- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- snacks
கோதுமை மாவு வச்சு நிறைய பேரு இனிப்பு போண்டா செஞ்சு சாப்பிட்டு இருப்பாங்க. ஆனா இன்னைக்கு நம்ம ஒரு சூப்பரான கார கோதுமை போண்டா செய்யப் போறோம் இதுக்கு சைடு டிஷ்ஷா தக்காளி சட்னி வச்சு சாப்பிட்டா அவ்வளவு டேஸ்டா இருக்கும். சுவையான இந்த கோதுமை போண்டா ரெசிபி குழந்தைகளிலிருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருக்கும் ரொம்ப பிடிக்கும் டக்குனு அரைமணி நேரத்துல இந்த ரெசிபியை செஞ்சு முடிச்சிடலாம் இதை காலைல பிரேக்ஃபாஸ்ட் ஆகும் சாப்பிடலாம்.இதுல கோதுமை மாவு தான் நம்ம சேர்த்து இருக்கோம். இல்ல அப்படின்னா இத ஈவினிங் போல ஸ்னாக்ஸ் ஆகவும் சாப்பிடலாம். குழந்தைகள் மாலை நேரத்தில் ஸ்கூல் விட்டு வரும்போது கண்டிப்பா ஏதாவது ஸ்னாக்ஸ் கேட்ட அழுவாங்க அந்த மாதிரி சமயத்துல அவங்களுக்கு ஒரு கப் கோதுமை மாவும் கொஞ்சமா தயிரும் இருந்தா போதும்.
இந்த மாதிரி ஒரு சூப்பரான போண்டா செஞ்சு கொடுத்துடலாம். காலையில நம்ம டிபனுக்கு செஞ்சா தக்காளி சட்னி இருந்தா கூட அதையே வச்சு சாப்பிடலாம் இல்ல நான் டக்குனு பத்து நிமிஷத்துல செய்யக்கூடிய ஒரு தக்காளி சட்னி கூட நம்ம அரைச்சி கொடுக்கலாம். கண்டிப்பா குழந்தைகள் விரும்பி சாப்பிடுவாங்க வீட்டுக்கு யாராவது விருந்தாளிகள் வந்துட்டாங்கனா கூட உங்களுக்கு எப்பவும் ஒரே மாதிரியா பஜ்ஜி, வடைன்னு செஞ்சு கொடுக்காம கோதுமை மாவு இருந்தா இந்த மாதிரி ஒரு தடவை ரெசிப்பி செஞ்சு கொடுங்க. கண்டிப்பா விருந்தாளிகள் டீ காபியோட இந்த ஸ்னாக்ஸை ருசிச்சு சாப்பிட்டு போவாங்க. இந்த ரெசிபி செய்றதுக்கு நமக்கு நான்கு பொருட்கள் மட்டுமே போதுமானது அதை வச்சு ஈஸியா இந்த போண்டா செஞ்சு முடிச்சிடலாம்.
இந்த போண்டா செய்றதுக்கு நமக்கு தயிர் இருந்தா ரொம்ப நல்லது தயிர் ஊத்தி பிசைஞ்சு அரை மணி நேரம் ஊற வைத்து இந்த போண்டா செய்யும் போது போண்டா நல்லா உப்பி பெருசா வரும். இதுக்கு மாவு நம்ம ஊற வைக்காமல் செஞ்சா நல்லாவே இருக்காது அதனால ஊற வைத்து சூடா இருக்கும்போதே மொறு மொறுன்னு இருக்கிற கோதுமை போண்டாவ ரசித்து சாப்பிடுங்க. ஈஸியான இந்த ரெசிபியை கண்டிப்பா உங்க வீட்ல ஒரு தடவ செஞ்சு பாருங்க இன்னைக்கே கூட நீங்க வீட்ல செய்யலாம் ஏன்னா இதுக்கு நம்ம சேர்க்க போற நான்கு பொருட்களுமே நம்ம வீட்டுல அன்றாடம் பயன்படுத்துற பொருட்கள் தான். இப்ப வாங்க இந்த சுவையான ஈஸியான கார கோதுமை போண்டா எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : வாழைப்பழமும், கோதுமை மாவும் இருந்தால் சில நிமிடத்தில் இந்த தோசை தயார்!
Ingredients
Method
ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு தயிர் உப்பு சீரகம் மிளகாய் தூள் மஞ்சள் தூள் அனைத்தும் சேர்த்து தண்ணீர் ஊற்றி கெட்டியாகவும் இல்லாமல் தண்ணீராகவும் இல்லாமல் பிசைந்து கொள்ளவும்.
அரை மணி நேரம் ஊற வைத்து சூடான எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்தால் சுவையான காரகோதுமை போண்டா தயார்.






