ஜோதிடத்தில் மிக முக்கியமான கிரகங்களில் ஒன்றான குரு. குரு பகவான் அறிவு, ஆன்மீகம், அறநெறி, அதிர்ஷ்டம், வளர்ச்சி, புத்திர பாக்கியம், செல்வம், கல்வி, நீதி மற்றும் தெய்வீக அருள் ஆகியவற்றின் காரணியாகக் கருதப்படுகிறார். ஒருவரது ஜாதகத்தில் குரு பகவான் வலுவாக இருந்தால், அவர்கள் வாழ்க்கையில் போராட்டங்களைச் சந்தித்தாலும், சரியான வழிகாட்டுதலையும், புதிய வாய்ப்புகளை பெற்று வெற்றி பெறுவார்கள். அந்த வகையில் இந்த ஆண்டு, குரு பகவான் வருகிற மார்ச் 11 ஆம் தேதி வக்ர நிவர்த்தி அடைந்து நேரடியாக பயணிப்பார், இதனால் சில ராசிக்காரர்கள் செல்வ, செழிப்புடன், மரியாதையை பெறுவார்கள். இந்த ஆண்டு மிதுன ராசியில் குரு பெயர்ச்சி மற்றும் நேரடி இயக்கத்தால் எந்த ராசிக்காரர்கள் அதிக நன்மைகளைப் பெறுவார்கள் என்பதை தெரிந்துக்கொள்வோம்.
மேஷம்

மேஷம் ராசிக்காரர்கள் நிதி ஆதாயத்திற்கான வாய்ப்புகளை பெறலாம், ஜூலை அல்லது ஜூன் மாதங்களில் உங்கள் பேச்சிற்கு மதிப்பு கூடும். குடும்பத்தில் சுப நிகழ்வுகள் நடக்கும். நீண்ட நாள் ஆசைகள் மற்றும் திட்டங்கள் நிறைவேறும். உங்கள் வாழ்க்கையை முன்னேற்றுவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். புதிய வருமான வாய்ப்புகள் உருவாகும். முதலீடுகளில் லாபம் கிடைக்கும். திருமணத் தடைகள் நீங்கி நல்ல வரன் அமையும். புதிய தொழில் தொடங்க இது சரியான நேரம்.
மிதுனம்

குருவின் வக்ர நிவர்த்தி பெயர்ச்சி மிதுன ராசிக்காரர்களுக்கு மிகவும் நல்ல பலனைத் தரும். உங்கள் நம்பிக்கையும் உற்சாகமும் அதிகரிக்கும், சேமிப்பும் அதிகரிக்கும், உறவுகள் வலுவடையும். மாணவர்கள் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெறுவார்கள். குடும்பத்தில் இருந்த சண்டைகள் மறைந்து ஒற்றுமை பிறக்கும். சுப நிகழ்ச்சிகள் நடக்கும். அரசு வேலை கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டு. ஆரோக்கியம் சிறப்பாக மாறும்.
சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு சூரியனின் சக்தியால் மாற்றங்கள் ஏற்படும். உங்களுக்கு பணம் மற்றும் பதவி உயர்வு கிடைக்கும். சிம்ம ராசிக்காரர்களுக்கு, குருவின் வக்ர நிவர்த்தியால் நன்மைகள் உண்டாகும். கடந்த சில மாதங்களாக இருந்த குழப்பங்கள் நீங்கும். புதிய வருமான வாய்ப்புகள் உருவாகும். முதலீடுகள் மூலம் லாபம் கிடைக்கும். வங்கி இருப்பு வேகமாக உயரும். போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வருபவர்கள் மகத்தான வெற்றியைப் பெறுவார்கள்.
மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு, 8வது வீட்டில் குருவின் நிலை திருமணம், வணிக இணைப்புகள் மற்றும் முதலீடுகளிலிருந்து வருமானத்தைத் தரும். இந்த ராசிக்காரர்கள் இந்த நேரத்தில் கூட்டாண்மை மூலம் வியாபாரத்திலும் பயனடைவார்கள். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடியும். நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். மூத்த சகோதரர்களின் உதவி கிடைக்கும். கூட்டுத்தொழில் செய்து வருபவர்களுக்கு கூட்டாளிகளுடன் இருந்த மனக்கசப்பு நீங்கி தொழில் விரிவடையும்.
இதனையும் படியுங்கள் : 2026ம் ஆண்டு மிதுனத்தில் உருவாகும் கஜகேசரி யோகம் இனி இந்த மூன்று ராசிகளுக்கு கொண்டாட்டம் தான்!!


