்த்துக் கொள்ளுங்கள். பதவி உயர்வு சம்பள உயர்வு கிடைக்கும்.

-விளம்பரம்-

தனுசு

ஆன்மீக சிந்தனைகள் அதிகரிக்கும். தொழில் சார்ந்த வேலைகள் தாமதமாகிக் கொண்டே செல்வது மனதில் கவலைகளை ஏற்படுத்தும் என்றாலும் சில எதிர்பார்ப்புகள் நிறைவேறும். புதிய வீடு கட்டுவதற்காக செலவு செய்வீர்கள். அரசாங்கத்தால் சில தொல்லைகள் உண்டாகலாம். பண வரவு அதிகம் வந்தாலும் அதற்கேற்ற செலவும் உண்டாகும். வெளியூரிலிருந்து நல்ல செய்தி கிடைக்கும். வாகனங்களில் செல்லும்போது எச்சரிக்கையாக இருங்கள். விபத்துகள் நேரக்கூடிய வாய்ப்பு உண்டு.

மகரம்

குடும்பத்தினரின் உண்மையான பாசத்தை உணர்வீர்கள். குடும்பத்தினருடன் அனுசரித்து செல்வதில் தவறில்லை என்ற எண்ணம் உருவாகும். திருமண விஷயங்கள் கை கூடி வரும். பதவி உயர்வும் சம்பள உயர்வும் கிடைக்கும். பிடிவாதமாக காரியம் செய்து எதிர்பாராத வெற்றியை பெறுவீர்கள். தொழிலில் எதிர்பாராத இடையூறுகள் உண்டாகும். ஆன்லைன் வியாபாரங்கள் பயன் தராது. நில விற்பனையில் மந்த போக்கு காணப்படும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு பித்ரு பக்ஷத்தில் வரும் வாரம் மனதில் அமைதி ஏற்படும் வாரமாக அமையும். ஆசைகள் மட்டுப்படும், ஆன்மீகத்தில் நாட்டம் ஏற்படும். நண்பர்கள் உதவி செய்வார்கள். ஆனால் உறவினர்கள் ஆதரவாக இருக்க மாட்டார்கள். புதிய நண்பர்கள் தொழிலுக்கு உதவியாக இருப்பார்கள். வியாபாரம் ஏற்ற இறக்கமாக இருக்கும். புதிய யுக்திகளை கையாண்டு உணவகத் தொழிலில் வெற்றி பெறுவீர்கள். உணவு விஷயத்தில் எச்சரிக்கையாக இருங்கள். வயிற்றுக் கோளாறு ஏற்படலாம்.

மீனம்

மீன ராசிக்காரர்களின் மனதில் ஆசைகள் அதிகரிக்கும். ஆசைக்கான செலவுகளையும் செய்யத் துடிப்பார்கள். விவசாயத் தொழிலை வெற்றிகரமாக நடத்துவீர்கள். ஆடம்பரமான நிகழ்ச்சிகளில் மனம் ஈடுபாடு கொள்ளும். ஆன்மிகப்பெரியவர்களின் சந்திப்பால் மன அமைதி ஏற்படும். அரசாங்க ஊழியர்களுக்கு அனுகூலமான செய்தி கிடைக்கும். உறவினர்களால் பண செலவு உண்டாகும். கணவன் மனைவி உறவு ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும். சிறு வியாபாரிகள் சிரமங்களை சந்திப்பார்கள்.

இதனையும் படியுங்கள் : செப்டம்பர் மாதத்தில் ஏற்படும் சூரிய பெயர்ச்சியினால் இந்த ராசிகளுக்கு பிரச்சினைகள் தான்!