- Prep
- 10 min
- Cook
- 30 min
- Total
- 40 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- Breakfast, LUNCH
எப்பொழுதும் போல் வாரக் கடைசி நாட்களில் மட்டனை பயன்படுத்தி குழம்பு, கிரேவி என ஒரே மாதிரியான ரெசிபிகளை செய்து சாப்பிடுவதற்கு பதில் ஒரு முறை இந்த யாழ்ப்பாணம் ஆட்டு இறைச்சி கறியை செய்து பாருங்கள் அவர்களுக்கும் ஒரு மாறுதலாக இருக்கும். உங்கள் வீட்டில் உள்ள சிறியவர்கள் முதல் பெரியவர்கள் அரை அனைவருக்கும் மிகவும் பிடித்த ஒரு மட்டன் ரெசிபியாக இது மாறிவிடும்.
இதையும் படியுங்கள் : காரசாரமான யாழ்பாணம் சிக்கன் ரெசிபி செய்வது எப்படி ?
அதனால் இது போன்ற உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு ஒரு முறை செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள் அந்த அளவிற்கு அட்டகாசமான சுவையில் இருக்கும் மீண்டும் மீண்டும் சுவைக்கத் தூண்டும் வகையில் இருக்கும். அதனால் இன்று இந்த சுவையான யாழ்ப்பாணம் ஆட்டு இறைச்சி கறி எப்படி செய்வது, தேவையான பொருட்கள் செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.
Ingredients
Method
முதலில் ஆட்டிறைச்சியை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும். பிறகு அதில் உப்பு, கறிமிளகாய் தூள் சேர்த்து கலந்து வைக்கவும்.
அடுத்து ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் கடுகு போட்டு வெடித்ததும், பெருஞ்சசீரகம் ,வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக சிவந்ததும் பூண்டு சேர்த்து வதக்கவும். பிறகு வெட்டி வைத்த வெண்டைக்காய், பச்சை மிளகாய், போன்ற்வற்றை சேர்த்து நன்றாக வதக்கவும்.
வெங்காயம் சிவந்து வதங்கி வரும்போது, கலந்து வைத்த ஆட்டிறைச்சியை சேர்த்து நன்றாக வதக்கி கலவையுடன் பிரட்டி மூடி போட்டு வேக விடவும்.
இறைச்சியில் இருக்கும் தண்ணீரிலும், சட்டியில் உள்ள எண்ணெயிலும் அவிந்து பொரிய விடவும். இறைச்சி முக்கால் பதம் வெந்ததும், தேவையான அளவு மிளகாய் தூள், சேர்த்து வெட்டிய உருளை கிழங்கையும் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி மூடி போட்டு கொதிக்க விடவும்.
நன்றாக வெந்ததும் குறைந்த தீயில் வைத்து நீர் வற்றும் வரை பிரட்டவும். பிறகு கருவேப்பிலை சேர்த்து இறக்கவும்.
இப்பொழுது சுவையான ஆட்டிறைச்சி தயார்.






