ஜோதிடத்தின் படி, சூரிய பகவான் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு 28 நாட்களில் இருந்து 30 நாட்களுக்குள் பெயர்ச்சியாகிறது. இந்த சூரியனின் பெயர்ச்ச்சியின்போது சில கிரகங்கள் சூரியனுடன் சேர்ந்தும், சில கிரகங்கள் சூரியனிடம் இருந்து விலகியும் நேர்மறையாகவும் எதிர்மறையாகவும் விளைவுகளை உண்டு செய்கின்றன. அந்த வகையில் வேத ஜோதிடத்தில் எதிரி கிரகங்களாக கருதப்படும் சூரியன் மற்றும் கேது கிரகத்தின் இணைவு வரும் ஆகஸ்ட் 17, 2025 அன்று நிகழ்கிறது. கிட்டத்தட்ட 18 ஆண்டுகளுக்கு பின்னர் நடக்கும் இந்த அரிய கிரக நிலை மாற்றம் குறிப்பிட்ட சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை உண்டாக்கும். இந்த இரண்டு பெரிய கிரகங்களின் சேர்க்கை சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தை உறுதி செய்கிறது. சூரியன் மற்றும் கேதுவின் சேர்க்கையால் அதிர்ஷ்டமடையப்போகும் ராசி்காரர்கள் யார் என்று இந்த ஆன்மிகப் பதிவில் பார்ப்போம்.
மேஷம்

வாழ்க்கையில் சந்தோஷத்திற்கும் மகிழ்ச்சிக்கும் குறைவிருக்காது. முன்னேற்றத்திற்கான புதிய பாதைகள் உங்களுக்கு திறக்கப்படும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் கைகூடும் வாய்ப்பு உண்டு. காதல் வாழ்க்கையில் எதிர்பார்த்த மாற்றங்களை கொண்டு வரும். முன்னர் இருந்ததை காட்டிலும் தற்போது வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். கல்வியில் சிறந்த விளங்கும் ஒரு காலமாக இது அமையும். மனைவியுடன் தரமான நேரத்தை செலவிடுவீர்கள். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.
சிம்மம்

சூரியன் கேதுவின் சேர்க்கையினால் மன உறுதி அதிகரிக்கும். திறமைக்கான அங்கீகாரத்தை பெறுவீர்கள். நிதி நன்மைகள் பொருளாதார நிலையை உயர்த்தும். முன்னேற்றத்தில் நீங்கள் எதிர்கொள்ளும் தடைகள் எதுவாக இருந்தாலும், அதை இப்போது அகற்றலாம். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். சமூகத்தில் கௌரவம் அதிகரிக்கும். உங்கள் நிதி நிலை நன்றாக இருக்கும். பணம் சம்பாதிக்க புதிய வாய்ப்புகள் வரும். குடும்ப உறவுகளுடன் ஆன்மீக பயணங்களை மேற்கொள்வீர்கள்.
துலாம்

வேலையில் தொழிலில் நிலைமை மிகவும் சாதகமாக இருக்கும். நீண்ட காலமாக வாட்டி வந்த பிரச்சனைகள் தீரும். தடைகள் நீங்கி உங்கள் முயற்சிகள் வேகம் எடுக்கும். தொழில் வாழ்க்கையில் நீண்ட நாட்களாக நீடித்து வந்த தடைகள் முடிவுக்கு வரும். நீண்ட நாட்களாக இருக்கும் கெட்ட பெயர்கள் நீங்கி, நல்ல மதிப்பு உண்டாகும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பணம் திரும்ப கிடைக்கும். ஆன்மிகத்தின் மீதான நாட்டமும் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்கள் ஒருவருக்கொருவர் ஆதரவாக இருப்பார்கள்.
விருச்சிகம்

அலுவலகத்தில் சமூகத்தில் நற்பெயரும் மதிப்பும் அதிகரிக்கும். உங்களிடம் கொடுக்கப்பட்ட வேலைகளை, திறமையாக செய்து முடித்து முடித்து பாராட்டை பெறுவீர்கள். சரியான வேலைவாய்ப்பு கிடைக்கும். வணிகம் தொடர்பிலான வருமானங்கள் அதிகமாக இருக்கும். அனைவர் மத்தியிலும் உங்கள் மரியாதை அதிகரிக்கும். சமூகத்தில் உங்களின் மதிப்பும் மரியாதையும் கூடும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பணிகள் முடிவடையும். கடனில் இருந்து விடுபடலாம். குடும்ப வாழ்க்கையில், மகிழ்ச்சியான சூழ்நிலை இருக்கும்.
மகரம்

வருமானம் அதிகரிக்கும். புதிய பொறுப்புகள் வந்து சேரும். இது வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு உதவும். அலுவலகத்தில் உங்கள் செயல் திறன் பாராட்டப்படும். அரசு பணிக்காக காத்திருக்கும் நபர்களுக்கு அரசு பணி கிடைக்கும். திருமண தடை நீங்கி விரைவில் திருமணம் முடியும். குடும்ப உறவுகள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். வெளிநாடு சென்று வர வாய்ப்பு கிடைக்கும். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள பணிகள் அனைத்தும் இப்போது முடிக்கப்படும். மேலதிகாரிகளும், சக ஊழியர்களும் உங்கள் பணியால் மகிழ்ச்சி அடைவார்கள்.
இதனையும் படியுங்கள் : குரு பெயர்ச்சியால் வெற்றியை பெறப்போகும் சில ராசிகள்!!


