பொருளாதாரம் சிறப்பாக விளங்க செய்ய வேண்டிய வழிபாடு!!

- Advertisement -

அனைவரும் மிகவும் கஷ்டப்பட்டு உழைத்த சம்பாதிப்பதற்கான காரணம் பொருளாதார ரீதியாக முன்னேற்றம் உண்டாக வேண்டும் என்பது தான். பொருளாதாரத்தில் முன்னேற்றம் வந்துவிட்டால் நம்முடைய கஷ்டங்கள் அனைத்திலும் விலகிவிடும். பலருக்கும் எவ்வளவு சம்பாதித்தாலும் சம்பாதித்த பணம் பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்கு உதவாமல் இருக்கும் அப்படிப்பட்டவர்கள் ஏற்ற வேண்டிய தீபத்தை பற்றி இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் பார்க்கலாம்.

-விளம்பரம்-

குருபகவான் அருள்

ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்பட வேண்டும் என்றால் குரு பகவான் உடைய அருள் பரிபூரணமாக வேண்டும். ஒருவருடைய ஜாதகத்தில் குருவின் பலம் இருந்தால் அவர்களுக்கு பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். குரு பார்க்க கோடி நன்மை என்று கூறுவார்கள் அப்படி சிறப்பு மிக்க குரு பகவானின் அருளை பெற்று பொருளாதாரத்தில் சிறந்து விளங்குவதற்கு ஒரு எளிமையான வழிபாட்டு முறையை பற்றி பார்க்கலாம்.

- Advertisement -

குரு பகவானுக்கு உகந்த வாழைமரம்

ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒவ்வொரு விதமான மரங்கள் உகந்ததாக திகழும். அந்த வகையில் குரு பகவானுக்கு உகந்த மரமாக திகழுவதுதான் வாழைமரம். யார் ஒருவருடைய வீட்டில் வாழை மரத்தை வைத்து வளர்கிறார்களோ அவர்களுடைய வீட்டில் செல்வ செழிப்பிற்கு எந்தவித குறையும் இருக்காது. இரண்டு வாழை மரங்களை வீட்டில் வைத்து நீர் ஊற்றி வளர்ப்பதன் மூலம் பொருளாதாரமும் வளரும். வீட்டில் இடவசதி இல்லையென்றால் கோவிலுக்கு சென்று கோவிலில் வாழை மரக்கன்றுகளை வைத்த தினமும் தண்ணீர் ஊற்றி வளர்க்கலாம். இப்படி செய்தாலும் குருபகவானின் அருளால் பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். இப்படி வளர்க்கக்கூடிய இந்த வாழை மரத்தின் அடியில் தினமும் காலை மாலை ஒரே ஒரு தீபத்தை ஏற்றி வைத்து ஊதுபத்தி காட்டி வழிபாடு செய்வதால் குருபகவானின் அருள் கிடைக்கும்.

வாழைப்பழ வழிபாடு

இரண்டு வேலை தீபம் ஏற்ற முடியாதவர்கள் ஒருவேளையாவது தீபம் ஏற்றலாம். விடமுங்கேற்ற இயலாதவர்கள் குரு பகவானுக்குரிய கிழமையான வியாழக்கிழமை அன்று மட்டுமாவது விளக்கு ஏற்றி வழிபாடு செய்யலாம். விளக்கு ஏற்றி வழிபாடு செய்ய முடியாதவர்கள் வாழைமரம் வீட்டில் வைக்க முடியாதவர்கள் வியாழக்கிழமை வீட்டு பூஜை அறையில் குரு பகவானே மனதார நினைத்து இரண்டு மஞ்சள் வாழைப்பழத்தை வைத்து வழிபாடு செய்யலாம். இப்படி செய்தால் குரு பகவானின் அருளை பரிபூரணமாக பெற்று வாழ்க்கையில் தொட்ட காரியங்கள் அனைத்தும் சிறப்பாக அமையும்.

இதனையும் படியுங்கள் : குரு பெயர்ச்சி – 2025 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ!!

-விளம்பரம்-